வியட்னாமுக்கும் இலங்கைக்கும் இடையே கடந்த வருடம் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் திகதி வியட்னாம் ஹனோய் நகரில் முதல் முறையாக வரலாற்று சிறப்புமிக்க வர்த்தக உறவுகளினை வளர்த்துக்கொள்ளும் கூட்டு வர்த்தக உப கமிட்டி செயல்முறை உத்தியோகபூர்வமாக நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே முதலாவது கூட்டு ஆணைக்குழுக்கான உத்தியோகபூர்வ அமர்வு முதல்முறையாக கொழும்பில் இடம்பெற்றது.
இக்கூட்டு ஆணைக்குழுக்கான அமர்வில்; இலங்கை சார்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை தலைவர் பந்துல எகொடகே, இலங்கை வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஆர்.டி.எஸ் குமாரரட்ன, அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் இலங்கை வர்த்தக பிரதிநிதிகளும் வியட்னாம் சார்பில்; வியட்னாம் உப கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஓஹங் குவாக் வுஹங், வியட்னாம் வர்த்தக அமைச்சின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் வியட்னாம் வர்த்தக பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்
இந்த அமர்வில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றகையில் தெரிவித்ததாவது:
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் எனது அமைச்சு இருதரப்பு முன்னேற்றங்ளை நெருக்கமாக கண்காணிக்கும.
வியட்னாம் 2013 ஆம் ஆண்டு 5.32% சத வீதம் அதன் வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை பதிவு செய்யக்கூடியதாக இருந்ததுடன் 2014 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 5.5% சத வீதம் வளாச்சியையும் ஈட்டியள்ளது.
2013 ஆம் ஆண்டில் நமது மொத்த சர்வதேச வர்த்தகம், 266 பில்லியனாக அமெரிக்க டொலராக இருந்தது. இதனை 300 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
இலங்கை மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகளுக்கிடையே கூட்டு பொருளாதார ஒத்துழைப்புக்கும் முதலீடுகளுக்கும் பரந்த சாத்தியம் நிறைய உள்ளது. தற்போதைய வர்த்தக தொகுதிகள் குறைவாக உள்ளதால் இரு நாடுகள் இடையில் நிலவும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பு இணையாக இல்லை மற்றும் புதிய நகர்வுகளுக்கான பரந்த சாத்தியங்கள் உள்ளதாலும் நாம் ஒன்றாக செயற்பட வேண்டும். வியட்னாமும் இலங்கையும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை இன்னும் அதன் முழுமையான ஆற்றல் வளத்தை அடையவில்லை. இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் இருதரப்பு வர்த்தகத்தினை அதிகரிக்க செய்யும்.குறிப்பாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் இது சாதகமாக அமையும்.அத்துடன் இருதரப்பினரும் குறைந்த பட்சம் சலுகையுடன்கூடிய வர்த்தக ஒப்பந்தங்களினை பரிசீலிக்க வேண்டும்
வியட்னாம் உப கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் வுஹங் பேசுகையில்:
ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தகத்தை எட்டுவதற்கு நான்கு மடங்கு வர்த்தக அளவினை உயர்த்துவதற்கு அழைப்பு விடுத்துள்ள வியட்னாம், 90 மில்லியன் கொண்ட பெரிய சந்தையின் இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களக்கான அதன் சொந்த ஒழுங்குமுறை விதிகளை நீக்கியுள்ளது.
வலுவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம் இன்று நம் ஏற்றுமதி சாதனையாக 130 பில்லியன் அமெரிக்க டொலரினை அடைந்துள்ளோம.; தற்போது வியட்நாம், 40 வது ஏற்றுமதி இலக்கையும் 23 விநியோகஸ்தருக்கான இடத்திலும் இருக்கின்றது. எமது மொத்த ஏற்றுமதி 0.43% சத வீதத்தினையும் எமது மொத்த இறக்குமதி 1.06% சத வீதத்தினையும் முறையே பங்களிப்பு செய்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே மொத்த வர்த்தகம் 2012 ஆம் ஆண்டில் 119.5 மில்லியன் அமெரிக்க டொலரை பதிவு செய்தது. இது 2013 ஆம் ஆண்டில் 224,4 மில்லியன் டொலராக அதிகரித்துடன் 88% சத வீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியை நிலைநிறுத்தியது.
வர்த்தக ரீதியாகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் வியட்னாம் 2010 ஆம் ஆண்டில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் அடக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கான ஒப்பந்தங்கள் கொழும்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் மற்றும் வியட்னாம் வர்த்தக அமைச்சருக்கிடையில் கிங்பெரி ஹோட்லில் நடைபெற்றது.