2013 ஆம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட ஹொங்காங்க்கும் இலங்கைகக்கும் இடையிலான வர்த்தக புரிந்துணர்வில் வெற்றிகரமான புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து , சில ஹொங்காங் உற்பத்தியாளர்கள் தப்போது இலங்கையில் தமது தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஆவலாகவுள்ளனர். ஹொங்காங்ஙை சார்ந்த ஆற்றல்மிகு வர்த்தக பிரதிநிதிக்குழுவொன்று எதிர்வரும் ஏப்ரல மாதம்; இலங்கை வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.
ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை இடையே முதன் முறையாக கைசாத்திடப்பட்ட வர்த்தக அபிவிருத்தி புரிந்துணர்வு மிகப்பெரிய வெற்றியை அடைந்ததுள்ளது. சில ஹாங்காங் சார்ந்த உற்பத்தியாளர்கள் இலங்கையில் தொழிற்சாலைகள் நிறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலின் பிரதி நிறைவேற்று பணிப்பாளர் திருமதி மார்கரெட் ஃபாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என ஹாங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா பிராந்திய முகாமையாளர் சனி சௌவ் தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்திற்கு வருகை தந்திருந்த சனி சௌவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதன் முறையாக ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலுக்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும்; இடையே 2013 ஏப்ரல் மாதம் முதல் கைச்சாத்திட்டப்பட்ட வர்த்தக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றியளித்ததுள்ளது திருமதி மார்கரெட் ஃபாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், இந்த உடன்படிக்கையின் அடுத்த செயல்பாட்டு நிலை குறித்து ஆராய்வதற்கே விஜயம் செய்யவுள்ளனர். சில ஹாங்காங் உற்பத்தியாளர்கள் ஏற்கனவே தமது தொழிற்சாலைகளினை இலங்கையில் அமைப்பதற்கு தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக ஆடை , உணவு , கைவினைத்திறன் மற்றும் சூரிய ஒளி; தொடர்பான உற்பத்தி துறைகளிலேயே அவர்களின் ஆர்வம் காணப்பட்டது.
மேற்படி 15 நிறுவனங்களிலிருந்து 20 பிரதிநிதிகள் இக்குழுவில் அடங்குவர். இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு ஹாங்காஙில் காணப்படும் இறக்குமதியாளர்கள் மற்றும் சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்ககொள்வதற்கான உதவிகளை நாம் செய்துவருகின்றோம் என முகாமையாளர் சனி சௌவ் மேலும் கூறினார்.
சனி சௌவினுடைய ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலானது ஹொங்காஙின் இரு வழி ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஊக்குவிப்புக்கு அதிகாரம் வழங்குகிறது.
பிரதிநிதிகள் குழுவினரை தலைமை தாங்கும் திருமதி மார்கரெட் ஃபாங் 1997 -1999 ஆண்டு வரை சர்வதேச வர்த்தக துறையில் பரந்த அனுபவம் கொண்டவர். அவர் ஹொங்காங் அரசின் வாஷிங்டன் னுஊ யின் பொருளியல் மற்றும் வர்த்தக அலுவலக துணை பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.
இந்த பிரதிநிதி குழுவினர் மத்தியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்து தெரிவிக்கையில்; ஹொங்காங் வர்த்தக அபிவிருத்தி கவுன்சிலுக்கும் ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்கும் இடையிலான வர்த்தக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் வெற்றியளித்ததுள்ளமை குறித்து மகிழ்சிசியடைகின்றேன். இலங்கையில் தமது தொழிற்சாலைகளினை நிறுவதற்கு முன்வரும் ஹொங்காங் சார்ந்த உற்பத்தியாளர்களை நாம் வரவேற்கின்றோம்.அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை நாம் வழங்கவுள்ளோம். அதேவேளை வர்த்தகத்தை விட துறைமுகம் சார்ந்த முயற்சிகளினையும் நாம் ஆராய வேண்டும் என்று நம்புகிறேன.;நாம் உங்களுடைய பிரதிநிதிகள் குழுவினரின் வருகையினை ஆவலுடன் எதிர்பார்கின்றோம. ஹாங்காங்க்கும் இலங்கைக்கும் இடையே எதிர்காலத்தில் வர்த்தக துறையில் பெருமளவில் வாய்ப்புகள் ஏற்பட இடமுண்டு என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டில் ஹாங்காங்க்கும் இலங்கைக்குமிடையிலான மொத்த இருதரப்பு வர்த்தகம் 2676 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இதில் 2568 மில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதி கொண்டிருந்தது. ஹொங்காங்க்கும் இலங்கைக்குமிடையிலான வெளிநாட்டு நேரடி முதலீடு அதே ஆண்டில் 185 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.