பொதுபல சேனா அமைப்பிட்ம, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரியுள்ளார். பொதுபல சேனா அமைப்பு தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.தமக்கு அவதூறு செய்தமைக்கு நட்ட ஈடாக 500 மில்லியன் ரூபா நட்ட ஈட்டை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வில்பத்து காட்டை அழித்து முஸ்லிம்களின் பிரத்தியேக வலயமொன்றை உருவாக்கி வருவதாக தம்மீது குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.வில்பத்து மற்றும் மன்னார் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
யுத்த நிறைவின் பின்னர் முஸ்லிம்கள் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.எனினும் ஒரு சில சக்திகள் அதனை குழப்ப முயற்சித்து வருவதாகவும் அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லிம்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தசாப்தங்கள் கடந்துள்ள நிலையிலும் அவர்களது அவலங்களுக்கு எவரும் குரல் கொடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பிழையான வகையில் தமக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.