இலங்கையின் தொழிற்சாலை உற்பத்தி, ஒரு முக்கியமான தொழில்துறை ஆகும. அதன் வளர்ச்சி , தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2011 ஆம் ஆண்டில் தேசிய தொழிற்சாலை வெளியீடு, 2.4 பில்லியன் அமெரிக்க டொலரினை பதிவு செய்ததோடு அது 2012 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. உள்ளூர் தொழில் துறை மூலம் ஏற்றுமதிக்கு ஒரு வலுவான பங்களிப்பு இருப்பதால், நமது ஒட்டுமொத்த ஏற்றுமதியிலும் வளர்ச்சி போக்கு காணப்படுகின்றது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியதீன் தெரிவித்தார்.
வடமேல் மாகாணத்தின் தொழில்முயற்சி மற்றும் தொழில்துறை க்கு ‘Wayamba Wijayabhimani Viyaparika Vishishtatha’ என்று அழைக்கப்படும் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட்; மேற்கண்வாறு தெரிவித்தார்.
இவ்விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் (08) குருணாகல் மாகாண சபை கேட்போர் கூடத்தில், நடைபெற்றது.
வடமேல் மாகாணம் பொருளாதார வளர்ச்சிக்கு முனைப்போடு பங்களிப்பு வழங்கிவரும் தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறையினரை ஊக்குவித்து மற்றும் வெகுமதி வழங்கி அங்கீகரிக்கப்பட்ட, இவ் விருது வழங்கும் தொடர், தொழில்துறை சேவைகள் பணியகத்தின் தலைமையில் மாகாண சபை ஆதரவுடன் நடைபெற்றது.
ஒழுங்கமைபாளர்களின் தரவுபடி, கைத்தொழில் மற்றும் உற்பத்தி துறை உட்பட பல துறைகளில். குறுகிய, சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் பாரிய நிறுவனங்கள், இந்த மாகாண விருது திட்டத்தில் உள்ளடக்ககிறது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ பாலல்ல, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர், தொழில் சேவைகள் பணியகம தலைவர் ஜயந்த விஜேரத்ன், மற்றும் , தொழில் சேவைகள் பணியகம் தலைமை நிர்வாக அதிகாரி நீலகாந்த் வன்னி நாயக்க மற்றும் விருதுபெறுபவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.