பலம் வாய்ந்த வி4 நாடான ஸ்லோவாக்கிய இலங்கையின் வர்த்தகத்தினை முன்னெடுத்துச்செல்ல பல வழிகளில் ஆலோசனை வழங்குகிறது!
• இலங்கையில் கோதுமை உற்பத்தியினை தொடங்க ஸ்லோவாக்கிய ஆதரவு
• இரு நாடுகளுக்கும் இடையே ஒட்டுமொத்த வர்த்தகம் 29 சத வீத அதிகரிப்பு
• இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வு
• ஸ்லோவாக்கிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கை அடுத்த விஜயம்
• தெற்காசியாவில் வணிக மற்றும் முதலீடுகளில் இலங்கைக்கென ஒரு அடித்தளமொன்றினை அமைத்துக்கொடுக்க ஸ்லோவாக்கிய ஆதரவு

தெற்காசியாவில் எங்களுடைய வணிக மற்றும் முதலீடுகளில் இலங்கைக்கென ஒரு அடித்தளமொன்றினை அமைத்துக்கொடுக்க எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. பல ஸ்லோவ்வகியா உற்பத்தியாளர்கள், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை பயன்படுத்தி, உங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை தெற்காசிய சந்தைகளில் ஈடுபடுத்துங்கள் என ஸ்லோவாக் குடியரசின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய அலுவல்கள் அமைச்சின் மாநில செயலாளர் பீட்டர் பிரியன் தெரிவித்தார்.
கடந்த வாரம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அலுவலகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் செயலாளர் பீட்டர் பிரியனுக்கு அளிக்கப்ட்ட விசேட அழைப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்லோவாக் குடியரசின் வெளியுறவு மற்றும் ஐரோப்பிய அலுவல்கள் அமைச்சின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் அமைச்சின் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் பந்துல எகொடகே மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் உயர்மட்ட அதிகாரிகள் இவ் விசேட அழைப்பில் கலந்துகொண்டு ஆழமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
பீட்டர் தொடர்ந்து அங்கு பேசுகையில் தெரிவித்ததாவது: இலங்கையுடனான வர்த்தகத்தினை புதுப்பிக்க எங்கள் நோக்கமானவுள்ளது. இது இரு பக்கங்களிலும் உள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு ஊடாக இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் நட்புறவு மற்றும் புரிந்துணர்களினை முன்னெடுத்து செல்வதற்கான நேரம் நெருங்கியள்ளது. இலங்கையின் ஐந்து மைய வளர்ச்சி மூலோபாயத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஏதாவது ஒன்றினை நாம் வழங்கவுள்ளோம.;
எங்களுடைய வர்த்தக உறவுகளை புதுப்பித்தலின் ஒருபகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மறு ஆய்வு செய்வதற்கான நேரமும் நெருங்கிவிட்டது. இப்பொழுது சமீபத்திய வளர்ச்சிகளுக்கு இணையாக அதன் திருத்தத்திற்கும் வலுவான தேவை அதிகமாக உள்ளது. வணிக மற்றும் வர்த்தக துறைகளினை ஊக்குவிக்க வேண்டுமெனில்;, நாம் எமது பொருளாதார அமைச்சர் தலைமையிலான ஸ்லோவாக்கிய வர்த்தக பிரதிநிதிகள் இலங்கை அடுத்த ஆண்டு அனுப்ப வேண்டும். தெற்காசியாவில் எங்களுடைய வணிக மற்றும் முதலீடுகளில் இலங்கைக்கென ஒரு அடித்தளமொன்றினை அமைத்துக்கொடுக்க எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. எங்கள் இலங்கையின் புகையிரத சேவைக்கான மின்மயமாக்கல் மற்றும் மின்சக்தி ஒத்துழைப்புக்கான பல வாய்ப்புகளை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.
