வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்துக்கான புதிய பொலிஸ் நிலையம், சட்டமும், ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல இரத்னாயக்கவின் தலைமையில், சிறப்பு அதிதியான கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்பட்டது.
இன்று காலை (18/09/2016) இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக எம்.பிக்களான சுமந்திரன், சித்தார்த்தன், டாக்டர். சிவமோகன், மஸ்தான், டக்லஸ் தேவானந்தா, சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும், பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா உட்பட பொலிஸ், இராணுவ உயரதிகாரிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.