இறுதி யுத்ததின் போது வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் 300,000 தமிழ் மக்களுக்கு உடனடியாக முன்னுரிமை கொடுத்து அவர்களுக்கு தேவையாக உதவிகளை நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது செய்தேன்..அத்துடன் அவர்களை பராமரித்து அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தேன்.

இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லீம் மக்கள் சார்பாக  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஐப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாசி முன்னிலையில் உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தாவது:

நேற்று (13) வெள்ளிக்கிழமை காலை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் ஐப்பானின் விசேட தூதுவர் யசுஷி அகாசிக்கும் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்

நீங்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் போதெல்லாம் அது இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவுகளை அதிகரிக்கசெய்கிறது.

ஜப்பானியர்களுக்கு இலங்கை ஒரு நல்ல முதலீட்டு சூழலை வழங்குகிறது.அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர துறையில் உள்வாங்கி முதலீடுகளினை மேற்கொள்;ள அவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது.

மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த 3 இலட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்தேன்.அதே நேரத்தில் புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் வெளிபுற பகுதிகளில் சுமார் 100,000 முஸ்லீம் மக்கள் இருந்தனர்.இவர்கள் இடம்பெயர்ந்த பழைய மக்கள்;இ கடந்த 23 ஆண்டுகளாக தற்காலிக முகாம்களில் இருந்து வருகின்றனர். நாங்கள் மனிக் முகாம்களில் தங்கியிருந்த தமிழ் மக்களை   முதலில் மீள்குடியேற்றம்செய்ய தொடங்கினோம். அதன் பின்னரே இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றம்; தொடர்பில் கவனம் செலுத்தினோம்.

மீள்குடியேற்ற அமைச்சானது 2011 ஆண்டு முதல் புதிய அமைச்சர் ஒருவருக்கு கையளிக்கப்பட்டதிலிருந்து வடக்கைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லீம் மக்களும் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. அவர்கள் நீண்டகாலமாகவே இடப்பெயர் அவல வாழ்வினை அனுபவித்து வந்தனர்.அவர்களின்  பிரச்சினை இன்றும் தீர்க்கப்படாமல் இருக்கின்றது. பல காரணிகள் தற்போதைய நிலைக்கு காரணம் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட இம்மக்களின் 20,000 வீடுகளும் 79 பாடசாலை கட்டிடங்களும் அழிந்துள்ளன.

அந்த நாட்களில் பல அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் பலவழிகளில் அகதிகளுக்கு உதவிகளை நல்கி வந்தனர். ஆனால் தற்போது இந்நிறுவனங்கள் சேவையில் இல்லை. கொடையாளர்களும் உதவி வழங்க தயாராக இல்லை. பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த 100,000 முஸ்லீம்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில்  இது ஒரு பாரிய பிரச்சினையினை தோற்றவிக்கும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

அமைச்சரின் உரையாடலினை தொடர்ந்து  ;தூதுவர் அகாசி பதில் அளிக்கையில்:   இலங்கையுடன் ஜப்பான் நெருக்கமாக பணியாற்றுவது  மிகவும் பெருமைக்குர்pய விடயமாகவே உள்ளது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எங்களது உதவிகள் மற்றும் உதவி திட்டங்கள் பெரும் முக்கியத்துவமாக இணைக்கப்ட்டுள்ளது.

முரண்பாடுகளின் மத்தியில் ஏற்பட்ட சேதங்களினை மீட்கும் பெரும் முயற்சிகளினை  மேற்கொண்டுள்ளோம். நாடு மீண்டும் பழைய நிலைமைக்கு மீட்கப்படும் பட்சத்தில் அங்கு அமைதி மற்றும் ஐக்கியம் உண்டாகும். இந்நிலைமையில்  நாங்கள் உங்களுக்கு துணையாக உங்கள் பக்கம் இருப்போம். பொதுவான அடிப்படையில் பல்வேறு இன குழுக்கள் மற்றும் மதங்கள் மத்தியில் நிலவும் வேற்றுமைகளினை அங்கீகரித்து   சகிப்புத்தன்மையுடன் செயற்படுவது ஒரு உணர்ச்சி பூர்வமான செயற்பாடாகும். இவை  அனைத்தும் வெற்றிபெற நான் விரும்புகிறேன்.வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள முஸ்லீம் சமூகங்கள் தொடர்பில்  நான்  அதிக  கவனம் செலுத்தி வருகின்றேன். சமாதான முன்னெடுப்புக்கள் இ புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு ஆகிய பணிகளில் முழுசெயல்முறை பங்காளராக செயற்படுவதன்; மத்தியில் நாம் முஸ்லீம் சமூகத்தின் முக்கியத்துவம் பற்றி மறந்துவிடவில்லை.

 உங்கள் இருப்புக்கள் பற்றி நாங்கள் அறிவோம். வடக்கு கிழக்கு இணைப்பு உங்கள் மத்தியில் சாதகமானதாக தென்படவில்லை என்று  நான் கவனித்தேன். அத்துடன்  அது தொடர்பில் முஸ்லீம் சமூகத்தினருக்கு; ஒரு முக்கிய பங்கு உண்டு என்றும் நான் நம்புகின்றேன்.

சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய  இரண்டு சமூகங்கள் மத்தியில் முக்கிய பிரச்சினைகள் அவர்களுக்pடையே நிலவியிருந்தால் அதன் முடிவு மிகவும்  மோசமான மோதலில்  இருந்திருக்கும்.

மூன்றாவது பங்காளரான முஸ்லீம் சமூகத்தினர்   மிகவும் நீதியாகவும் நடுநிலையாகவும் மற்றும் நேர்மையாவும் பங்காற்ற முடியும். ஆனால் பொதுவான குறிக்கோள்கள் இந்த சமூகத்தினரினை ஒற்றுமைபடுத்துமா என்று  உறுதிபடுத்த  வேண்டும்.

நான் நினைக்கிறேன் உங்களது தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது என்று. வடக்கு மக்கள் மிகவும் கடுமையான உழைப்பாளிகள். இருந்த போதும் கொழும்பு உள்ள மக்களில்  மூன்றில் ஒரு  பகுதியினர் வட பகுதியில் இருந்து வந்தவர்கள.;

ஜப்பானியர்களுக்கு இலங்கை ஒரு நல்ல முதலீட்டு சூழலை வழங்குகிறது.அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர துறையில் உள்வாங்கி முதலீடுகளினை மேற்கொள்;ள அவர்களுக்கு இலங்கை ஒரு சிறந்த இடமாக திகழ்கின்றது.

மோதலுக்கு போவதை காட்டிலும் சிக்கல்களினை  இணக்கமான அணுகுமுறை மூலம் தீர்க்கலாம் என குறிப்பிட்ட அகாசி தமிழ் தேசிய கூட்டமைபினருடன் அவரது சந்திப்பு பற்றி கூறியதாவது: இலங்கை -ஜப்பான்  இருதரப்பு நாடுகளின் செயற்பாடுகளின் பங்கு மிக்க மகிழ்ச்சியை தருவதாக கூட்டமைபினர் குறிப்பிட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வடக்கு தேர்தல்கள் நடத்த வேண்டும் என்று தனது வாக்குறுதியை நிறைவேற்றி வருகின்றமை சந்தோஷமாக இருக்கின்றது  என்றும் அவர்கள். மேலும் குறிப்பிட்டனர்.

வட மாகாண முதல் அமைச்சர் மத்திய அரசாங்கத்தோடு சில பிரச்சினைகளுடன் சிக்கி இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பில் அவர்கள் கவலையாக இருக்கின்றனர். பொறுமையாக இருந்து அரசுடன் பேச்சுவார்த்தை தொடர வேண்டும் என்று நான் அவர்களை கேட்டுக்கொண்டேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதல் அமைச்சர்  ஒரு நல்ல மனிதர் , எல்லாரும் அவரை பாராட்டுகிறார்கள், ஆனால்  அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பில் அவரது அனுபவம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. அவர் ஒரு மிக சிறந்த நீதிபதியாக இருந்து வந்துள்ளார் . அவர் தீர்வுகளை கண்டறிய புதிய வழிமுறைகளை அனுக  வேண்டும். அத்துடன் சகலரும் ஒன்றாக இணைந்து செயற்பட்டு தேவையான  உதவிகளை அவருக்கு வழங்கவேண்டும்.அவர் மீது  பிரச்சினைகளினை  சுமத்த கூடாது. மேலும் அனைவரும் அவரது பங்களிப்புக்கு இணையாக அவருடன் பழகி அவருக்கு உதவ வேண்டும்.  இந்த புதிய தலைவருடன் முஸ்லீம் கட்சிகளும்  ஒன்றுபட்டு  உழைக்க வேண்டும்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நோபுஹீடோ ஹுபூ தெரிவிக்கையில்: முரண்பாடுகளின் தீர்வுகள் எவ்வாறு தீர்க்கப்படுகின்றது என்று இலங்கை சர்வதேச சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டும. ;அத்துடன் முதலீட்டாளர் ஒரு மோதல் பகுதியில் முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள். அவர்கள் இங்கே அதை பார்க்க விரும்பவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் , தொடர்ந்தது கருத்து தெரிவிக்கையில்:

முன்னதாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் மத்தியில்  எந்த வேறுபாடுகளும் இருக்கவில்லை ஆனால் விடுதலைப்புலிகள் நம்மை வேறுபடுத்தி எங்களை விரட்டியடித்தனர்.

போர் முடிவுற்ற பின்னர் இடம்பெயர்ந்த அனைத்து தமிழர்களும் மீள்குடியேற்றப்பட்டனர். ஆனால் முஸ்லிம்கள் குடியேற்றப்படவில்லை. இடம்பெயர்ந்த 100,000 முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது ஒரு பாரிய பிரச்சினையாகும். இன்று மிகவும் முக்கியமானது கடந்தகாலம் அல்ல, ஆனால் இந்த மக்களின் இன்றைய நிலமைதான் மிகவும் முக்கியமானது. 23 வருடங்களாக இன்னல்களை அனுபவித்த பிறகும் இந்த மக்கள் இன்னும் தங்கள் சொந்த இடங்களில் குடியேற்றப்படவில்லை. இன்னமும் இடம்பெயர்ந்த மக்களாகவே வாழ வேண்டியுள்ளது. இந்ந மக்கள் குறித்து   எந்த ஊடகமோ, புலம்பெயர்ந்தவர்களோ அல்லது சர்வதேச முஸ்லிம் நாடுகள் மற்றும் சமூகங்கள் கூட இந்த விடயத்தில் பெரிதும் தவறிழைத்துள்ளது? இந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவது தொடர்பில் மௌனமாவே இருந்துவிட்டன.

ஜப்பான் இலங்கையின் ஒரு சிறந்த நண்பர் உள்ளது. நாம் பல தசாப்தங்களாக தொடர்ந்து ஜப்பானின் ஆதரவினை பெற்று வருகின்றோம் இதற்காக எமது நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்திய வீடமைப்பு திட்டத்தலும் கூட , முஸ்லிம்களின் பங்கு கொடுக்கப்படவில்லை. எமது காணி பிரச்சினை குறித்து பேசுவதற்கு  சரியான நேரம் வந்துவிட்டது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உரையாடலுக்கு பதில் அளித்த தூதுவர் அகாசி: நீங்கள் இலங்கையில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையினரின் பிரச்சினை மீது அதிக கரிசனையுடன்  உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றீகள். உங்கள் பிரச்சினைகளை அனைத்து மிகவும் சிக்கலானவை. குறிப்பாக காணிப்பிரச்சினை  சகல சமூகங்களுக்கும் முக்கியமானதொன்றாகும். இந்ந பிரச்சினை முன்னெடுக்கபடவேண்டியது கட்டாயமாகும். எனவே சில மாதங்களில் கடுமையான சூழ்நிலை வெளிப்பட முடியும் ஆகவே மிக பொறுமையாக இருந்து ஒருவருக்கொருவர் தொடர்புகளை அமைதியாக தொடங்க வேண்டும்.  இம் மக்கள்  மீது உங்கள் அக்கறை நியாயமானதாக இருப்பதால், நீங்கள் அம்மக்களின் பிரச்சனை மீது  தொடர்ந்து  கண்ணும் கருத்துமாக இருந்து அதிக கவனம் செலுத்தி ஒரு  எளிமையான அணுகுமுறையினை பின்பற்ற வேண்டும்.

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நோபுஹீடோ ஹுபூ இலங்கை மீது அதிக அக்கறையுடனும் செயற்திறனும் பங்களிப்பு செய்வதை  அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் விசேட தூதுவர் அகாசி இருவரும் இணைந்து புகழ்ந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *