2012 ஆம் ஆண்டு இலங்கையின் ஏற்றுமதி 7 சத வீத சரிவை சந்தித்த அதேவேளை 2013 ஆம் ஆண்டு அது 6.2 சத வீத ஏற்றத்தை தழுவியது. இதற்காக ஏற்றுமதியாளர்களின் வலுவான செயல்திறன்இ அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் உறுதிப்பாட்டிற்கு ஏற்றுமதி அபிவிருத்தி சபையினரும் நானும் நன்றியினையினை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
சமீபத்திய தற்காலிக ஆண்டு ஏற்றுமதி செயல்திறன் எண்களின் ஒப்புநோக்கு தொடர்புடைய விடயங்களை ஆராயுமுகமாக நேற்று (22)புதன் கிழமை அமைச்சர் ரிஷாட் கொழும்பில் அவரது அலுவலகத்தில் ஏற்றுமதி துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் சந்தித்து பேசினார்.
அவர் தொடர்ந்து இவ் அதிகாரிகள் மத்தியில் பேசுகையில் சமீபத்திய தற்காலிக புள்ளி விபரங்களின் படி, 2013 ஒட்டுமொத்த ஏற்றுமதி வருவாய் 9773,63 மில்லியன் அமெரிக்க டொலராகவும் ;அது 2012 ஆம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் இருந்து 6.2 சத வீத அதிகரிப்புடன் 10379,94 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.
இலங்கையின் ஏற்றுமதித் துறையானது, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் துரித வளர்ச்சியைக் கண்டதன் பின்னர், 2012 ஆம் ஆண்டில் ஏற்றுமதிச் சம்பாத்தியங்களில் வீழ்ச்சி ஏற்பட்டு பின்னடைவைக் கண்டது. உலகளாவிய சந்தைகளில் கேள்விகளில் காணப்பட்ட தடைகளும் உள்நாட்டில் வழங்கல்களில் காணப்பட்ட தடைகளும் இதற்கு ஏதுவாக அமைந்தன.
கடந்த வருடத்தில் ஏற்றுமதிகளில் காணப்பட்ட வீழ்ச்சியைக் கவனத்தில் எடுத்து, உலகளாவிய சந்தைப் போக்குகளை; எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பிலும் ஏற்றுமதித் துறையை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்வதற்குப் பொருத்தமான உபாயங்களை உருவாக்குவது தொடர்பிலும் கருத்துக்களைப் பெறுவதற்காக கைத்தொழில், வர்த்தக அமைச்சுடனும் பிரதான ஏற்றுமதியாளர்களுடனும் ஆலோசனைக் கூட்டங்களை நடாத்தியது.
அதேவேளை ஏற்றுமதி அபிவிருத்திக்கும் ஊக்குவிப்புக்கும் பொறுப்பான அரசாங்க நிறுவனம் என்ற வகையில், ஏற்றுமதி அபிவிருத்தி சபையானது, இலங்கையின் ஏற்றுமதித்துறையின் அபிவிருத்திக்கு மூன்று தசாப்தங்களாக பாரிய பங்காற்றியுள்ளது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தேயிலை உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளில் வழியாகவும் விவசாயம் பொருட்கள் , உடைகள் , ஏற்றுமதி பயிர்கள் , தொழில்துறை உற்பத்திகள் மூலம் ஏற்றுமதிக்கு திருத்திகரமான பங்களிப்பு இருந்தது.