BY KRISHNI IFHAM

நான் ஒத்த சதத்தேனும் கொடுக்கவும் மாட்டேன் நீதிமன்றத்துக்கு வரவும்மாட்டேன். அமைச்சர் ரிஷாட் மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன ஒன்றொன்றாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன் என்றும் சவால் விடுத்துள்ளார் பொதுபலசேனாவின் செயலாளர்.
ஆயிரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தலும் நான் தயங்கமாட்டேன்! நிரூபியுங்கள் .நாமும் பொருத்திருந்து பார்ப்போம், என்ன நடக்கின்றது என்று! எனினும் நான் சும்மா விடப்போவதில்லை. முடியும் பட்சத்தில் நீதிமன்றமும் செல்லத் தயார். ஏற்கனவே பொதுபலசேனாவுக்கு இரண்டு வார காலங்கள் அவகாசம் கொடுத்துள்ளேன.;
ஒற்றுமையாக இருக்கின்ற சமூகங்களுக்கிடையில் குழப்பத்தை உருவாக்கி, நிம்மதியற்ற நிலையை தோற்றுவிக்க பொதுபல சேனா முனைகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாகியிருந்த குழப்ப நிலையிலும் பார்க்க இன்றைய இந்த குழப்ப நிலை மிகவும் மோசமானது. குறிப்பாக பொதுபலசேனாவின் செயற்பாடுகளினால் மனம் வேதனையடைய வேண்டியிருக்கிறது. இவர்களின் செயற்பாட்டினால் சமூகங்களுக்கிடையில் பிளவு ஏற்பட்டு விடுமோவென அச்சமடைய வேண்டியுள்ளது.
· வில்பத்து வனப்பிரதேசத்தை அழித்தல்
· வில்பத்து தொடக்கம் மன்னார் வரை முழுமையான முஸ்லிம் வலயமொன்றை உருவாக்குதல்
· மன்னார் முதல் வில்பத்து வரை அராபிய இராஜ்ஜியத்தை(கொலனி) உருவாக்குதல்
· முஸ்லிம்களுக்காக வடக்கில் வீடமைப்புக்களை அமைத்து இலங்கையை ஆக்கிரமிப்புச் செய்தல்
போன்ற நான்கு குற்றச்சாட்டுக்களை பொதுபலசேனா முன்வைத்துள்ளது. இது மிகவும் நகைச்சுவைக்குரிய விடயம்.காடுகளை அபகரித்து, முஸ்லிம்களை குடியேற்றவேண்டிய தேவை எமக்கில்லை. அவர்களின்; பூர்வீகக் குடிமனைகள் சிதைந்து காடுகளாக இருக்கின்றன. அவற்றினைச் சுத்தம் செய்து குடியேற்ற முனைந்தால், அதையும் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர.; என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னிமாவட்;ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
குற்றச்சாட்டு தெரிவிப்போர் வடக்கிற்கு நேரில் வந்து உண்மை நிலைமையை காண வேண்டும் என்றார்.
என்னை தொடர்புபடுத்தி தெரிவிக்கப்பட்ட இந்த தவறான குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன். நான் இன, மத பேதமின்றியே சகலருக்கும் சேவையாற்றுகிறேன். இந்த பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிராக 500 மில்லியன் நஷ்டஈடு கோரி கோரிக்கை கடிதம் ஒன்றை சட்டத்தரணி ஊடாக அனுப்பியுள்ளேன். இதனை நான் பகிரங்கமாக ஊடகவியலாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளேன். இரு வாரங்களுக்குள் இதற்கு தகுந்த பதிலை வழங்காவிட்டால் அமைப்பின் செயலாளருக்கு வழக்கு தொடரப்படும்.
வில்பத்து சரணாலயத்தை அழித்து முஸ்லிம்களுக்கு வீடுகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன்.
இவர்களின் சில காணிகளில் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, சிலவற்றில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மாற்றுக் காணிகளில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர்.
வெளியேற்றப்ட்ட மக்களின் மீள்குடியேற்றம் பற்றி இந்தியாவோ, அமெரிக்காவோ வேறு முஸ்லிம் நாடுகளோ குரல் கொடுக்கவில்லை.
வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களுக்காக அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 400 வீடுகள் கட்டப்படுகின்றன. ஆனால் வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம் கொளனியமைக்கப்படுவதாகவும் முஸ்லிம் வலயம் உருவாக்கப்படுவதாகவும் பொதுபல சேனா அமைப்பும் குற்றஞ்சாட்டியுள்ளது.
பிற மாவட்டங்களில் இருந்து எவரும் குடியேற்றப்படவில்லை வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தவிர எந்தவொரு முஸ்லிமும் வடக்கில் மீள் குடியேற்றப்படவில்லை. அவ்வாறு வெளிநபர்கள் யாராவது மீள் குடியேற்றியதாக நிரூபித்தால் எனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன்
அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன, மத பேதமின்றி சகலருக்கும் சேவையாற்றி வருகிறார். யுத்தத்தினால் அழிவடைந்த விகாரைகள், கோவில்களை மீள நிர்மாணிக்க அவர் உதவி புரிகிறார். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தலைவர் ரிஷாட் பதியுதீன்தான் என வட மாகாண முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அவரால்தான் முடியும். சில அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.
கடந்த தசாப்தங்களாக தமிழ் பேசும் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். எனினும், யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் முழுமையான சமாதானம் எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த இந்த சமூகம் தற்போது தோல்வியை எட்டியுள்ளனர்.
