அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

ஊடகப்பிரிவு-

“அனைத்து இனங்களின் அவலங்கள் நீங்க பிரார்த்திப்போம்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

நாட்டைப் பீடித்துள்ள முழு அவலங்களும் நீங்கி, சகல இனங்களும் சந்தோஷமாக வாழ புனிதமிக்க இந்த நோன்புப் பெருநாள் தினத்தில் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

புனித நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,

“ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, நல்லமல்கள் புரிந்த அனைவரையும் “அல்லாஹ்” பொருந்திக்கொள்வானாக! பொருளாதாரத்தின் உச்ச நெருக்கடியிலும் பல கஷ்டங்களுக்கு மத்தியில் நாம் நோன்பு நோற்றோம்.

இந்த ஈகைத் திருநாளில் இல்லாதோருக்கு கொடுத்துதவும் கடமையும் எம்மீது ஏவப்பட்டிருக்கிறது. பொருளாதாரத்தின் கொடிய பிடியில் முஸ்லிம்களும், ஏனைய சமூகத்தினரும் கஷ்டப்படும் இன்றைய சூழலில், அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் மனநிலைகளில் நாம் செயற்படுவோம். இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நமது நம்பிக்கைகளை நாம் இழக்கவில்லை.

நாட்டில் இன்று பசி, பட்டினி, கஷ்டத்தினால் மக்கள் வீதிக்கு இறங்கி, ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் ஒரு  துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, இந்த நிலை மாறி,  நாட்டுக்கு நல்லதொரு ஆட்சியும், சிறந்த ஆட்சியாளர்களும் அமைய வேண்டுமென்று, நாம் இந்த பெருநாள் தினத்தில் பிரார்த்திக்க வேண்டும். அனைவருக்கும் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

By shafni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *