அமெரிக்கா – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் 11 ஆவது கூட்டு குழு கூட்டம் கடந்த புதன் (15-10-2014) காலை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றது.
மத்திய தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஜே டெலெனே; அமெரிக்காவிற்கான ,இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம், அமெரிக்க பொறுப்பு விவகாரங்களுக்கான அதிகாரி ஆண்ட்ரூ மான், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்தன உட்பட பல உள்நாட்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் இவ் நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டு குழு கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக விஜயம் செய்த அமெரிக்க பிரதிநிதிகள் குழுவினரை மைக்கேல் டெலெனே தலைமை தாங்கினார்.
இக் கூட்டத்தில் ஒப்பந்தத்தின் மதிப்பீட்டு முன்னேற்ற அறிக்கை தொடர்பாகவும் வர்த்தக மற்றும் முதலீட்டு உரையாடல்கள் வர்த்தகத்தினுடனான வர்த்தக (டீ2டீ) பேச்சுவார்த்ததைகள் சந்தை அணுகல் உட்பட வர்த்தக மற்றும் முதலீட்டு ரீதியான பிரச்சினைகள் இருதரப்பினராலும் பரவலாக விவாதிக்கப்பட்டன.
மூன்று நாட்கள் கொண்ட இக்கூட்டு குழு கூட்டத்தொடரினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிக்கையில்:
தெற்காசிய பொருளாதார மையத்தினை நோக்கிய பயணத்தினை மேற்கொண்டுள்ள இலங்கைக்கு அமெரிக்க – இலங்கை இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் பாரிய நன்மையினை அளிக்கும். அத்துடன் 11 ஆவது கூட்டு குழு கூட்டத்தினூடாக இரு நாடுகளுக்குமிடையே மேலும் பல புதிய வாய்ப்புகள் உருவாகுவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
இருதரப்பு வர்த்தகத்தினை பொறுத்தவரை, 1979 ஆம் ஆண்டில் இருந்து, அமெரிக்க எமது ஒற்றை வழியான பெரிய ஏற்றுமதி பங்காளராக திகழ்கின்றது.
இரு நாடுகளுக்கும் இடையே எமது இருதரப்பு வர்த்தக உறவு 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2013 ஆம் ஆண்டு 2.8 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டதுடன் ஒரு வலுவான, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேவேளை 73 சதவீத இலங்கையின் வருடாந்த மொத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்க 23 சதவித்தினை உறிஞ்சுகிறது.
இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட விதவைகள் திட்டம் மற்றும் அவர்களின் வாழ்க்;கையை உயர்த்துவதற்கான குறிப்பிடத்தக்க நிதி உதவிகளுக்கான பங்களிப்பு ஆகியவற்றை அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி குழு பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளதை இங்கு நினைவு கூறவேண்டும்.
இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தம் (2002 ஆம் ஆண்டு); ஆரம்பிக்கபட்டதிலிருந்து, இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையே வர்த்தகம் மற்றும் முதலீடு நலன்களை முன்னெடுக்க மிகவும் திறமையான இயக்க முறை நுட்பமாக இவ் ஒப்பந்தம் மாறிவிட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொலைநோக்கிற்கு அமைய எதிர்காலத்தில் இலங்கை உயர் நடுத்தர வருமானத்தினை நோக்கிய ஒரு நாடு இருக்கும். நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் இலங்கை வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியினையடைந்தும் உள்ளது.
இதுவரை சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 220 க்கும் அதிகமான அமெரிக்க முதலீட்டு திட்டங்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னர் அமெரிக்க அதன் ‘அமெரிக்க ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் (US Export Import Bank) இலங்கை பங்கான்மையை புதுப்பித்துள்ளது என்று அறிந்துக்கொள்ளப்பட்டேன். அமெரிக்க நிறுவனம் ஒன்று பதுளை மாவட்டத்தின் நீர் வழங்கல் திட்டம் ஒன்றில் 65 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்துள்ளது. ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் அளவுகோல் முன்முயற்சியினை (பணி மதிபீட்டளவு) பயன்படுத்தி இலங்கையில் உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களில் முதலீடுகளினை மேற்கொள்வதற்கு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு நான் அழைப்பு விடுவிக்கின்றேன் என்றார் அமைச்சர்.
மத்திய தெற்காசியாவிற்கான அமெரிக்க துணை வர்த்தக பிரதிநிதி மைக்கேல் ஜே டெலெனே உரையாற்றுகையில்:
உலகம் முழுவதும் உலாவரும் ‘அமெரிக்காவின் தயாரிப்பு’ (Made in America) பிராண்ட ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இலங்கையுடனான தனது வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை புதுப்பிக்கவுள்ளதாக அமெரிக்க உயர் நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. கொழும்பில் பதினோராவது முறையாக ஆரம்பமான வரலாற்று புகழ்மிக்க வருடாந்த அமெரிக்க-இலங்கை வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு உடன்படிக்கையின் கூட்டு குழு கூட்டத்தின் முடிவின் போதே இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டது. இரு நாடுகளின் இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளின் விளைவாக 3 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டமுடியும்
இவ் வர்த்தக மற்றும் முதலீட்டு கட்டமைப்பு ஒப்பந்தத்தின் கூட்டு குழு கூட்டத்தினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து ஒழுங்கு செய்தமை குறிப்பிடத்தக்கது.