புடவைக் கைத்தொழில் திணைக்களத்திற்கு( சலுசல)விஜயம் செய்த கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சராக நியமனம் பெற்றதன் பின்னர் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று உத்தியோகபூர்வ வியமொன்றினை மேற்கொண்டு இங்கு வருகைத்தந்திருந்தார்.
இங்குள்ள தொழிற்சங்க பிரதி நிதிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.அதே வேளை அதிகாரிகளுடனும் அமைச்சர் கலந்துரையாடல்களை நடத்தினார்.நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்.நிறுவனத்தின் சுதந்திர தொழிற்சங்கப் பிரத நிதிகள் முன் வைத்த பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் ஒரு வாரகாலத்திற்குள் உரிய அறிக்கையொன்றினை சமர்பிக்குமாறு திணைக்களத்தின் தலைவர் K.K சந்ரசிரியிடம் அமைச்சர் பணிப்புரைவிடுத்தார்.
திணைக்களத்தின் செயற்பாடுகளை பலமிக்கதாக மாற்றுவதுடன் கிராமிய நெசவு துறையாளர்களுக்கு சந்தை வாய்ப்பினை இத்திணைக்களத்தின் வழங்க முடியும் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் நிறுவனத்தினை முன்னெடுக்க முடியாது என்பதையும் இங்கு குறிப்பட்டார்.
அதேவேளை புடவைத் திணைக்களத்தின் மேலும் முன்னேற்றமடையச் செய்வது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.
அதே வேளை புடவை திணைக்களத்தின் களஞ்சிய சாலையினை பார்வையிட்ட அமைச்சர் அங்கு குவிக்கப்பட்டிருந்த புடவைகள் தொடர்பில் பொது முகாமையளாரிடம் விளக்கம் கோறினார்.