ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், வடமாகாண மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. இந்த பணப்புழக்கம் இந்த பகுதியில், நுகர்வு மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு ஆதரவாக அமையும். உண்மையில், இங்கே வாழ்கின்ற குடும்பங்களில் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினராவது வெளிநாடுகளில் வாழுன்றனர். இவர்களின் மூலம் மதிப்புள்ள அந்நிய செலாவணி இப்பகுதிக்கு உள்வாங்கப்படுகின்றது. இந்த மாகாணத்தில் மதிப்புமிக்க தனியார், முதலீட்டு மூலதனம் ஒரு ஆதாரமாக உள்ளது , இதனால் அன்னிய நேரடி முதலீடுகளினை அவர்கள் மத்தியில் ஈர்த்தது அவர்களின் சொந்த நிதியில் , வடக்கில் சிறந்தவொரு முதலீடு வாய்ப்புகளை எளிதாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

நேற்று (13) புதன் மாலை கொழும்பு தாஜ் சமுத்திராவில் 4 வது முறையாக யாழ் மாவட்டத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சிகான அங்குரார்ப்பண வைபவத்தினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் ரிஷாட் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்: வட மாகாணத்தில் மகிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் மூலம் பல தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக முன்னேற்றமடைந்து வருகின்றது.

இந்த பகுதியில சிறிய நடுத்தர வணிக வேளாண்மை பண்ணை, மற்றும் கடல் அறுவடை செய்ய, வலுவான நம்பிக்கைக்குறிய சாத்தியங்கள் பெரிய அளவில் காணப்படுவதாலும் அன்னிய நேரடி முதலீடு வெற்றிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்த வருடம் தைப்பொங்கலை முன்னிட்டு நடைபெறவுள்ள வடக்கின் மாபெரும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஒரு மெகா கண்காட்சியாக கருதப்படும்.

யாழ்நகரில் இலங்கையின் சிறிய நடுத்தர கைத்தொழில்களை மாகாண, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மேம்படுத்தும் வகையில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் முயற்சிகள் அமைச்சர் உதவியுடன் வடமாகாண கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சர்வதேச கண்காட்சி மற்றும் வர்த்தக சந்தை மிகப் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகவுள்ளது.

மேலும் இக் கண்காட்சியில் யாழிலிருந்தும் வெளியிலிருந்தும் பல உள்ளூர் உற்பத்தி நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளதுடன் அனைத்து துறைகள் தொடர்பான பொருட்களும் காட்சிக்குட்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது.

கடந்த வருடம் (2013) 75 ஆயிரம் பார்வையாளர்களை கொண்டிருப்பினும் இம்முறை அதை விட அதிகமானோர் கலந்து கொண்டு பயனடைவர்.
வடக்கின் பிரதான மையமாக யாழ் விளங்குவதனாலேயே அங்கு இந்த கண்காட்சியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வட மாகாண விவசாயிகள் அடங்கலாக மக்களுக்கு சிறந்ததொரு சந்தர்ப்பத்தை உருவாக்கும் நோக்குடனே இந்தக் கண்காட்சி வட பகுதி மக்களின் விவசாயத்துறையை மேலும் மேம்படுத்த ஒரு வாய்ப்பாக அமையவுள்ளதுடன், தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றார் அமைச்சர்.

அங்குரார்ப்பண வைபவத்தில் சிறிய நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள்;;, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள்;, பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்திகள் முயற்சிகள் அமைச்சு அதிகாரிகள் வடமாகாண கைத்தொழில் மற்றும் வர்த்தக சம்மேளனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *