தோல்பொருள் தொழில்துறையில் இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. மூன்று நாள் நிகழ்வு கொண்ட 6 வது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சி எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் சிறிமாவோ பண்டாநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் நடைபெறும். எமது உற்பத்தியாளர்கள் 45 சத வீதம் மதிப்புசேர்க்கப்பட்ட அவர்களது உற்பத்திகளை சர்வதேச கொள்வனவாளர்கள் மத்தியில் நகர்த்த முடியும். என்றார் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்.
கடந்த வாரம் கொழும்பு 3 அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இச்சர்வதேச தோல்பொருள் மற்றும் பாதணிகள் கண்காட்சி நிகழ்வு குறித்து உத்தியோக பூர்வ அதிகார்pகள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில:;
வடிவமைப்பாளர் விருது விழா, பிரத்யேக பேஷன் ஷோ மற்றும் காட்சி அரங்க போட்டி. அத்துடன் காலணி, தோல் பொருட்கள், தோல் பொருள் தயாரிப்பு மூலப்பொருட்கள், அலங்கார பொருட்கள், தோலால் ஆன போக்குவரத்துக்கான பொருட்கள் பயண பொருட்கள், இரசாயனங்கள், கூறுகள் இ ஆபரணங்கள் மற்றும் இயந்திரங்கள் ஆகியக காட்சி அரங்குகளில் வைக்கப்படும். ஆலோசனைகள் குறித்த அரங்குகளும் காணப்படும்.மேலதிகமாக பொது மக்கள் இ இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள், வடிவமைப்பாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் கொள்வனவாளர்கள், முகவர்கள், தர (பிராண்ட்) உரிமையாளர்கள், மற்றும் தொழிலதிபர்கள் வருகைதாருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாண்டு 6 வது தடவையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் படி ஆண்டுதோறும் 15 மில்லியன் வரையிலான சோடிகாலனிகளை தாயாரித்து வழங்கும்திறன் இலங்கைக்கு உள்ளது. இது தவிர்த்து, வருடாந்தம் றப்பரின் தேவை 27-30 மில்லியன் தொன் வரை மொத்தமாக மதிப்பபிடப்பட்டுள்ளது அதேவேளை 10 பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள், 30 நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் 3000 சிறு உற்பத்தியாளர்கள் அடங்கிய நிறுவனங்களில் தற்போது 20,000 பேர் காலணி தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழில் புரிகின்றனர்.
கடந்த 4 ஆண்டுகளில் (2004 – 2007) காலணி துறை ஒரு வளர்ச்சியைக் காட்டியது. மாறாக உலக மந்த நிலையினால் 2008 மற்றும் 2009 ஆண்டுகளில் காலணி துறை வளர்ச்சி மோசமாக பிரதிபலித்தது. காலணி மற்றும் தோல் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு 2012 ஆம் ஆண்டில் முறையே , 12.24 மற்றும் 18,95 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2013 ஆம் ஆண்டில் முறையே 29,27 மற்றும் 21.61 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் காணப்பட்டது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி 2013 ல் அதிகரிப்பு காட்டுகிறது. காலணி துறை 2013 ஆம் ஆண்டில் 139.13மூ ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியினை பெற முடிந்தது என்று குறிப்பிட வேண்டியது அவசியம் ஆகிறது.
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பாதணி, தோல் உற்பத்திப் பொருட்களுக்கு வெளிநாட்டில் அதிக கிராக்கி காணப்படுகின்றது. எனவே, எமது உற்பத்திப் பொருட்களின் தரம், கவர்ச்சி என்பவற்றில் நாம் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம் எனவும் தற்போது இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2020ம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரிக்கச் செய்வதே எமது இலக்கு. அதற்கு ஏற்ப எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.
இலங்கை தோல் உற்பத்தியானது தென் ஆசிய சந்தையில் மூன்றாவது பெரிய ஏற்றுமதி இடத்துக்கு ஏற்றம் அடைந்துள்ளது.உலக அளவில் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கடும் போட்டி நிலவுகிறது. நாட்டின் தோல் பொருட்கள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் சர்வதேச அளவில் காணப்படும் கடும் போட்டியால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் தோல் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்க வேண்டுமானால், தோல் பொருட்கள் உற்பத்தியில் சில தரக் கட்டுப்பாடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அளவில் காணப்படும் சவால்களை சமாளிக்க முடியும். நாட்டில் உள்ள சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள்தான் தோல் பொருட்ளை தயாரிக்கின்றன.
அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் இலங்கையின் தோற்பொருள் உற்பத்திகளை அறிமுகம் செய்தல்,சந்தை வாய்ப்பினை பெற்றுக் கொடுத்தல் மற்றும் இதனூடாக துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட இக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கெடுப்பார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோற்பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்தி இப்பொருட்கள் மீது வெளிநாட்டு ஆர்வத்தை ஏற்படுத்த அமைச்சர் ரிஷாட் தற்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதற்கமைய ஏற்கனவே இப்பொருட்களின் தரம், தன்மை போன்றவற்றை உறுதிப்படுத்தும் வகையில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளார். தோற்பொருட்களையும் மற்றும் உள்ளுர் மூலவளங்களையும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தரமான உற்பத்திகள் மூலம் உள்நாட்டு பாவனையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது மட்டுமன்றி ஏற்றுமதி ஊடாக வெளிநாட்டு நிதி வருவாயும் நாட்டிற்கு பெற்றுக் கொள்ளப்படுவது பிரதான விடயமாகும்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் ஏற்றுமதி அபிவிருத்தி சபையினது ஏற்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட இக்கண்காட்சியில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள தோல்பொருள் உற்பத்தியாளர்களால் முன்ணூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உற்பத்திகள் காட்சிப்படுத்தப்படவிருக்கின்றது.
2014 ஆம் ஆண்டுக்கான 6வது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சியானது எமது கைத்தொழில்துறையினை வலுப்படுத்தவும் மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களின் திறமைகள் மற்றும் திறன்களை சர்வதேச வாங்குவோர் மத்தியில் மேம்படுத்தவும் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி தொழில் துறையில் வாய்ப்பை வழங்கவும் அவர்களது திறமைகளினை முன்னெடுக்கவும் ஏதுவாக அமையும்.
CONCLUDED