இஸ்லாமியராகிய எமக்கு தற்போது புதிய பிரச்சினை ஒன்றும் பொதுபலசேனா ஊடாக முளைத்திருக்கிறது. முரண்பாடுகள்
மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அடுத்தபடியாக பாதிக்கப்பட்டவர்களில் நாமும் ஒருவர்.
1990 ஆம் ஆண்டு வடபகுதியில் இருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சமூகம் இதுவரை எவ்வித சமாதான முயற்சிகளில் பயன்களினை அடையவில்லை.
நாட்டில் வாழும் சகல இன மக்களும் சம உரிமையுடனும் சம அந்தஸ்துடனும் வாழ வேண்டும் என்தே எனது எதிர்பார்ப்பு.
பொதுபல சேனா அமைப்பு அமைச்சர் மீது ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு தெரிவித்து அவற்றை நாம் அரச தரப்பினராக இருந்தாலும் எமது சமூகத்தினர் பாதிக்கப்படும்பட்சத்தில் அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்துகொண்டே முழுமையான தேவைகளை நிறைவேறறு உள்ளேன்.
இனங்களுக்கிடையேயும் மதங்களுக்கிடையேயும் பிளவுகளை உண்டுபண்ணி ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முனையும் எந்தவொரு தீயசக்தியாக இருந்தாலும் சரி எதிர்ப்பேன் என அமைச்சர் ரிசாத் சூளுரைத்துள்ளார். ஏற்கனவே எமது மதம், கலாச்சாரம் உட்பட உணவு, ஆடை விடயங்களில் அநாவசியமான முறையில் பொதுபலசேனா தலையிட்டு வந்துகொண்டுள்ளனர் எங்களுக்குரிய விடயங்களில் தலையிடும் அதிகாரம் அவர்களுக்கு இல்லை.தற்போது எமது வடமக்களின் நலன்கருதி அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் பட்சத்திலும் அவர்கள் தலையிட்டு அநாவசியமான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கின்றனர்.
இந்து மதமாக இருந்தாலும் சரி முஸ்லீம்; மதமாக இருந்தாலும் சரி பௌத்த மதமாக இருந்தாலும் சரி மதமாக கிருஸ்த்தவ மதமாக இருந்தாலும் சரி எங்கு அவ் மதத்திற்கு எதிராக அநீத நடக்கின்றதோ அங்கு நான் தட்டி கேட்பதற்கு தயங்கமாட்டேன.;
இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கெதிராக பொதுபலசேனாவின் இன்னல்கள் தொடர்ந்த வண்னமே இருந்து வருகின்றன. அது மட்டுமல்லாது சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நட்பினை சீர்குலைக்கும் முயற்சியில்; இவர்கள் செயல்படுகின்றனர்.
நாட்டில் அமைதி நிலவுகின்ற இக்கால கட்டத்தில் இனங்களுக்கிடையே மீண்டும் கலவரத்தை உண்டுபண்ணவென பொதுபல சேன சதிகார தொடர்ச்சியாக பல திட்டங்களை தீட்டி வருகின்றன. தேவையான சந்தர்ப்பத்தில் இது குறித்து நாம் ஜனாதிபதியுடன் தொடர்புகொண்டு மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
எமது நாட்டின் அரசியலமைப்பின்படி எந்தவொரு மதத்தினருக்கும் தமது சமய நடைமுறைகளை சுதந்திரமாக பின்பற்றுவதற்கு அனுமதியுண்டு. அவை ஏதாவது ஒரு வகையில் இன்னுமொரு மதத்தினருக்கு இடைஞ்சலை ஏற்படுத்துமாயின் சட்ட விதிமுறைகளுக்கமைய வழக்கு தொடருங்கள்.
ஒவ்வொரு நாளும் சிங்கள மொழிகளில் வரும் ஊடகங்களில் முஸ்லிம்களது கலை, கலாச்சாரம், மதம் மற்றும் உணவு, ஆடை அவர்களது வர்த்தகம் போன்றவற்றினை விமர்சித்தும் முஸ்லிம்களை இன்னல்களுக்கும் மன உலைச்சலுக்கும் மேற்படி அமைப்புக்கள் தள்ளி வருகின்றன.
இன்று வன்னி மாவட்ட மக்களுக்கு சிறந்த பணிகளை ஆற்றக் கூடிய ஒருவராக அமைச்சர் ரிசாட் பதியுதீன் செயற்படுவதால்,அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டும் தலைவராக அல்லாமல் வன்னி மாவட்டத்தில வாழும்,ஏனைய சமூகங்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தலைவராக மாறியுள்ளார.;
முஸ்லிம்கள் ஒருபோதும் நாட்டுக்கு எதிராக செயற்படவோ துரோகம் செய்யவோ முற்பட்டது கிடையாது எதிர்காலத்திலும் முஸ்லிம்கள் நாட்டுக்கு துரோகம் செய்யப்போவதில்லை.
வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்ற நடிவடிக்கைகள் முழுமை பெறவில்லை. வடக்கில் சட்டபூர்வமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, மீள்குடியேற்றங்களும் செயற்படுத்தப் படுகின்றன. இம் மக்களை மீள்குடியேற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பலர் முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும.; சமாதானத்தின் பலன்கள் முழுமையாக அவர்களை சென்றடையவில்லை. இது சகலருக்கும் சொந்தமான நாடாகும் இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் சம உரிமை உண்டு.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாட்; பதியுதீன் சமூக உணர்வும்,மக்களுக்கு பணியாற்றக் கூடிய எண்ணமும் கொண்டவர்.கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கூடியவர் என தற்போது இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *