ஈராக் மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு வர்த்தக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டு உச்சத்தையடைதுள்ளது. அடுத்த வாரம் பாக்தாத்தில் நடைபெறவிருக்கும்; மாபெரும் கூட்டு வர்த்தக நிகழ்வில் ஈராக்கும் இலங்கையும் ஒரு புதிய சாதனையினை நோக்கி நகரவுள்ளனர். ஒபெக்கின் இரண்டாவது பெரிய எண்ணெய் வலு நாடான ஈராக் இப்போது எண்ணை சுத்திகரிப்புக்காக இலங்கைக்கு பாஸ்ரா ரக கச்சா எண்ணெயினை வழங்க தயாராக இருக்கின்றது. கடந்த காலங்களில் இலங்கை எம்மிடமிருந்து எண்ணெயினை வாங்கி; சுத்திகரிப்பு செய்து வந்த செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. நீங்கள் எங்களுடைய பாஸ்ரா கச்சா எண்ணையினை பெற்றுக்ககொள்ள முடியும். அவற்றை வழங்கவும் நாம் தயாராக இருக்கின்றோம் இ அத்துடன் ஈராக ;இலங்கையில் இருந்து ‘சிலோன் டீ’ யினை பெற்றுக்கொள்ளும் முதன்மை நாடாகும் என நம்பிக்கையோடு இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹட்டான் தாகா காலாப் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பொன்றையடுத்து கொழும்பில் அமைந்துள்ள அவாது அலுவலகத்தில நேற்று (19;)காலை புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே ஈராக் தூதுவர் கஹட்டான் தாகா கலாப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சந்திப்பில் இலங்கை வர்த்தக திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ஈராக் தூதரகத்தின் உதவி வர்த்தக துறை உதவி இணைப்பாளர்; டாக்டர் அலி அப்துல் ரஜாக் சலா அல் குஹிலி ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
சவூதி அரேபியாவுக்க அடுத்தபடியாக ஈராக், ழுPநுஊ இன் இரண்டாவது பெரிய எண்ணெய் வலு கொண்ட நாடாக இருக்கிறது. இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 2012 ஆம் ஆண்டில் 8.72 மில்லியன் அமரிக்க டொலர்களாக காணப்பட்டு அது 2013 ஆம் ஆண்டில் 89.99 மில்லியன் அமெரிக்க டொலாக அதிகரித்து உச்சத்தை அடைந்துள்ளது. அதேபோல 2013 ஆண்;டில் இலங்கை ஈராக்கிற்கு 89,80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை மொத்தமாக ஏற்றுமதி செய்ததுடன் 0.19 மில்லியன் அமெரிக்க டொலர் பொருட்களை ஈராக்கில் இருந்து இறக்குமதி செய்தது. தேயிலையானது ஈராக்கிற்கான முக்கிய ஏற்றுமதியாக இருப்பதோடு மொத்த ஏற்றுமதியில் 95மூ ஈராக்கிற் பங்களிக்கிறது. கிட்டத்தட்ட 15,000 தொன் தேயிலை மறைமுகமாக துபாய், ஜோர்டான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடாக ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.