யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், கலாசார ரீதியில் பாதிக்கப்பட்டு உடமைகளை இழந்த மக்களின் நலன் கருதி பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் மன்னார் புதுக்குடியிருப்பு பகுதியில் வீடமைப்புத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் கடந்த (12-10-2014) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்ந அடிக்கல் நாட்டு வைபவம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ , வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் காஷம் குரேஷி, வடமாகாண ஆளுனர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
200 வீடுகளை அமைக்கும் இவ் வீடமைப்புத்திட்டத்திற்கான போதுமான நிதி ஒதுக்கீட்டிற்கு பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இலங்கை பிரதமர் ஜயரத்னவும் ஆதரவை வழங்கியிருந்நதனர்.
மேற்படி இவ் நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றுகையில் தெரிவித்தாவது.
வடமாணத்தில் உள்ள பல மாவட்டங்களில் அபிவிருத்தி முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அபிவிருத்தி முயற்சிகள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் தலைமையிலேயே இடம்பெற்று வருகின்றது.
அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாட்டிலேயே ஒரு தலைச்சிறந்த தலைவர். நாட்டின் மீது பாசம் கொண்டவர். நாட்டில் பொருளாதாரத்ததை மேம்படுத்த வேண்டும் என்பதிலேயே தன்னை அர்ப்பணித்தவர்.
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் இலங்கை வீடமைப்புத்திட்ட செயற்பாட்டில் தேசிய திட்டமொன்று வகுக்கப்படவேண்டும் என்றும் அமைச்ச பசில் ராஜபக்ஸவின் திடசங்கட்பம்.
எப்போதும் இடம்பெயர்ந்த மக்கள் நலனில் அக்கறை காட்டி வரும் அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த போது அவருடன் நெருக்கமாக இருந்து மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிந்தது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இடம்பெயர்ந்த 350,000 மக்களை உடனடியாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கையில் தன்னை முழுமையாக ஈடுப்படுத்தினார் என்பதை யாரும் மறுக்க முடியாது.
பாக்கிஸ்தான் அரசுக்கு நாம் நன்றி கடன்பட்டுள்ளோம். பாக்கிஸ்தான் அரசு, மற்றும் பாக்கிஸ்தான் மக்கள் எப்போதும் இலங்கை மக்கள் மீது அதிக கரிசனை காட்டி வருகின்றார்கள். பாக்கிஸ்தான் இலங்கை அரசுடன் அரசியல் , பொருளாதாரம் மற்றும் வர்த்தக செயற்பாடுகளில் அதன் வலுவான ஆதரவினை வழங்கி வருகின்றது என்று இங்கே குறிப்பிட வேண்டும்.
கடந்த வருடம் மன்னார் மாவட்டத்pல் உள்ள பல பகுதிகளை பார்வையிடுவதற்கு பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் காஷிம் குரேஷினுக்கு சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவ்வேளை இடம்பெயந்த மக்களின் வசிப்பிட குறைப்பாடு விடயங்கள் குறித்து நான் ஒரு கடிதமொன்றினை அவரிடம் கையளித்ததேன். அவர் அதனை அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புடம் கையளித்தார். அதனை தொடர்ந்தே இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பாகிஸ்தான் பாணக்கார நாடும் அல்ல அங்குள்ள மக்களுக்கும் ஒழுங்கான வீடு வசதிகள் இன்றி அவஸ்தை படுகின்றார்கள்.இந்ந நிலைமையிலும் எம்மக்களுக்கு வீடுகளை கட்டித்தர முன்வந்தமை பெரிய விடயம். ஆகவே நாம் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் உரையாற்றும் போது தெரிவித்தாவது:
கடந்த பல தசாப்தங்களாக முரண்பாடு நிமித்தம் இலங்கை பல கஷ்டங்களை எதிர்நோக்கியது. அச்சமயம் அந்நாட்டு மக்கள் எதிர்கொண்ட சவால்களுக்கு ஏதோ ஒரு வகையில் எம்மாள் முடிந்தளவு ஆதரவுகளை வழங்கினோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உதவியுடன் கடந்த வருடம் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்தேன். முரண்பாடுகளின் நிமித்தம் அழிவுற்ற உடமைகளை பார்வையிட சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வருடம் பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்கள் இலங்கை வந்திருந்த போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் விரிவாக ஆராயப்பட்;டது என்றார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலையீட்டினால் இந்த வீடமைப்புத்திட்டத்திற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இவ் முயற்சிக்கு தூண்டுகோளாக இருந்த அமைச்சருக்கு மன்னார் புதுக்குடியிருப்பு மக்கள் தமது நன்றியினை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேற்படி இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் பசில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.