ஐரோப்பிய ‘பாஷன்’ உலகிற்கு உயர்தர அதிவேக ஆடை அணிகலன்களை விநியோகம் செய்யும் துனிசியா , தற்போது இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் துனிசியா நாட்டு உயர்ஸ்தானிகர் தாரிக் அசுஸ் கலந்தாலோசித்துள்ளார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் விசேட அழைப்பொன்றினை அடுத்து ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே இலங்கையுடனான வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு குறித்து கலந்தாலோசிக்கப்ட்டது.
இந்ந சந்திப்பின் போது உயர்ஸ்தானிகர் தாரிக் அசுஸ் தெரிவிக்கையில்:
ஜுன் மாதம் துனிசியாவில் முதல் முறையாக இலங்கைக்கென ஒழுங்கு செய்யவுள்ள அதன் முதலீட்டு மன்றத்திற்கு துனிசியா இலங்கைக்கு அழைப்பு விடுவிக்கின்றது. முதலீடுகள் ,வர்த்தகத்தினூடனான வர்த்தக ஒத்துழைப்பு குறித்தான கூட்டங்கள் என்பன இந்த முதலீட்டு மன்றத்தில் முக்கியமாக பேசப்படும்.
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் முதலீகள் ,வர்ததகம் மற்றும் ஆடை விநியோகத்திற்கான புதிய பாதையை திறந்துள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தின் அதிகரிப்பு குறித்தும் துனிசியா அதன் சந்தோஷத்தினை வெளிபடுத்தியுள்ளது. இலங்கை துனிசியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு மற்றும் ஒத்துழைப்பு எதிர்காலத்தில் வலுவடைய வேண்டும்.
சிறப்பாக உலக பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இலங்கையின் பொருளாதார வளர்ச்சியனது ஒரு முன்னணி வளர்ச்சி வீதத்தில் உள்ளது. இது இலங்கைக்கு ஒரு உந்து சக்தியாக காணப்படுகின்றது. இலங்கையில் இருந்து துனிசியாவுக்கு முக்கிய ஏற்றுமதியாக றப்பர் பொருட்கள், ஆடை மற்றும் தேயிலை ஆகியன காணப்படுகின்றது. நாங்கள் இலங்கையில் இருந்து தேயிலை பொருட்களை பெற்றுக்கொள்கின்றோம். உயர்தரமுள்ள இலங்கை தேயிலை மீது எமக்கு அதிக நாட்டமுள்ளது எனவும் அசுஸ் தெரிவித்தார்
துனிசியா – ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு ஒப்பந்தம் காரணமாக சந்தை வாய்ப்புகள் மற்றும் வர்த்தக ஏற்பாடுகள் இரு தரப்பு மத்தியில் மிகவும் இலகுவாகவும், நெருக்கமாகவும் காணப்படுகின்றது.
எமது அதியுயர் ஆடை மற்றும் ஆடை அணிகலன்களின் உற்பத்தி குறுகிய காலத்திற்குள் விநியோகம் செய்யும் அடிப்படையில் உள்ளது. இந்த நடைமுறை மற்றும் அவற்றின் உற்பத்தி பெரும்பாலும் மூன்று நாட்களுகளைக்கொண்டது. இவை நேரடியாகவே ஐரோப்பிய பாஷன் சில்லறை வர்த்தக நிலையங்களில் விற்பனைக்குக் கிடைக்கும் துனிசியா தாரளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் செயல்முறையில் முதன்முறை களம் இறங்கியுள்ளது. அதனால் ஐரோப்பிய சந்தைக்கு விநியோகம் செய்யும் குறுகிய கால வழங்கல் முறை வர்த்தகத்திற்கு இலங்கை ஏற்றுமதியாளர்களினை கூட்ணைய அழைக்கின்றோம் எனவும் தாரிக் அசுஸ் சுட்டிக்காட்டினார்.
1995ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டிணைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முதலாவது மத்தியதரை கடல் நாடு துனிசியாவாகும். இந்த ஒப்பந்தத்தினூடாக கைத்தொழில் உற்பத்தி மற்றும் வர்த்தக உறவுகளுக்கு இருதரப்பினருக்கிடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2008ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது’ எனவும் தாரிக் அசுஸ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியூதீன் கருத்து தெரிவிக்கையில்,
இரு நாடுகளுக்குமிடையே காணப்படுகின்ற வர்த்தக நிலை மிகக்குறைவாகவே இருப்பதால், சாத்தியம் உள்ள கன்னிச் சந்தையில் இருதரப்பினரும் பரந்த வர்த்தக நடவடிகைகள் கொண்ட சந்தைக்குள் உள்வாங்க முடியும்.அத்துடன் நம்பமுடியாத வணிக சாத்தியம் கொண்ட வேறுபட்ட தன்மை கொண்ட சந்தைக்குள் துனிசியாவும் உள்வாங்க முடியும்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் அறிக்கையின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் இலங்கைக்கும் துனிசியாவுக்குமிடையிலான வர்த்தக உறவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. இருநாடுகளுக்குமிடையிலான ஒட்டுமொத்த வர்த்தக பெறுமதி 2012ஆம் ஆண்டு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரினை விட மிகக்குறைந்தளவில் காணப்பட்டது. (0.56) எனவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வலுவான 6 சதவீத வளர்ச்சிக்கு இட்டுச்சென்றுள்ளமை இருநாடுகளும் ஒற்றுமையுடம் இணைந்து பரஸ்பர நன்மைகளையும் பெற்றுக்கொள்ளவும் முடியும்.
மேற்படி இச்சந்திப்பில் வர்த்தக திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான துனிசியா குடியரசின் தூதரக காவுன்சல் ஜெனரல் முக்தர் மரிக்கார் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.