வரலாற்று சிறப்புமிக்க வியட்னாம் – இலங்கை இடையிலான உத்தியோகபூர்வ கூட்டுவர்த்தக உப குழு முதல் முறையாக ஆகஸ்ட் 21 ஆம் திகதி வியட்னாம் ஹனோய் நகரில் வைத்து நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து அடுத்த நாள் வியட்னாம் – இலங்கை வர்த்தக சபையை வியட்னாமில் நிறுவுவதற்கான ஒப்பந்தமும் நடைமுறைக்கு வந்தது.
வியட்னாம் – இலங்கை வர்த்தக சபையை வியட்னாமில் நிறுவுவதற்கான ஒப்பந்ததத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வியட்னாம் வர்த்தக சம்மேளனத்தின் பொது செயலாளர் திருமதி. பாம் தி வி ஹாங் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு விசேட அழைப்பை விடுத்திருந்திருந்தார்.
வியட்னாம் – இலங்கை வர்த்தக சபையை வியட்னாமில் நிறுவுவதற்கான ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்;தனர்.
இந்த ஒப்பந்தத்திற்கான உத்தியோகபூர்வ சந்திப்பு ஹனோய்- வியட்னாம் வர்த்தக சம்மேளன தேசிய தலைமையகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்டுடன் வியட்னாமுக்கான இலங்கை தூதுவர் ஐவன் அமரசிங்க , அமைச்சரின் ஊடக செயலாளர் ஜோசப் தவராஜா மற்றும் இலங்கை வர்த்தக சிரேஷ் உயர் பிரதிநிதிகளும் அதிகாரிகளும் கலந்துக்கொண்டனர்.
இதன்போது திருமதி பாம் தி வி ஹாங் உரையாடுகையில்: பாரிய சந்தை பொருளாதாரத்தினைக் கொண்ட ‘புதிய ஆசியான்;’ என்றழைக்கப்படும் வியட்னாம் இலங்கையின் வர்த்தக துறையோடு பரந்த ஓப்பந்தத்தினை அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்க தயாராக உள்ளதாக என ஆகஸ்ட் 21 ஆம் திகதி அறிவித்தது. உண்மையில், இலங்கை – வியட்னாம் வர்த்தக சபை நிறுவுவதற்கான யோசனை ஒரு நல்ல முயற்சி;யாகும்.
வியட்னாம் வர்த்தக சம்மேளனமானது ஒரே தேசிய பிரதிநிதிகளை கொண்டு அனைத்து வியட்னாமிய வர்த்தகர்கள்; ,தொழில் முனைவோர் மற்றும்; தொழில்துறைகள் உள்ளடக்கின்றது.இது 300 சங்கங்களை கொண்டதுடன் 110,000 நேரடி மற்றும் மறைமுக உறுப்பினர்கள் உள்ளடக்கியுள்ளது. அதன் உறுப்பினர்கள் ஓரே கம்யூனிஸ்ட் கட்சியுடைய மாநிலத்தின் வேகமாக வளர்ச்சி காணும் 142 பில்லியன் அமெரிக்க டொலர் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பலம் வாய்ந்த தமது குரல் கொடுத்து வருகின்றனர்.
1997 ஆம் ஆண்டு;, ஆஸ்திரேலியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தக துறை திணைக்களம் சீனாவில் தவிர, வியட்நாம், கம்போடியா, பர்மா, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அந்நாடுகளை ‘புதிய ஆசியான்’ என அழைக்க ஆரம்பித்தார்கள். அத்;துடன் வியட்னாம் உயரிய மீகாங் உப பிராந்தியத்;தில் பாரிய சந்தை பொருளாதாரத்தினையும் கொண்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் எனவும் பாம் தி வி ஹாங் குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உரையாற்றகையில் தெரிவித்ததாவது:
யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்தில் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி மூலோபாயங்கள்- வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு இட்டுச்செல்லப்பட்டுள்ளது. இதற்காக இலங்கையினுடைய முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம். மஹிந்த சிந்தனை அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ் மனித அபிவிருத்தி சுட்டெண் தரவரிசை, வறுமை குறைப்பு, சர்வதேச பொருளாதார வளர்ச்சி , கொள்கைகள் மற்றும்; இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மூலோபாயம் வழிக்காட்டல் ஊடாக இலங்கையின் முன்னேற்றங்களையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன். யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பொருளாதார அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் எண்ணிலடங்காதவை.இன்று எமது அரசு முப்பது வருட யுத்தத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் அபிவிருத்தியில் பயனடைய வைப்பதில் மிகவும் விரைவாகவும், துரிதமாகவும் செயற்பட்டு வருகின்றது.
