இலங்கையின் மிகப் பெரிய மசகு எண்ணெய் விநியோகஸ்தரான செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா லிமிட்டெட் சபுகஸ்கந்தயில் புதிய நிறுவப்பட்ட லின்டெல் இண்டஸ்டிரியல் எஸ்டேட் ஆலையினுடாக, அதன் செயற்பாடுகளினை நேற்று வியாழக்கிழமை (04) ஆரம்பித்து வைத்தது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதின் உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள் முன்னிலையில் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா லிமிட்டெட் தலைவர் திருமதி. கொலீன் செர்வன்டெசு அவ் ஆலையை திறந்து வைத்தார்.
அங்குரார்பபண நிகழ்வுக்கு முன்னதாக அமைச்சர் ரிஷாட் , திருமதி. கொலீன் செர்வன்டெசுடன் சந்தித்து முக்கிய விடயங்களை பரிமாறிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
உலகளவில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாரிய வர்த்தக செயற்பாடுகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருக்கும் செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின்வலு சக்தி நிறுவனங்களில் ஒன்றாகும.; ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம் உலகளாவிய முன்னணி மசகு எண்ணெய் உற்பத்தியாளர் ஆகும்.
செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் லங்கா லிமிட்டெட் பெருந்தன்மையுடன் அதன் பயனுள்ள சமூக பொறுப்புணர்வு கொள்கைகள் மூலம் இலங்கையின் தேசிய சுகாதார, சாலை பாதுகாப்பு, விளையாட்டு மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு பங்களிப்பு செய்துள்ளது.
லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் 100சத வீத இலங்கை செயற்பாடுகள் இலங்கை அலுவலர்கள் ஊடாகவும் ஊழியர்களின் வெளிப்பாடு மற்றும் வெளிநாட்டு நாணய உழைப்புகளினை வழங்குவதற்கு அதன் மனித வள பகிர்வு ஏனைய நாடுகளுடனாகவும் காணப்படுகினறது.
செவ்ரோன் லுப்ரிகன்ட்ஸ் நிறுவனத்தின் சுமார் 50 சதத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் சந்தை பங்குகளும் ஆதிக்க செயற்பாடுகளும் அவர்கள் வசம் இருக்கின்றது. தற்போது ஆரம்பித்து வைக்கப்ட்டுள்ள புதிய கட்டிடம் வசதி, அரை தன்னியக்கத்தினை கொண்டது ஆண்டு ஒன்றுக்கு 45 ஆஆடு உற்பத்தி திறனை வழங்கக் கூடிய திறனையும் கொண்டுள்ளது. மேலும் நவீன ஆய்வக வசதிகளை உள்ளடக்கிய எண்ணெய் தளம் மூலப்பொருள் மற்றும் இறுதிநிலைப் பொருட்களை லுப்ரிகன்ட்ஸ் பண்ணையில் சேமிக்க கூடியதாக உள்ளது. 1.4 மில்லியன் லீட்டர் கச்சாவின் (மூலப்பொருள் மற்றும் இறுதிநிலைப் பொருட்கள); சேமிப்பு திறனானது அதிதிறமையான நவீன கிடங்கு அடுக்கு முறைமை அமைப்பைக் கொண்டிருக்கிறது. சமீபத்திய உலக தொழில்நுட்பத்திற்கு இணையாக அமெரிக்க நிபுணர்கள் மூலம் இவ் ஆலையானது கருத்தாக்கம் மற்றும் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரே கூரையின் கீழ் கலப்பது, உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், மற்றும் மசகு எண்ணெய், கிரீஸ்கள், பிரேக் திரவங்களை சந்தைப்படுத்தல்; ஆகிய செயற்பாடுகளில் செவ்ரான் ஈடுபடுகிறது.இதுதவிர மசகு எண்ணெய்க்கான தொழில்துறை, வணிக மற்றும் நுகர்வோர் பயன்பாடுகள். தொடர்பான தீர்வுகளை வழங்குகிறது