முன்னாள் அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் தெரிவுக்குழு விசாரணைகள் மூலம் பொய்ப்பிப்பு. 


இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்கினார். 


அவர் வழங்கிய சாட்சியம் வருமாறு,


கேள்வி : ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தினர். இக்காலப் பகுதியில் விசாரணை நடவடிக்கைகளுக்கு எவரேனும் அழுத்தங்களை கொடுத்தார்களா?


பதில் : ஏப்ரல் 21ஆம் திகதி சம்பவம் இடம்பெற்ற பின்னர் இராணுவத் தளபதி என்ற வகையில் இராணுவத்தினரை பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தினேன். எனக்குரிய அதிகாரங்களுக்கமைய தேடுதல்கள், விசாரணைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.


ஏப்ரல் 26ஆம் திகதி இசான் அஹமட் என்பவர் தெஹிவளை பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தார். அப்போது எனக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதின் தொலைபேசி அழைப்பை எடுத்தார். எனது தொலைபேசி இலகத்தை சகலரும் அறிவார்கள். அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோரும் கதைப்பார்கள். இதன்படி அவரும் கதைத்துள்ளார்.


இதன்போது அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு அவரை கைதுசெய்தீர்களா? எனக் கேட்டார். அது பற்றி எனக்கு தெரியாது. நான் ஆராய்ந்து கூறுவதாக கூறினேன். பின்னர் இராண்டாவது தடவையாகவும் கேட்ட போது இன்னும் தேடுவதாக கூறியிருந்தேன். இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்களிடம் குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளரா? எனக் கேட்டேன். பின்னர் கேட்ட போது அவர் கைது செய்யப்பட்டிருந்தமை தொடர்பாக உறுதியாகியிருந்தது.


அப்போது இது பற்றி இன்னும் ஒன்றரை வருடங்களின் பின்னரே இனி தொலைபேசி அழைப்பை எடுக்க வேண்டுமென கூறியிருந்தேன். பயங்கரவாதத் தடுப்பு பிரிவில் அவரை ஒன்றரை வருடங்களுக்கும் விசாரணைக்காக வைத்திருக்க முடியும். என்ற காரணத்திற்காகவே நான் அவ்வாறு கூறியிருந்தேன்.

எவ்வாறாயினும் அவர் எனக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்கவில்லை. கோரிக்கையையே செய்திருந்தார். தனது அமைச்சில் பணியாற்றும் உயர் அதிகாரியின் மகன் என்பதனால் அது தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறே கூறியிருந்தார்
கேள்வி (ரவி கருணாநாயக்க) : வேறு அமைச்சர்கள் யாரேனும் அழுத்தம் கொடுக்கவில்லையா?


பதில் : இல்லை, விசாரணைகள் இடம்பெற்ற நேரங்களில் சிலரை பற்றி தேடிப்பார்ப்போம். ஆனால், எந்த தரப்பில் இருந்தும் அழுத்தம் வரவில்லை. குறிப்பாக இந்த அமைச்சர் (ரிஷாட் பதியுதீன்) எக்காரணம் கொண்டும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று என்னால் உறுதியாக கூற முடியும்.


கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செய­லாளர் நீல் ரஞ்சித் அசோக்க பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளிக்கையில் கூறியதாவது, 


கேள்வி:- கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை­யி­னூ­டாக பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு கழிவு இரும்­புகள் வழங்­கப்­பட்­டது தொடர்பில் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது இது உண்­மையா?

பதில்:- குற்­றஞ்­சாட்­டப்­படும் கொலேசஸ் கம்­பனி 2011 இல் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.குறித்த கம்­பனி அண்­மையில் தமது பணிப்­பாளர் சபையை மாற்­றி­யுள்­ளது. கழிவு இரும்பு வகை­களை மீள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்­களில் இது பிர­தான நிறு­வ­ன­மாகும். இவர்­க­ளி­ட­முள்ள இயந்­தி­ரங்­க­ளி­னூ­டாக 11 ஆயிரம் கிலோ கழிவு இரும்­பு­களை உருக்க முடியும். அதிகம் கழிவு இரும்­பு­களை கொண்டு உற்­பத்தி செய்­வதால் இந்த நிறு­வ­னத்­திற்கு கூடுதல் கழிவு இரும்­புகள் வழங்­கப்­ப­டு­கின்­றது.குண்டுத் தாக்­குதல் சம்­வத்தின் பின்னர் மேல­திக செய­லாளர் அடங்­க­லான மூவர் கொண்ட குழு­வி­னூ­டாக விசா­ரணை நடத்­தினோம். இந்த கம்­ப­னியின் வரு­டாந்த தேவை 1200 மெற்றிக் தொன்­னாக உள்­ளது. பாது­காப்பு அமைச்­சி­னூ­டாக ஒதுக்கும் வெற்று ரவைகள் கோரப்­பட்­டி­ருந்­தது. அவை சேத­மாக்­கப்­பட்டு வழங்­கப்­பட்­டன. இரு தட­வை­களே அவை கிடைத்­தன.


கேள்வி:- குறித்த கம்­ப­னிக்கு கழிவு இரும்­பு­களை வழங்­கு­மாறு யாரா­வது கோரி­னார்­களா?


பதில்:- இல்லை.கிராம சேவகர், பிர­தேச செய­லாளர், மற்றும் மாவட்ட செய­லாளர் நிய­மிக்கும் குழு என்­ப­வற்றின் அனு­ம­தியின் பின்­னரே கழிவு இரும்பு வழங்­கப்­படும்.


கேள்வி:- சதொச வாகனங்கள் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது? இதன் உண்­மைத்­தன்மை என்ன?


பதில்:- இது தொடர்பில் மேல­திக செய­லாளர் ஊடாக விசா­ரணை நடத்­தினேன். அந்தக் குற்­றச்­சாட்டு முற்­றிலும் தவ­றா­னது.


கேள்வி:- இது தொடர்பில் அவ­ம­திப்பு வழக்கு தொடர்பாக முடி­யாதா?


பதில்:- அது யதார்த்­த­மா­காது. என்னை அவ­ம­தித்து செய்தி வெளி­யிட்­டாலும் மௌன­மாக இருப்பேன். அமைச்­ச­ருக்கு எதி­ராக தினமும் செய்­திகள் வெளி­யாகும்.


கேள்வி:- இப்­ரா­ஹீமின் நிறு­வ­னத்­திற்கு அதிக வெற்று ரவைகள் அதிகம் வழங்­கப்­பட்­டதாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.அவ்­வாறு வழங்­கு­மாறு அமைச்­சரோ வேறு யாரா­வதோ அழுத்தம் வழங்­கி­யுள்­ள­னரா?


பதில்: இல்லை. சிலர் குறித்த நிறு­வ­னத்­திற்கு வழங்­கு­மாறு பரிந்­துரை வழங்கி கடிதம் அனுப்­பி­யுள்­ளனர். ஜனா­தி­பதி செய­ல­கத்தில் இருந்தும் 500 மெற்றிக் தொன் வழங்­கு­மாறு கடிதம் வந்­தது.ஆனால் எம்­மிடம் போதி­ய­ளவு மூலப்­பொ­ருட்கள் கிடை­யாது. சாந்த பண்­டார எம்.பியும் அவ்­வாறு கடிதம் வழங்­கி­யுள்ளார். கொலேசஸ் கம்­ப­னிக்கு வழ­ங்கு­மாறு கோரப்­பட்­டாலும் எந்த அழுத்­தமும் வழங்­கப்­ப­ட­வில்லை.


கேள்வி:- சதொச நிறு­வ­னத்தில் இரக­சிய அறை­யி­ருப்­ப­தாக சில ஊழி­யர்கள் ஊட­கங்­க­ளுக்கு கூறி­யி­ருந்­தனர்.


பதில்:- சதொச நிறு­வன 9 ஆம் மாடியில் உள்ள அலு­வ­ல­கத்தை தான் இவ்­வாறு கூறி­யுள்­ளனர். அதனை யுனிடோ எனும் நிறு­வ­னத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.


கேள்வி:- இப்­ராஹீம் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்பு என கூறப்­ப­டு­கி­றது இதன் உண்மை தன்மை என்ன?


பதில்:- அவர் அமைச்­ச­ருடன் பேச்சு நடத்­தி­ய­தாக ஊட­கங்கள் கூறின. அவர் வறிய நிலையில் இருந்து உயர் நிலைக்கு வந்­தவர். அவ­ருடன் நான் தொடர்பு பட்டு செயற்­பட்­டது கிடை­யாது. எம்­முடன் தொடர்­பு­பட்­டுள்ள வர்த்­த­கர்­களில் முஸ்­லிம்கள் அதிகம். அதை தவிர எனக்கு எதுவும் தனிப்­பட்ட முறையில் தெரி­யாது.


கேள்வி:- பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உங்கள் அமைச்சு உத­வி­யுள்­ளதா?


பதில்:- இல்லை.அவ்­வாறு தெரிந்தால் உதவ மாட்டோம். இப்­ராஹீம் விட­யத்தில் தாக்­கு­தலின் பின்னர் தான் அவர் மீது பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டு­வந்­தது. நான் இன்னும் அவர் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தொடர்பு இருப்­ப­தாக நம்­ப­வில்லை. கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை கோரிய பின்னர் இரு தட­வைகள் பாது­காப்பு சபை பழைய வெற்று ரவைகள் வழங்­கின. 2017 இல் தான் முதன் முறை இரா­ணுவம் வழங்­கி­யுள்­ளது.


கேள்வி:- இன்சாப் இப்­ராஹீம் அமைச்சு வாக­னங்­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா?


பதில்:- இல்லை. அவர் பொரு­ளா­தார ரீதியில் பல­வீ­ன­மா­ன­வ­ரல்ல.அவ­ருக்கு எமது வாக­னங்­களை பயன்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இருக்­க­வில்லை.


கேள்வி:- பிர­தேச சபை உறுப்­பினர் அப்துல் ஹனூன் என்­பவர் அமைச்சின் இணைப்புச் செய­லா­ள­ராக செயற்­பட்­டுள்­ளாரா?


பதில்: இல்லை.


கேள்வி: –அமைச்சின் ஆலோ­ச­க­ராக மௌலவி ஒருவர் இருந்­தாரா?


பதில்:- இல்லை. நான் செய­லா­ள­ராக வந்த பின்னர் அவ்­வாறு யாரும் இருக்­க­வில்லை.


கேள்வி:- தாக்­கு­த­லுக்கு பயன்­ப­டுத்­திய மூலப்­பொ­ருட்­களுக்கும் கைத்­தொழில் அபி­வி­ருத்தி சபை வழங்­கிய மூலப்­பொ­ருட்­க­ளுக்கும் தொடர்பு உள்­ளதா என்று தெரி­யுமா?


பதில்:- பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ரிடம் இது தொடர்பில் எழுத்து மூலம் வின­வி­யுள்ளோம்.இது வரை எந்த பதிலும் கிடைக்­க­வில்லை.


கேள்வி:- இப்­ரா­ஹி­முக்கு உத­வு­மாறு அமைச்சர் ரிசாத் கோரி­யுள்­ளாரா?


பதில்:- ஒரு­போதும் இல்லை.


கேள்வி:- கொலன்­னாவ கைத்­தொ­ழிற்­சாலை சுற்­றி­வ­ளைப்பை எல்.ரீ.ரீ.ஈ ஆயுத களஞ்­சி­யத்தை சுற்­றி­வ­ளைத்­தது போன்று ஊட­கங்கள் காண்­பித்­தன.அது­பற்றி


பதில்:- அங்கு வேறு என்ன நடந்­துள்­ளது என்­று­தெ­ரி­யாது. நாம் வழங்­கிய மூலப்­பொ­ருட்­களை பயன்­ப­டுத்தி வெடி­பொ­ருட்கள் உரு­வாக்­கப்­பட்­டதா என்­பதை இராணுவம் இதுவரை உறுதி செய்யவில்லை.


கேள்வி:- சதொச வாக­னங்­க­ளில் இருக்கும் ஜி.பி.எஸ் தொழில்­நுட்­பத்தை கொண்டு அவை பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கைக்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ளது உறு­தி­யா­கி­யுள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.


பதில்:- அந்த தொழில்­நுட்­பத்தை பயன்­ப­டுத்தி தான் விசா­ரணை நடத்­தினோம். அவை பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. குறித்த தினம் குறித்த இடத்­திற்கு அவை பயணம் செய்­ய­வில்லை.


கேள்வி: –அமைச்சர் ரிசாத் உத்­தி­யோ­க­பூர்வ வாகனத்தை மீள கைய­ளித்­துள்­ளாரா?


பதில்:- ஆம் இரண்டு தடவை அமைச்சு பதவி வகிக்காத நிலையில் மறுநாளே அவற்றை கையளித்தார். இம்முறையும் அவ்வாறே வழங்கினார்.


தெரிவுக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று (26) சாட்சியமளிக்க தயாரான போது விசாரணைக்குழுவின் அறிவிப்புக்கு இணங்க நாளை (28) 02 மணிக்கு தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க கோரப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *