தற்போதைய அமைதியின்மை காரணமாக சிரியாவின் தொழில்துறை சமூகம் இப்போது முதலீட்டிற்கான ஒரு மையத்தை நாடுகின்றது. இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராய எதிர்வரும் மாதங்களில் சிரியாவினுடைய வர்த்தக மற்றும் முதலீட்டு தூதுக்குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர நான் எண்ணியுள்ளேன். சிரியா தற்போதைய பிரச்சினைகளிலிருந்து மீளுமாயின், எங்கள் இருதரப்பு வர்த்தக ஒத்துழைப்பு சிறந்த நிலையில் இருக்கும்.

கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான இ;டம்பெற்ற சந்திப்பொன்றிலேயே இலங்கைக்கான சிரியாவின் கௌரவ கான்சுலரும் அல் டிரவ்பீ குறுப் குழுமத்தின் நிறைவேற்று தலைமை அதிகாரியுமான டாக்டர். மொகமட் மௌசலம் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இச்சந்திப்பில் தொடர்ந்து கூறுகையில்: சிரியா தமது வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்புக்களை பிராந்தியத்திற்கு வெளியே குறிப்பாக இலங்கையில் முதல் முறையாக மேற்கொள்ளவுள்ளது. இலங்கையில் அற்புதமான முதலீட்டு சூழல் எங்களை கவர்ந்துள்ளது. மிக பெரிய கேபிள் தொழிற்சாலை சிரியாவிலேயே உள்ளது. நாம் இங்கிலாந்து, சீனா, கிரீஸ், கொரியா மற்றும் ஏனைய நாடுகளுடனான சர்வதேச திட்டங்களில் ஈடுபட்டுவருகின்றோம்.சிரியாவின் தற்போதைய முரண்பாடு காரணமாக சுமார் 70மூ சத வீத முதலீடுகளை சிரியாவிற்கு வெளியே மாற்றியுள்ளது. மோதல் என்றாலும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்கள் துறைகள்; அங்கு தொடர்ந்து தமது வியாபார நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவிற்கு வெளியே வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மாற்றியுள்ள தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கையின் கனரக தொழில் துறைகளில் பயனடைவார்கள் என்று நம்புகின்;றேன். வளைகுடா பிராந்தியத்தில் உள்;ள முதலீட்டாளர்களை விட சிரிய முதலீட்டாளர்களிடம் அதிக பணம் மற்றும் நிதி புழக்கம் இருக்கின்ற விடயம் பலருக்கு தெரியாது. நாடுகள் என்ற ரீதியில் வளைகுடா நாடுகள், சிரியாவை விட செல்வத்தில் உயர்ந்ததாக உள்ளது. ஆனால் தனிப்பட்ட நாடுகளின் (பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) தனியார் மூலதன தொகுதிகள் என்று வரும் போது சிரியா முன்னிலையில் இருக்கின்றது. சிரியாவின் ஒரு சில முதலீட்டாளர்கள் இலங்கையின் தொழில்துறையினை ஆராய்ந்து வருகின்றனர். குறிப்பாக சுற்றுலாத்துறை, இரசாயனங்கள், பல சுழற்சி சக்தி திட்டங்கள், கேபிள்கள் மற்றும் ஜவுளி போன்ற துறைகளில் ஆர்வமாக உள்ளன.

மருந்தக தொழிலதுறை என்பது எளிதானது அல்ல. அதன் தரம் சிறப்பாக அமைய வேண்டும் அப்படியிலையென்றால் ஏற்றுமதி சிக்கல் நிறைந்நதாக இருக்கும். சிரியாவில் 55 மருந்தக தொழிற்சாலைகள் இயங்குகின்றன. 85 நாடுகளுக்கு ஓளடதக வகைகளை நாம் ஏற்றுமதி செய்கின்றோம். இந்நாடுகள் மத்தியில் எங்கள் முதன்மை சந்தையாக சவூதி அரேபியா திகழ்கின்றது என்றார்.

சிரியாவில் தற்போது நிலவிவரும் முரண்பாடு தீர்க்கப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என்று நமது அரசாங்கம் மற்றும் இலங்கையின் அனைத்து மக்களின் மிகவும் விரும்பமாகும.; நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தில் 7.8 சத வீPத வளர்ச்சயினை எதிர்பார்க்கின்ற எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அர்ப்பணிப்புடனான தொலைநோக்கு குறிக்கோளிற்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.இந்த குறிக்கோள் உலக முதலீட்டாளர்களால் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை-சிரியா இருதரப்பு ஒத்துழைப்பிற்காக நாம் சிரியர் முதலீட்டாளர்களையும் வர்த்தகர்களையும் இலங்கைக்கு வரவேற்கின்றோம். ஆசியாவில் பொருளாதார ரீதியாக துரித வளர்ச்சியடைந்து வரும் 2 வது நாடு இலங்கையாகும். இலங்கைக்கு வருகை தந்து சேவை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் உள்ளிட்ட துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பாக அறிந்து கொள்ளுங்கள்.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இலங்கை-சிரியா இருதரப்பு வர்த்தக 97,23 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 2013 ஆம் ஆண்டில், சிரியாவிற்கான தேயிலை ஏற்றுமதி; 94 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. இதில் கிட்டத்தட்ட மொத்த ஏற்றுமதி வருவாய் 97 சத வீத அதிகரிப்பை காட்டியமை குறிப்பிடத்தக்கது என்றார் அமைச்சர் ரிஷாட்.

மேற்படி இச்சந்திப்பில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் , இலங்கை வர்த்தக திணைக்கள அதிகாரிகள்,மற்றும் சிரியா நாட்டு வர்த்தக உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *