சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் மூன்றாவது மிக பெரிய வர்த்தக பங்காளியாக திகழ்வுள்ள மாலைத்தீவு இலங்கையுடன் புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகளை பலப்படுத்தவுள்ளதோடு கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினை புதிப்பிக்கவிருக்கிறது என மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல் யெமீன்; தெரிவித்தார்.
மாலைதீவு வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இலங்கை – மாலைதீவு வர்த்தகமேளன அமர்வு நேற்று (21) செவ்வாய் கிழமை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில நடைபெற்றது. இவ் அமர்வில் ; கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி அப்துல் யெமீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி அப்துல் யெமீன் இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றுகையில் இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக முதலீட்டு உறவுகள் உட்பட புதிய அணுகு முறைகளிலான பொருளாதார மற்றும் வர்த்தக செயற்பாட்டு உறவுகளை பலப்படுத்தவுள்ளோம்.அத்துடன் கூட்டு பொருளாதார ஆணைக்குழுவினை புதிப்பிக்கவிருக்கின்றோம். இதேநேரம் சுற்றுலாத்துறையினை அதிகரிக்கும் நோக்கில் இருதரப்பினரும் கூட்டு உடன்படிக்கை வழிமுறைகளினை செயற்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்
மாலைதீவுக்கும் இலங்கைக்கும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்த காணப்படுவதாலேயே மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல் யெமீனும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த கூட்டு உடன்படிக்கை வழிமுறையிற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத்தந்த மாலைத்தீவு நாட்டின் புதிய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம், கைத்தொழில்,வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை விசேடமாக சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் ரிஷாட் பதியுதீன் பேசுகையில் இந்த நிகழ்வினுடாக மாலைதீவு வர்த்தக சமூகத்தினரை அரசாங்கத்தின் சார்பில் நாம் பெருமையுடன் வரவேற்கின்றோம். புதிய ஸ்திரமான அரசாங்கமொன்று மாலைதீவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்குமிடையிலான பல்தரப்பு உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும.;
இலங்கையை மொத்த பன்னாட்டு சுற்றுலா நாடுகளுடன் ஒப்பிடுகையில் இன்னும் போட்டித் தன்மையைக் கொண்ட நாடாகவே உள்ளது.
எதிர்காலத்தில் வர்த்தக முதலீட்டுத் துறையில் இலங்கையில் மாலைதீவு முதலீட்டாளர்களை பெருமளவில் எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். மாலைதீவிலிருந்து இலங்கைக்கு வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
மாலைதீவில் கடந்த சில வருடங்களாக ஸ்திரமற்ற ஒரு அரசாங்கமே இருந்து வந்துள்ளது. தற்போது புதிய பலமான அரசாங்கம் ஒன்று அங்கு உருவாகி உள்ளது. எமது தொடர்புகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மாலைதீவின் பாரிய முதலீடுகளை எதிர்பார்க்க முடியும்.
சுற்றுலாத்துறை, விவசாயம், வர்த்தகம் உட்பட மாலைதீவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்தல் மற்றும் இலங்கையின் ஹோட்டல்களுக்கு அங்கிருந்து பொருட்களைப் பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினரும் அதிக கவனம் செலுத்தப்படவேண்டும்.
இலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன.
பொருளாதார வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்பு உருவாக்கத்துக்குமான சாத்தியக் கூற்றைக் கொண்ட துறையாக சுற்றுலாத்துறையானது அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகள் மத்தியில் அதிகமாக உணரப்பட்டு வருகின்றது.
உலகமயமாதல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ள இப்புதிய பொரு ளாதார ஒழுங்கு காரணமாக சர்வதேச சுற்றுலாத்துறையின் வீச்சு விசாலித்து வருகின்றது என்றே கூறவேண்டும்.
2013 ஆண்டின்முதல் 11 மாத காலத்தில் இலங்கை சுற்றுலா துறை 10 இலட்சத்து 5 ஆயிரத்து 605 சுற்றுலா பயணிகளின் வருகையால் 2012 ஆண்டினை விட மற்றொரு சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்துவர இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. எனவே சுற்றுலாத் துறையை விருத்தி செய்யும் நோக்கில் வருடம் விஷிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
சுற்றுலாத்துறை தற்போது ஆண்டுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேல் வருமானம் ஈட்டுகின்ற உலகின் மிகப் பெரிய தொழில்களில் ஒன்றாக உள்ளது. சர்வதேச வர்த்தகத்தின் வரிசைப் படுத்தலின் படி எரி பொருட்கள், இரசாயனங்கள் மற்றும் மோட்டார் வாகன உற்பத்திப் பொருட்கள் என்பவற்றிற்கு அடுத்து நான்காவது நிலையிலுள்ள ஏற்றுமதி வகையாக சுற்றுலாத்துறை உள்ளது.
மாலைதீவுக்குள் பிரவேசிப்பதற்கான விசா நடைமுறைகள் பற்றி இந்த அமர்வில் கலந்துரையாடப்பட்டது. தொழில்நுட்பவியலாளர்களுக்கான விசாவைப் பெற்றுக்கொடுப்பதில் கவனம் செலுத்துவதாக அந்நாட்டு அமைச்சர் உறுதியளித்துள்ளார். அதேவேளை மாலைதீவிற்கான சுற்றுலா விசா பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. அதேபோன்று இலங்கைக்கான விசாவும் வழங்குவதில் சிரமங்கள் இல்லை.
எமது நாட்டில் மாலைதீவு நாட்டினர் 10,000 பேர் தற்போது உள்ளனர். இவர்களில் 1,000 பேர் நீண்ட காலமாக இலங்கையில் வாழ்பவர்கள். சுற்றுலா, கல்வி மற்றும் ஆஸ்பத்திரிகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக இங்கு தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான ஓர் உலகளாவிய ஒன்றிணைப்பின் பலமான குறிகாட்டியாகவும் சுற்றுலாதுறை உள்ளது. 2020 அளவில் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.6 பில்லியனாக இருக்குமென உலக சுற்றுலா நிறுவனம் எதிர்பார்க்கின்றது