2013 ஆம் ஆண்டில் கைசாத்திடப்பட்ட ஹாங்காங்க்கும் இலங்கைகக்கும் இடையிலான வர்த்தக புரிந்துணர்வில் வெற்றிகரமான புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது அதனையடுத்து , சில ஹாங்காங் உற்பத்தியாளர்கள் இப்போது இலங்கையில் தமது தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஆவலாகவுள்ளனர். இப்போது ஹாங்காங்ஙை சார்ந்த ஆற்றல்மிகுவர்த்தக குழு எதிர்வரும் ஏப்ரல மாதம்; இலங்கை வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை இடையே முதன் முறையாக கைசாத்திடப்பட்ட வர்த்தக வளர்ச்சி புரிந்துணர்வு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. சில ஹாங்காங் சார்ந்த உற்பத்தியாளர்கள் இலங்கை தொழிற்சாலைகள் நிறுவதற்கு விருப்பம் தெரிவிததுள்ளனர்.
ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் பிரதி நிறைவேற்று பணிப்பாளர் திருமதி மார்கரெட் ஃபாங் தலைமையிலான பிரதிநிதிகள் குழு, ஏப்ரல் மாதம் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என ஹாங்காங் வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா பிராந்திய முகாமையாளர் தெரிவித்தார்.
நேற்று (21) செவ்வாய் கிழமை கொழும்பு 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்திற்கு வருகை தந்திருந்த போதே சன்னி சொவ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த பிரதிநிதி குழுவினர் மத்தியில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கருத்து தெரிவிக்கையில் ஹாங்காங்க்கும் இலங்கைகக்கும் இடையிலான வர்த்தக புரிந்துணர்வில் வெற்றிகரமான புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன் ஹாங்காங் சார்ந்த உற்பத்தியாளர்கள் இலங்கையில் தொழிற்சாலைகள் நிறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர் இவர்களுக்கு நம் முழுமையான ஒத்துழைப்பை வேண்டும். இலங்கையில் ஹாங்காங்க்கும் இடையே எதிர்காலத்தில் வர்த்தக துறையில்; பெருமளவில் வாய்ப்புகள் ஏற்பட இடமுண்டு.