‘சார்க் நாடுகளில் இலங்கையின் இரண்டாவது பெரிய வர்தகராக திகழும் பாகிஸ்தான் இலங்கையுடனான இருதரப்பு வர்த்தக உறவினை ஒரு பில்லியனுக்கு குறையாதவாறு ஈட்டுவதற்கு முக்கிய நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றது’ என இலங்கைக்கான பாக்கிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் சைத் ஷகீல் {ஹசைன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விசேட அழைப்பின் நிமித்தம் கொழும்பு 3 அமைந்துள்ள அமைச்சின்; வாளாகத்தில் இன்று (26) செவ்வாய் கிழமை நடைபெற்ற வைபவத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இச் வைபவத்தில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்:
இஸ்லாமாபாத்தில் அடுத்த கூட்டு பொருளாதார ஆணைக்குழு அமர்வுகள் நடைபெறுவதற்கான ஆயுத்தங்கள் துரிதப்படுத்தப்படுகின்றன. இஸ்லாமாபாத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எங்கள் உயர்மட்ட வர்த்தக குழுவினர்களோடு உடன்பட்ட புதிய வர்த்தக முயற்சிகளை தொடர்ந்து எங்கள் புதிய வர்த்தக துறை அமைச்சர் குர்ராம் டஸ்ட்கிரி கான் கொழும்புக்கு வர தயார் நிலையில் இருக்கின்றார். இலங்கையின் புதிய மாற்றமானது பாக்கிஸ்தான்-இலங்கை உறவுகள மீதான வரலாற்று ரீதியான வேறுபட்ட மாற்றங்களை வலுவான நிலையில் முன் நோக்கி நகர்த்த முடியும். எமது இருதரப்பு வர்த்தகம் 2014 ஆம் ஆண்டில் 350 மில்லியன் அமெரிக்கடொலராக கடக்கும்போது, எமது அடுத்தகட்ட வர்த்தக குறிக்கோளாக இரு நாடுகளுக்கிடையிலான வர்தகத்தை இணைந்து 460 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதிக்கு அப்பால் ஒரு பில்லியனாக உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன. பாகிஸ்தான் முதன் முதலாக இலங்கையுடனேயே சுதந்திரவர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டது என்றும் இவ்வொப்பந்தமானது இரு நாடுகளுக்கிடையிலான பிராந்திய கொள்கையின் நல்லுறவையும், நாட்டின் பொருளாதரத்தில் நாம் கொண்;டுள்ள நம்பிக்கையையும் எடுத்துகாட்டுகின்றது என்று இலங்கைக்கான பாக்கிஸ்தானின் உயர் ஸ்தானிகர் சைத் ஷகீல் {ஹசைன் கூறினார்.
இதற்கு அமைச்சர் ர்pஷாட பதியுதீன் பதில் அளிக்கும்போது
பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானத ஜூன் மாதம் 2005 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இரு நாடுகளுக்கிடையிலான மொத்த வியாபாரம் மும்மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது 2005 ஆம் ஆண்டில் 158 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது 2013 ஆம் ஆண்டில் 462 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
பிராந்தியத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10மூ சத வீதத்ததை கொண்டுள்ள பாகிஸ்தான் சார்க் பிராந்தியத்தில் இந்தியாவுக்கு அடுத்த படியாக இலங்கையின் இரண்டாவது பாரிய வர்த்தகராக திகழ்கின்றது.இலங்கையின் பாகிஸ்தானுக்கான அதிஉயர் ஏற்றுமதியாக 2013 ஆம் ஆண்டில் 83.05 மில்லியன் மில்லியன் அமெரிக்க டொலர் பதிவாகியுள்ளது என்றும் கருத்துவெளியிட்டார்.
ஏற்றுமதியை ஊக்குவிப்பானது ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் நோக்கமாக உள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார அமர்வும் வெற்றிகரமான முயற்சியாக அமையும் என்பதில் ஐயமில்லை என்றும் அமைச்சர் தனதுரையில் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கிடையிலான இணைந்த பொருளாதார ஆணைக்குழு 1974ம் ஆண்டு நிறுவப்பட்டது,அதன் 11வது அமர்வு கொழும்பில் 2013ம் ஆண்டு நடைபெற்றது. என்று அமைச்சர் பதிலலிக்கும் தெரிவித்தார்.
இவ்வைபத்தில் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் உட்பட பாகிஸ்தான் தூதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.