சிறிய நடுத்தர வியாபாரம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்புகளில் இலங்கையுடன் செயற்பட மிகவும் ஆர்வமாக உள்ளோம். பல ஸ்லோவ்வாகியா உற்பத்தியாளர்கள் இங்கு முதலீடுகளினை மேற்கொள்ள தயாராக உள்ளனர். இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை பயன்படுத்தி, உங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை தெற்காசிய சந்தைகளில் ஈடுபடுத்துங்கள்
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தினை அறிமுகப்படுத்துவதற்கு நான் முன்மொழிகின்றேன். இது சம்பந்தமாக இரு நாடுகளுக்கும் இடையே பேரம் பேசுதல் ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. ஆனால் அதன் வழிமுறைகளை வேகப்படுத்த வேண்டும். தகவல் தொழில்நுட்பஇ தகவல் பாதுகாப்பு மற்றும் வியாபார நிறுவன மென்பொருள் துறைகளில் ஸ்லோவாகியா வலுவாக உள்ளது. உதாரணமாக, மென்பொருள் பாதுகாப்பு நுளுநுவு ஊழசிஇ நிறுவனம் உலக தகவல் தொழில்நுட்ப வைரஸ் எதிர்ப்பு சந்தையில் 10சத வீதத்தினை பெற்றுக்ககொள்கின்றது. எனவே நிறுவன தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப கூட்டுபங்காண்மை குறித்து எமக்கு ஆராய ஒரு வாய்ப்பு உள்ளது. இருதரப்பு மட்டங்களில் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பில் தொடர்ந்து பேச நான் பரிந்துரைக்கிறேன். வலுவான, கோதுமை விதை விருத்தி, ஆராய்ச்சிக்கான ஆதரவு மற்றும் கூட்டு முன்னுரிமை வழங்கவும் நாம் விருப்பமாக உள்ளோம் எனவும் மாநில செயலாளர் பிரியன் மேலும் கூறினார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில்: மாபெரும் தொழில்துறையினைக் கொண்ட ஸ்லோவாகியா போன்ற நாட்டிலிருந்து தொழில்துறை ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவதற்கு இலங்கைக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. உங்கள் வலுவான வர்த்தக பிரதிநிதிகள் குழாமினை அடுத்த வருடம் இலங்கைக்கு வரவேற்கவும் எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஐந்து மைய தூர நோக்கின் கீழ் உற்பத்தி கூட்டுப்பாங்காண்மையும் எதிர்பார்கின்றோம.; பலம் வாய்ந்த வி4 நாடான ஸ்லோவாக்கிய இலங்கையின் வர்த்தகத்தினை முன்னெடுத்துச்செல்ல பல வழிகளில் ஆலோசனை வழங்குகிறது
வி 4 என்பது செக் குடியரசு, ஹங்கேரி, போலந்து, ஸ்லோவேக்கியா நான்கு மத்திய ஐரோப்பிய அரசுகளின் கூட்டை குறிக்கிறது. 1991 இந்ந நான்கு நாடுகளும ஐரோப்பிய ஒன்றியத்துடன ஒருங்கிணைந்நு முன்னெடுத்துச் செல்வதற்கு தமது இராணுவ, பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை முன்னெடுக்க குழுவாக ஒன்றிணைந்தனர்.
ஸ்லோவாக்கியாவுக்கான எங்களின் பிரதான ஏற்றுமதி ஆடை ஆகும். என்னுடைய அமைச்சின் கீழ் உள்ள வர்த்தக திணைக்களம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் முயற்சிகள் மூலம், ஸ்லோவாக்கியாவுக்கான நமது ஆடை ஏற்றுமதிக்கு அப்பால் நாம், டயர்கள், தென்னை நார், ரப்பர் டியூப்ஸ் மற்றும் பிற ஜவுளி என எமது ஏற்றுமதியினை பரவலாக விரிவுபடுத்தியுள்ளோம்.
இன்னும் பெரியளவிலான, கவனிக்கப்படாத வர்த்தக சாத்தியங்கள் எம்மத்தியில் உள்ளதால் அதனை நாம் ஆராய வேண்டும். எமது இருதரப்பு மொத்த வர்த்தகம் 21 மில்லியன் அமெரிக்க டொலர் காட்டுவதால் பெரும்பாலும் நாங்கள் ஒருவருக்கொருவர் கன்னி சந்தைகளாகவே இருந்து வருகின்றோம். ஸ்லோவாக்கியாவுக்கான எமது ஆடை ஏற்றுமதி 95மூ சத வீதமாக காணப்படுகின்றது அதனால் இத் துறையில் ஸ்லோவேகியாவினை முதலீடுகளை மேற்கொள்ள அழைக்கிறோம்.
2008 ஆம் ஆண்டு வரை ஸ்லோவாக் குடியரசு மற்றும் இலங்கை இடையே வர்த்தக, மாறாக மிகக் குறைவாகவே காணப்பட்டது. அதன் பின்னர் ஸ்லோவாகியாவுக்கான இலங்கையின் ஏற்றுமதி திடீரென இரண்டு மடங்காக அதிகரித்தது. 2013 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையே ஒட்டுமொத்த வர்த்தகம் 29 சத வீத அதிகரிப்புடன் 21 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்தது. அதேவேளை இலங்கையின் ஆடைகள் மீதான ஸ்லோவாகியாவின் தேவை மீண்டும் நகர ஆரம்பித்தது. இலங்கை மற்றும் ஸ்லோவாகியா இடையே வர்த்தக சமநிலை இதுவரை இலங்கைக்கே ஆதரவாக இருந்து வருகிறது.
வருடாந்தம் ஏறக்குறைய 900,000 மெட்ரிக் டன் கோதுமையினை நாம் இறக்குமதி செய்கின்றோம். எனவே எங்களுக்கு கோதுமை உற்பத்தியினை தொடங்க உங்கள் ஆதரவு கிடைப்பின ;எங்கள் அந்நிய செலாவணி கணிசமாக நாங்கள ;காப்பாற்ற முடியும.;
2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டில், இலங்கைக்கான கோதுமை, மக்காச்சோளம் 38.5மூ ஒரு வலுவான அதிகரிப்பினை காட்டியது. 2013 ஆம் ஆண்டுக்கான கோதுமை மற்றும் மக்காச்சோள இறக்குமதிகளின் மொத்த மதிப்பு 323 மில்லியன் அமெரிக்க டொலராகும் (அதில் 900,000 மெட்ரிக் டன் கொண்ட 312 மில்லியன் அமெரிக்க டொலர் கோதுமை இருந்தது) என அமைச்சர்; பதியுதீன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *