“ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான, பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவின் குற்றச்சாட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விரைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தது போல், எனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் வீரவன்ச மீதும் குற்றப்புலனாய்வு பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்குமென நான் நம்புகின்றேன்”
என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது டுவிட்டர் தளத்தில் வேண்டுகோள் விடுத்தார் .