சமூக நல்லாட்சிக்காக பெண்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.வருடா வருடம் மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெண்களுக்கான உரிமை நாளாகவும் விசேட விடுமுறை நாளாகவும் ஐ.நா சபை பிரகடனப்படுத்தியுள்ளது.
மகள், சகோதரி, நண்பி, தாய், மனைவி, பாட்டி என பல்வேறு பாத்திரங்களைப் பிரதிபலிக்கும் பெண்ணினம் சமூகத்தின் நல்லாட்சிக்காக வழங்கும் பங்களிப்புக்காக நாம் அனைவரும் அவளுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். சமூகத்தில் அவளது கொளரவம்,உரிமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட முடியாது.
சமூகத்தில் பெண்ணுக்கு உரிய கெளரவம், பாதுகாப்பு என்பவற்றை வழங்கி அவளது சேவையை மதிப்பீடு செய்து அவளுக்கு அன்பு காட்டி அவளை முற்போக்கான சமூகப் பயணத்தில் பங்கேற்கச் செய்வது சமூகத்தின் பொறுப்பாகும்.
அதற்காக எமது தேசத்தை ஒழுக்க விழுமியங்களைப் பேணி நடக்கும், மற்றும் சட்டத்திற்கு மதிப்பளிக்கும் மக்களைக் கொண்ட ஒரு தேசமாக கட்டியெழுப்புவது அத்தியாவசியமாக இருப்பதுடன், தற்போதைய அரசாங்கம் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.
தமக்குரிய உத்தமகதாபாத்திரத்தை சிறப்பான வகையில் உணர்ந்து ஒரு சிறந்த உலகைத் தோற்றுவிப்பதற்காக தமது பங்களிப்பினை வழங்குவதற்கு இலங்கை வாழ் பெண்களுக்கு வாய்ப்புக் கிடைக்க வேண்டுமெனவும் இத்தினம் சகல வகையிலும் சிறப்பாக அமையவேண்டுமெனவும் பிரார்த்திக் கின்றேன்.