முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணியில்லாதோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்து றைப்பற்று பிரதேச ஒருங்கிணை ப்புக் குழுக் கூட்டம் செவ்வாய் க்கிழமை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மாகாண சபை உறுப்பினர்கள், அரச திணைக் களங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியில்லாத முஸ்லிம் மக்களுக்கு காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த மக்களுக்கு பொருத்தமான அரச காணியை பகிர்ந்தளிப் பதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடும் சதிகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர்.
இது விடயத்தில் எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்தில் காணியில்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் அது தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேச செயலாளரை கேட்டுக்கொள்கிறேன்.முல்லைத்தீவு கடற்பரப்பில் வெளிமா வட்டங்களைச் சேர்ந்தவர்கள் மீன் பிடிப்பதை தடை செய்வதுடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை களுக்கும் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் மீன்பிடி அமைப்பி னர்களால் கோரிக்கை விடுக்கப்பட் டது.
அவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவை நேரில் சந்தித்து முல்லைத்தீவு கடற்தொழிலாளர்களின் பிரச்சினைகள் சம்பந்தமாக பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோன்று தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வயல் காணிகளை உரிய வர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றார்.