ஆடை உற்பத்தி வருவாய் 2014 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரினை எட்டியதுடன் ஒரு புதிய வளர்ச்சியினை நோக்கி பயணிக்கின்றது. இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் முக்கிய பங்கு வைக்கும் ஆடை உற்பத்தி தொழில் பயிற்சிக்கான முயற்சிகளினை விரிவாக்கம் செய்வதற்கு கொரியா முதல் முறையாக மாகாண ரீதியாக வட மாகாணத்தில் அதன் தொழில் திறனை அதிகரிக்க ஆதரவு வழங்கவுள்ளது.

நாம் இன்று கொரியாவில் இருந்து ஆடை உற்பத்தி தொழில்துறைக்கான தொழில்நுட்ப ஆதரவினை பெற்றுக்கொள்கின்றோம.; அத்துடன் எங்கள் ஆடை உற்பத்தி தொழில் பயிற்சி முயற்சிகள் மன்னார் மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கபட்டுள்ளது இந்த முயற்சி முதலில் மன்னார் மாவட்டத்திலுள்ள உள்ள கிராமங்களில் விஸ்தரிக்கப்பட்டு அதன் பின்னர் வட மாகாணத்திலும் இந்த முயற்சிகள் தொடரும். இதற்காக கொரியா அரசுக்கும் கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்திற்கும் நாங்கள் நன்றியினை நல்கின்றோம் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் கூறினார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் வட மாகாணத்திற்கான அதன் முதற் கிளையினை கடந்த வாரம் மன்னாரில் ஆரம்பித்து வைத்தது. இந்த ஆரம்ப வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கூறினார்.

அமைச்சர் ரிஷாட் மேலும் கூறுகைகையில்: இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனமானது பயிற்சி, பரிசோதனை, ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப சேவைகளை ஆடை உற்பத்தி தொழிலுக்கு வழங்குகிறது. ஐளுழு 17025 மற்றும் 9001 தரம் உடைய சர்வதேச அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் பெற்ற ஒரு உலகளாவிய மட்டத்தில் பரிசோதனை ஆய்வினையும் இந்நிறுவனம் உள்ளடக்கியுள்ளது.

2013 ஆம் ஆண்டில், இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் – பயிற்சி, பரிசோதனை மற்றும் ஆலோசனை சேவைகளிருந்து இருந்து ஒட்டுமொத்த உயர் வருமானமாக 1.05 மில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியது. இந்நிறுவனம் 3430 மொத்த பயிற்சி வலிமை கொண்ட 185க்கு குறையாத பயிற்சி திட்டங்களை மேற்கொண்டுள்ளது. அத்துடன் 18 முதுநிலை தகுதி கொண்ட 56 வலுவான விரிவுரையாளர் குழுவை கொண்டிருப்பது அதன் துறையில் மற்றொரு அளவுகோலாகும்.
2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இலங்கையினுடைய தற்காலிக ஏற்றுமதி வருவாயின் முதல் அரையாண்டு சம்பாத்தியம் அதியுயர்வாக பதியப்பட்ட நிலையில் பெரியளவிலான 45% சத வீத அதிகரிப்புடன் ஒட்டுமொத்த சம்பாத்தியமாக 5410.4 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. அத்துடன் 2010 ஆம் ஆண்டு முதல் அரையாண்டில் மட்டும் 3741 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாத்தியம் பதியப்பட்டது. வருடத்திற்கு வருட அடிப்படையில் , 2014 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி 57மூ சத வீதத்தால் உயர்வடைந்தது. அதன் தற்காலிக ஆடை ஏற்றுமதி வருவாய் 20.40% சத வீத அதிகரிப்புடன் 2400.5 மில்லியன் அமெரிக்க டொலராக அமைந்தது.

மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இக் கிளை அலுவலகம் வட மாகாணத்திற்கு தேவையான ஆடை உற்பத்தி தொழில் பயிற்சிகளை வழங்கும். என் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை ஜவுளி மற்றும் ஆடை நிறுவனம் மன்னார் வரை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தமை முதல் முறையாகும். அத்துடன் விரைவான அபிவிருத்தி நோக்கி வட மாகாண உட்கட்டமைப்பினை கட்டியெழுப்புகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அர்ப்பணிப்பு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். எமது அரசாங்கம் மன்னார் மாவட்ட அபிவிருத்திற்காக 161 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையினை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், வட மாகாண மக்கள் மத்தியில் புதிய தொழில் வாய்ப்புக்களுக்கான கேள்வி தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் புதிய தொழில்வாய்ப்புக்கான பாரிய அழுத்தமும் காணப்படுகின்றது. ஆடை உற்பத்தி தொழில் பயிற்சியினை வட மாகாணத்தில் அறிமுகம் செய்வதனால் அரசாங்கம் இங்கு அபிவிருத்தினையும் புதிய தொழில் வாய்ப்புக்களினையும் உருவாக்கவதற்கான ஒரு பாதை ஏற்படுத்தப்படுகின்றது.

20 பேரடங்கிய பயிற்றுனர் தொகுதியினர் தமது ஒரு மாத பயிற்சியின் பின்னர், மன்னார் மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் புதிய மாணவர்களுக்கும் ஆறு மாத காலத்துக்கான பயிற்சியினை ஆரம்பிக்கவுள்ளனர்.

ஆறு மாத பயிற்சியின் பிறகு, தையல் இயந்திரங்கள் வழங்கப்படும். அதன்பின்னர் உற்பத்தி விரைவில் ஆரம்பிக்கப்படும். வட மாகாண மக்களின் சார்பாக கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர்களின மதிப்புமிக்க ஆதரவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். அடுத்த ஆண்டு ஒரு தையல் பயிற்சி ஆலை ஒன்றை நிர்மானிப்பதற்கான நில ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்வதற்கு மன்னார் பிரதேச செயலாளரிடம் உத்தியோகப்பூர்வமாக நாங்கள் வேண்டுக்கோளை விடுவிப்போம்.

மன்னார் மாவட்டத்திற்கான இந்த முன்முயற்சிக்கு, கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் 20 ஆயிரம் அமெரிக்க டொலர் மதிப்புடைய உபகரணங்கள் அளித்துள்ளது.இதில் 13 ஜுக்கி தையல் இயந்திரங்கள், தொழில்துறைசார் துணி வெட்டும் இயந்திரம் , ஏனைய இயந்திர சாதனங்கள், தளபாடங்கள் மற்றும் கணினிகள் அடங்கும்

கொரிய அரசு உலகம் முழுவதும் உள்ள 44 நாடுகளுக்கு அபிவிருத்தி சார்ந்த உதவிகளையும் வழங்குகிறது. அத்துடன் வறுமையை ஒழிப்புக்கான அபிவிருத்தி திட்டம் இ பொருளாதார உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டம், பொதுத்துறை திறன் அபிவிருத்தி திட்டம் மற்றும் இரண்டாம் நிலை கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி கல்வி துறைகளுக்கான திட்டம் உட்பட பல திட்டங்களுக்கு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் மானியம் உதவிகளை வழங்குகின்றது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலைய நிதியுதவி திட்டத்தினால் அம்பாந்தோட்டை சர்வதேச மாநாட்டு மையம் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *