மன்னார், அடம்பன், மருதோண்டுவான், வேளாகுளம் பாடசாலையில் 29/09/2016 அன்று இடம்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டிடத் திறப்பு விழா மற்றும் பரிசளிப்பு விழாவில், கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம விருந்தினராகப் பங்கேற்று விழாக்களை சிறப்பித்தார்.
பாடசாலை அதிபர் திருமதி. ரோஹிணி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கௌரவ அதிதிகளாக மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மடு வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்டஸ், மௌலவி அஷ்ரப் முபாரக் மற்றும் உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.