வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை கானுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமி நாதனிடம் வேண்டுகோள் முன் வைக்கப்பட்டுள்ளது.இந்த வேண்டுகோளை அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர்களான கே.என்.டக்ளஸ் தேவானந்தா,முத்தலி பாவா பாருக்,முருகேசு சந்திர குமார் ஆகியோர் கூட்டாக முன் வைத்துள்ளனர்.
வடக்கில் மீள்குடியேறும் மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று மீள்குடியேற்ற அமைச்சில் இன்று (2015-06-24) இடம் பெற்ற கலந்துரையாடலின் போது இந்த கோறிக்கை முன் வைக்கப்பட்டது.
வடக்கில் மன்னார்,வவுனியா,முல்லைத்தீவு ,கிளிநொச்சி,யாழ் மாவட்டங்களில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும்,தற்காலிக வீடுகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் தேவையான நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என்று இங்கு வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக மீள்குடியேறிய மக்கள் தமது வாழ்வாதார மேம்பாடுகளை முன்னெடுக்க அவர்கள் ஏற்கனவே விவசாயம் செய்த காணிகள் இன்னும் அரச படைகளால் விடுவிக்கப்படாமல் இருப்பதினால் அந்த மக்கள் மிகவும் சிரமப்படுவதகாவும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்புடன் பேசி அதனை மக்களுக்கு விடுவித்து கொடுக்க நடவடிக்கையெடுக்குமாறும் மீளகுடியேற்ற அமைச்சரிடத்தில் கோறப்பட்டது.இது தொடர்பில் தாம் உரிய தரப்புக்களுடன் பேசிவருவதாகவும்,பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதனை கொண்டு சென்றுள்ளதாகவும் அமைச்சர் சுவாமி நாதன் கூறினார்.
அதே வேளை வீடமைப்பு தொடர்பில் விசேட அமைச்சரவை பத்திரமொன்றினை அமைச்சரவைக்கு சமர்பிக்குமாறும்,அதனுாடாக வெளிநாட்டு நன்கொடைகளை இந்த வீடமைப்பு திட்டத்திற்கு பெற்றுக்கொள்ளும் ஆலோசனையினையும் இதன் போது மீள்குடியேற்ற அமைச்சரிடத்தில் முன் வைக்கப்பட்டது.அத்துடன் மீள்குடியேறியுள்ள மக்களுக்கான இலவச மின்சார இணைப்பு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் அமைச்சரின் கவனம் உள்ளீரக்கப்பட வேண்டும என்று இங்கு கூறப்பட்டது.
யாழ் மாவட்டத்தில் காணப்படும் கடிநீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் வகையில் குழாய் நீர் திட்டத்தை நடை முறைக்கு கொண்டுவருவது குறித்து தாம் கவனம் செலுத்திவருவதாக தெரிவித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன்,வெகுவிரைவில் வடக்கில் அனைத்து மக்கள் பிரதி நிதிகளையும்,அரச அதிகாரிகளையும் அழைத்து மீள்குடியேறியுள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் இதன் போது தெரிவி்த்தார்.