மலேசியா ஈப்போவில் 05/09/2016 அன்று  நடைபெற்ற ‘ஆசியா டாவோஸ்’ (Davos of Asia) என்று அழைக்கப்படும் பன்ங்கோர் சர்வதேச அபிவிருத்தி கலந்துரை யாடல் (Pangkor Dialogue) நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன்இலங்கை சார்பில்  பங்கேற்றார்.

 

இது நிலையான அபிவிருத்தி இலக்குக்கேற்ப  நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட  உலகளாவிய ரீதியிலான அறிவு மற்றும் கருத்துப்  பரிமாற்றல் நிகழ்வாகும்.

 

04 வது ஆண்டாக  நடைபெறும் இந்நிகழ்வில் 15 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்துக்கொண்டன. பேராக்  இன்ஸ்டிட்யூட்  தாருல் ரிட்சென் நிறுவனம் மற்றும் மலேசியா பேராக் அரசாங்கத்தின் வடக்கு வளாக நடைமுறைப்படுத்தல் அதிகாரசபையும் கூட்டாக ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் 2000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மத்தியில், இவ்வாண்டு- 2006 நோபல் பரிசு பெற்ற, கிராமின் வங்கி நிறுவுனர் பேராசிரியர் முகமது யூனுஸ் அவர்களும் கலந்துக்கொண்டார்.

 

 

unnamed-20

 

கினி குடியரசின் அமைச்சர், பேராசிரியர் டத்தோ சனோ  கௌடப் முஸ்தபா மற்றும் இந்தியாவின் நாகாலாந்து மாநில முதல்வர் டி.ஆர் சிலைன்ங் உட்பட  வெளிநாட்டு உயர் அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துத்  தெரிவிக்கையில்:

 

நிலையான அபிவிருத்தி இலக்குக்கேற்ப  நீடித்த பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்குவிப்பதற்காக நடத்தப்பட்ட உலகளாவிய ரீதியிலான அறிவு மற்றும் கருத்துப்  பரிமாற்றல் நிகழ்வில் இலங்கை சார்பாக   கலந்துக்கொள்வதில் நான் பெருமகிழ்சியடைகின்றேன்.   இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய கூட்டு தலைமையின் கீழ், முக்கிய பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்கள் காலப்பகுதியில் நுழையும் நேரத்தில் இந்நிகழ்வு நடைபெறுகிறது, ஆகவே, எமக்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படும் என நம்புகின்றேன்.  இலங்கை வளர்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மேலும், நாட்டின் தலைமை மாறியபிறகு பொருளாதார வளர்ச்சியில் பாரிய மாற்றங்களும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

பன்ங்கோர் கலந்துரையாடல் செயலகத்தின் உயர திகாரி ரையிஸ் உவைஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:

 

நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கேற்ப  நீடித்த பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கமாக இந்தகலந்துரையாடல் நடைபெறுகிறது.  ‘நிலையான எதிர்காலத்திற்காக மீளும் தன்மையினை கட்டியெழுப்புதல்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் இக்கலந்துரையாடல்,  பரந்த நிலையான எதிர்கால இணைப்புகளை உருவாக்குவதற்காக சவால்களை இணங்காணுவதற்கும், பின்னடைவான   சமூகத்தினை  கட்டியெழுப்புவதற்கும் பயன்பெறத்தக்கதாக இருக்கும்.

 

 

unnamed-21

 

 

1000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும்  50 சர்வதேச பேச்சாளர்கள்  பங்கேற்ற இக்கலந்துரையாடல், பொருளாதாரம், சமூக கல்வி, சூழல், பெண்கள் மற்றும் இளைஞர், தொழில்நுட்பம் மற்றும்  கண்டுபிடிப்பு உட்பட ஆறு பிரிவுகளில் கவனம் செலுத்தப்பட்டது.

 

இக்கலந்துரையாடல் அனைத்து பங்குதாரர்களின் நலன்கள் மீதான நடவடிக்கைகளை எடுப்பதற்குரிய பரிந்துரைகளை வழங்குகின்றது. பன்ங்கோர் கலந்ரையாடல் சர்வதேச பங்குதாரர்கள் இடையே கூட்டிணைவிணை உருவாக்கும் ஒரு இடமெனவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.  இந்நிகழ்வு அனைத்து பங்குதாரர்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவதற்கான ஒரு தளத்தினையும் வழங்குகிறது.  உலகெங்கிலும் இருந்து வரும் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் சிந்தனையாளர்கள்  தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் வளர்ச்சி மற்றும் பேண்தகைமை தொடர்பான பிரச்சினைகள் பற்றி விவாதிக்க பன்ங்கோர் கலந்துரையாடல் முக்கியமாக விளங்குகிறது என்றார் உவைஸ்.

 

கடந்த ஆண்டு பன்ங்கோர் தீவில்  நடைபெற்ற மூன்றாவது கலந்துரையாடல் 16 நாடுகளை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed-22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *