இந்தியாவின் புதிய பிரதமர் தேர்வானது வரலாற்று மிக்க இந்தியாவின் அரசியலில் மாற்றங்கள் ஏற்படுத்தவதோடு இலங்கை- இந்தியா வர்த்தக உறவுகள் எதிர்காலத்தை அதிகரிக்கப்படலாம் கைத்தொழில் மற்றும் வர்த்தக் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட்டுக்கும் இலங்கை வந்துள்ள இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் உயர்மட்ட பிரதிநிதிக் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் தொடர்;ந்து உரையாற்றுகைளில்:தேர்தலில் தீக்கதரமான முடிவை எடுத்த இந்திய மக்களை நாங்கள் வாழ்த்துகிறோம். எதிர்காலத்தில் இந்தியா எமது ஏற்றுமதியை அதிகரிக்கும் என நான் வலுவாக நம்புகிறேன் அத்துடன்; ஒரு முன்னேற்றத்தனை காட்டும் சிறந்த வர்த்தக சமநிலை பேணப்படும் என தெளிவான நம்பிக்கை இருக்கின்றது.
கடந்த வருடம் இரண்டு தடவைகள் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இவ்விஜயத்தினூடாக வர்த்தகம் தொடர்பான பயனள்ள கலந்துறையாடல்கள் கூட்டங்கள் ஆகியவற்றை நாங்கள்; அவர்களுடன் வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம். முதல் முறையாக இன்று இங்கு வந்திருக்கும் இந்திய உயர்மட்ட பிரதிநிதிக்குழுவினரை மிக்க ஆவலுடனம் மரியாதையுடனும் வரவேற்கிறேன.;
தற்போது புதிய இந்தியாவாக தோற்றம் பெற்றுள்ள இந்தியாவின் புதிய வரலாற்று அரசியல் மாற்றங்கள் 4 பில்லியன் அமெரிக்க டொலரினை தாண்டியுள்ள எங்கள் இருதரப்பு வர்த்தக உறவுகள் கணிசமான அளவு தூண்டும். 2012 ஆம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் இலங்கையில் 158,20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை முதலீடு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது என கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இலங்கைக்கு விஜயங்களை மேற்கொள்ளும் இந்திய முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எங்கள் அரசாங்கம முழு ஆதரவினை வழங்கும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
‘மோகன் முத்தா ஏற்றுமதி’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரமேஷ் முத்தா தலைமையில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 13 பேரடங்கிய உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிக் குழுவினர் முதலீடு மற்றும் வர்த்தகத்தினூடான வர்த்தக (டீ2டீ;) வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் நான்கு நாள் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
‘மோகன் முத்தா ஏற்றுமதி’ நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரமேஷ் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: ‘சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காலத்தில் ,இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக வேகமாக அதிகரித்திருந்தது. இந்திய நிறுவனங்கள் இலங்கையில் தங்கள் கூட்டு முயற்சிகளில் உள்ளூர் தேவைகளினை பூர்த்தி செய்வதற்கு உதவுவதற்கு மட்டுமன்றி இலங்கையின் ஏற்றுமதியில் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.
எமது இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களில் ஆர்வமாக உள்ளனர்.உதாரணமாக சுற்றுலர் உள்கட்டமைப்பு கணனி சார்ந்த தொழில் நுட்பம் மற்றும் நெடுஞ்சாலைகள ஆகியன. அத்துடன் சுகாதார நலன் மற்றும் உயர் இறுதியில் கல்வி ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் .
இந்திய- இலங்கை சுற்றுலா திட்டங்களுக்கான கூட்டு முயற்சிகளினை அறிமுகப்படுத்த நேரம் வற்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அத்தடன் இலங்கை பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சத வீத வலுவான வளர்ச்சி விகிதத்தினை எட்டியுள்ளமை நல்ல செய்தி என்றார் மோகன் முத்தா.
இச்சந்திப்பில் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவு ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டு, உள்கட்டமைப்பு இணைப்பு மற்றும் இந்திய பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் நலன்கள் தொடர்பிலான விருப்பங்கள்; மற்றும் எண்ணங்களினை அமைச்சர் ரிஷாட் மற்றும்; இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் 13 பேரடங்கிய உயர்மட்ட பிரதிநிதிக் குழுவினர் வெளிப்படுத்தினர்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரண்டு அண்டை நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு மொத்த வர்த்தக 2012 ஆம் ஆண்டில் 4,086 பில்லியன் அமெரிக்க டொலராகவும் 2013 ஆம் ஆண்டில் இது 3.36 பில்லியனாக அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. அதேவேளை இலங்கையின் வர்த்தக நிலுவையினை மேம்படுத்துவதன் விளைவாக, , இந்தியாவின்; இறக்குமதி விலைப்பட்டியல் 12சத வீத வீழ்ச்சயை கண்டது. 1998 ஆம் ஆண்டு இலங்கை – இந்தியா வர்த்தக ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டதன் பின்பு, இருதரப்பு வர்த்தக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதிகளாக பிரித்த கம்பிகளும் கேபிள்களும்; குளிர்விப்பான்களுக்கான போத்தல்கள் , கப்பல்கள், கோகோ பொருட்கள், பளிங்கு, ஆனுகு பலகைகள், ஜாதிக்காய், தளபாடங்கள், ஆடைகள், ரப்பர் கையுறைகள், மற்றும் கண்ணாடி போத்தல்கள் ஆகியனவும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகளாக பெற்ரோலிய பொருட்கள், வாகனங்கள், பருத்தி, சர்க்கரை ஆகியனவும் காணப்படுகின்றன.
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு 116 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது அரசசார்பற்ற தொழில் துறை நிறுவனம்- தனியார் துறை இ அரசு துறைகளில் மற்றும் சிறிய நடுத்தர தொழில் துறையிரைக் கொண்டு 8100 அமைப்புக்களை (நேரடி உறுப்பினர்) நிர்வகிக்கின்றது. சுமார் 400 பன்னாட்டு தேசிய மற்றும் பிராந்திய துறை சங்கங்கள் இருந்து 90,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மறைமுக உறுப்பினர்களுக்கு ஆணையிடுகின்றது.
இதேவேளை விவசாயம், நிதி சேவைகள், கட்டுமான மற்றும் சுகாதார ஆகிய துறைகளில் இலங்கைளில் 2010-2011 ஆண்டில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 2015 ஆம் ஆண்டில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் லாபத்தைபெற்று இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக தொடர்பை வலுப்படுத்த இந்திய தொழில்துறை கூட்டமைப்பு எதிர்பார்த்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ் இந்தியா சென்றிருந்த போது இரு நாடுகளின் நெருக்கமான பொருளாதார ஒருமைப்பாடு தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.
இலங்கையில் 2010 ஆம் ஆண்டில் 110 மில்லியன அமெரிக்க டொலர்; மதிப்புள்ள முதலீட்டை செய்துள்ள இந்தியா, இலங்கையின் முதல் நான்கு முதலீட்டாளர்கள் வரிசையில் உள்ளது.
இதேவேளை, பல இந்திய நிறுவனங்கள் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கையின் மூலோபாய முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக இந்திய தொழில்துறை கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.