உலகின் மூன்றாவது மிக பெரிய சந்தையான ஸ்காண்டிநேவியா சந்தை நுழைவாயில் உட்பிரவேசிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு கிட்டியுள்ளது. இதற்கான அழைப்பு கடந்த 18 ஆம் திகதி நோர்வே குழுவினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. 75 மில்லியனுக்கு குறைவான மக்கள் தொகை கொண்ட மற்றும் குறைந்த நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கான நோர்வேயின் ஜீ.எஸ்.பி. உதவி திட்டத்திற்கான தகுதியினை இலங்கையும் பெற்றுள்ளது. இதன் விளைவாக, இலங்கை இப்போது நோர்வே நாட்டின் நல்ல சந்தை அணுகலை பெறுகிறவுள்ளது என இலங்கைக்கான நோர்வே உயர் ஸ்தானிகர் கிரைட் லொச்ம் அறிவித்தார்.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த 18 ஆம் திகதி ஜீ.எஸ்.பி. திட்டம் மீதான வாதம் தொடர்பிலான கரத்தரங்கில் கலந்துக்கொண்;டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் அமர்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ,ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரி பந்துல ஹேககொட மற்றும் மேல் அதிகாரிகள். மேலும் திருமதி ளுரளயnn Nடைளநnn நோர்வே சுங்க மற்றும் சுங்க கலால் திணைக்கள பணியகத்தின் சிரேஷ்ட ஆலோசகர் திருமதி. சுசான் நில்சன் இஉதவி பணிப்பாளர் திருமதி. சிசிலி ஜி. அல்னஸ், ஆகியோர் கலந்துக்கொண்டனர். அத்துடன் இலங்கையில் முதல் முறையாக நோர்வே சுங்க மற்றும் சுங்க கலால் திணைக்கள பணியகத்தின் அதிகாரிகள் சர்வதேச வர்த்தகம் தொடர்பில் ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் பலதரப்பட்ட பிரச்சினைகளை இங்குள்ள ஏற்றுமதியாளாகள் மத்தியில் தெளிவுபடுத்த வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
நோர்வே உயர் ஸ்தானிகர் கிரைட் லொச்ம் தொடாந்து அங்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கைக்கும் நோர்வைக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக 26மூ,சத வீதம் வலுவான போக்கில் உயர்ந்துள்ளது. உங்கள் உற்பத்திகளுக்கு பல சந்தைகள் மற்றும் புதிய வாய்ப்புகள் நோர்வேயினுடாக கிடைக்கவுள்ளன. நோர்வேயின் இறக்குமதி சந்தை திறன் 100 பில்லியன் அமெரிக்க டொலராக என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக நாடுகளின் தனிநபர் ஒருவருக்கான மூன்றாவது மிக உயர்ந்த தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 55 000 அமெரிக்க டொலரினை கொள்வனவு செய்வதற்கான உயர்ந்த வலுவினைக் கொண்ட சந்தையாக நோர்வே கருதப்படுகிறது.
நோர்வே, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு அல்ல. ஆனால் சுவிச்சர்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டீன் ஆகிய நாடுகளை உள்ளடகிய ஐரோப்பிய சுதந்திர வர்த்தக கூட்டமைப்பின் ஸ்தாபக உறுப்பினர். சுதந்திர வர்த்தக கூட்டமைபின் மூலம் நோர்வே, 25 க்கு மேற்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை அதன் பங்காளிகளுடன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.