மஹிந்த சிந்தனை கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக 2006 முதல் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டில் அமைதி ஏற்பட்டு அதற்கு சாதகமான சூழலும் ஏற்பட்டது. 2011 ஆம் ஆண்டு வரை குறிக்கப்பட்ட பொருளாதார இலக்குகளை எட்டியுள்ளோம்.
அதன் பின்னர் மஹிந்த சிந்தனை தொலைநோக்கு என்ற கொள்கையின் அடிப்படையில் விவசாய, நிர்மாண, கடற்றொழில், சுற்றுலா மற்றும் சேவைகள் துறையில் பாரிய இலக்கை எட்ட முடியும்.
நாம் திட்டமிட்டுள்ள இலக்கை அடைவது என்பது எளிதானதல்ல. இதனை எட்டுவதற்கு எமது திட்டங்களும் கொள்கைகளும் முழுமூச்சாக செயற்படுத்தப்படல் வேண்டும். அத்துடன் மஹிந்த சிந்தனை ஊடாக நாம் நிர்ணயித்துள்ள இலக்கை அடைவதற்குரிய உண்மை நிலையை மக்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். மக்கள் இது தொடர்பாக தெளிவு பெற்றாலேயே இலக்கை அடைவது எமக்கு எளிதானதாக இருக்கும்.
உண்மையில், இலங்கையிலிருந்த வியட்னாம் ஐந்து மைய மூலோபாயம் பற்றி கற்க வேண்டும். சமூக அபிவிருத்திக்கு பிரயோகிக்க கூடிய நல்ல விடயங்கள் நம் நாட்டின உள்ளன. அத்துடன் உலக பொருளாதார மந்த நிலை காரணமாக வியட்நானமும் இலங்கை போன்று பொருளாதாரத்தில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டது. இருந்த போதிலும் வியட்னாம் 2013 ஆம் ஆண்டு 5.32மூ சத வீதம் அதன் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5.5மூ சத வீதம் வளாச்சியையும் ஈட்டியள்ளது. 2013 ஆம் ஆண்டில் 6.2மூ சத வீதமாக காணப்பட்ட எமது பணவீக்கம் 2014 ஆம் ஆண்டில் 1.45மூ சத வீதமாக முதல் ஏழு மாதங்களில் மிக குறைவாக சரிந்தது! 2013 ஆம் ஆண்டில் நமது மொத்த சர்வதேச வர்த்தகம், 266 பில்லியனாக அமெரிக்க டொலராக இருந்தது. இதனை 300 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம். 2013 ஆம் ஆண்டு நாம் எமது வீட்டு வறுமையை 9மூ சத வீதத்திற்கு கொண்டுவர முடிந்தது. இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கும் முதலீடுகளுக்கும் பரந்த சாத்தியம் நிறைய உள்ளது. தற்போதைய வர்த்தக தொகுதிகள் குறைவாக உள்ளதால் இரு நாடுகள் இடையில் நிலவும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு இணையாக இல்லை மற்றும் புதிய நகர்வுகளுக்கான பரந்த சாத்தியங்கள் உள்ளதாலும் நாம் ஒன்றாக செயற்பட வேண்டும். வியட்னாமும் இலங்கையும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை இன்னும் அதன் முழுமையான ஆற்றல் வளத்தை அடையவில்லை. இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இருதரப்பு வர்த்தகத்தினை அதிகரிக்க செய்யும்.குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் இது சாதகமாக அமையும்.அத்துடன் இருதரப்பினரும் குறைந்த பட்சம் சலுகையுடன்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தினை பரிசீலிக்க வேண்டும்’ என இலங்கைக்கான வியட்னாமிய தூதுவர் டென் சின் தான் இருவாரங்களுக்கு முன்னர் விசேட அழைப்பையடுத்து எமது அலுவலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது மேற்கண்டவாறு தெரிவித்ததாகவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.