தோல்பொருள் தொழில்துறை இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. மூன்று நாள் நிகழ்வு கொண்ட 7 வது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சி நேற்று ஆரம்மாகியது.
இக்கண்காட்சியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்தார்.
இக்கண்காட்சி எதிர்வரும் 8ஆம் திகதி வரை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் சிறிமாவோ பண்டாநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் நடைபெறும்.
வடிவமைப்பாளர் விருது விழா, பிரத்யேக பேஷன் ஷோ மற்றும் காட்சி அரங்க போட்டி. அத்துடன் காலணி, தோல் பொருட்கள், தோல் பொருள் தயாரிப்பு மூலப்பொருட்கள், அலங்கார பொருட்கள், தோலால் ஆன போக்குவரத்துக்கான பொருட்கள் பயண பொருட்கள், இரசாயனங்கள், கூறுகள் இ ஆபரணங்கள் மற்றும் இயந்திரங்கள் என காட்சி அரங்குகள் அலங்கரிக்கப்ட்டிருந்தன. .
காலணி மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 139.13% ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை பெற முடிந்தது என்று குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகிறது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பாதணி, தோல் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி காணப்படுகின்றது. எனவே, எமது உற்பத்திப் பொருட்களின் தரம், கவர்ச்சி என்பவற்றில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம.; தற்போது இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2020ம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்கு. அதற்கு ஏற்ப எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை தோல் உற்பத்தியானது தென் ஆசிய சந்தையில் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடத்துக்கு ஏற்றம் அடைந்துள்ளது.உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. நாட்டின் தோல் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச அளவில் காணப்படும் கடும் போட்டியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் தோல் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமானால், தோல் பொருட்கள் உற்பத்தியில் சில தரக் கட்டுப்பாடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் காணப்படும் சவால்களை சமாளிக்க முடியும். நாட்டில் உள்ள சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள்தான் தோல் பொருட்ளை தயாரிக்கின்றன.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினது ஏற்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தோல்பொருள் உற்பத்தியாளர்களால் ணூற்க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
2015 ஆம் ஆண்டுக்கான 7வது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சியானது எமது கைத்தொழில்துறையினை வலுப்படுத்தவும் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களின் திறமைகள் மற்றும் திறன்களை சர்வதேச வாங்குவோர் மத்தியில் மேம்படுத்தவும் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி தொழில் துறையில் வாய்ப்பை வழங்கவும் அவர்களது திறமைகளினை முன்னெடுக்கவும் ஏதுவாக அமையும்