அமைச்சர் ரிசாத் பதீயூன் தற்போது அளுத்கமைக்கு விஜயம் செய்துள்ளார். அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் உடனே அளுத்கமைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள வன்முறைகளால் முஸ்லிம்கள் அதிக இழப்புக்களை சந்தித்துள்ளனர். இவ்வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரனைகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகளிடம்; அறிவுருத்தல் வழங்கியுள்ளதாக அமைச்சர் பதியுதீன் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை காடையர்கள் கட்டவிழ்த்து விட்ட நேரத்தில் நான் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தேன். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சில முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாத் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்ற பிரச்சாரத்தை முஸ்லிம்களிடத்தில் முன்னெடுத்து வருகின்றனர்.

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட போது நான் சவூதி அரேபியாவில் இருந்தேன். அப்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மரணங்கள் காயப்பட்டோர் போன்ற களநிலரவத்தை அரப் நியூஸ் உடப்பட சர்வதேச ஊடகங்களுக்கும் சர்வதேச முஸ்லிம்  அரசியல் பிரதிநிகளிடமும் எத்திவைத்ததன் பிரதிபலனே இன்று இலங்கை முஸ்லிம்களின் விடயம் சர்வதேசத்தை எட்டியுள்ளது.

தற்போது முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகியுள்ள இந்நேரத்தில் அறிக்கைள் விட்டு சுயநல அரசியல் செய்ய முற்படாமல் பாதிக்கப்பட்ட முஸ்லிம் உடன்பிறப்புகளுக்கு தற்போது உள்ள  தேவைப்பாடுகளை நிறைவேற்ற முயற்சிகளை முன்னெடுக்குமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *