இலங்கையின் தனியார்துறை முதலீடு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்த நிலையில் நாட்டின் மிக பெரிய அந்நிய நேரடி முதலீட்டு பங்குதாரான மலேஷியா வலுவான வர்த்தகத்தினூடான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புகளுக்கான அழைப்பினை இலங்கைக்கு விடுத்துள்ளனர்.
இலங்கையில் வலுவான பொருளாதார முன்னேற்றம் காணப்படுகின்றது. வர்த்தகத்தினூடான வர்த்தக மற்றும் முதலீட்டு நிலைகளில் நெருக்கமான ஒத்துழைப்பனை நாம் பார்க்க விரும்புகிறேன். அனைத்து முதலீட்டு துறைகளில் முழுமையான பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு வலுவான வர்த்தக பிரதிநிதிகள் மலேஷியாவுக்கு தேவைபடுகின்றது.
மலேஷியா நாட்டின் சிலாங்கூரைச் சார்ந்த சட்டத்தரணியும் மலேஷியா -இலங்கை கூட்டமைப்பின் தலைவருமான குலசேகரன் சபாரட்ணம் தெரிவித்தார்.
வலுவான ஐந்து மலேசிய வர்த்தக நிறுவனங்கினை தலைமைதாங்கி 28 வர்த்தக குழு உறுப்பினர்களுடன் 6 நாள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள சபாரத்தினத்தினம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ மரியாதை அழைப்பினை ஏற்று , மார்ச் 26 திகதியன்று கொழும்பு ஏற்றுமதி அபிவிருத்தி சபையில் வைத்து அமைச்சர் ரிஷாடினை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.