பங்களாதேஷ்க்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளினை விரைவில் நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் பிரதம மந்திரி திருமதி. ஷேக் ஹசினா தனது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளதுடன் இருநாடுகளுக்கி டையிலான பொருளாதார உறவினைப்பலப்படுத்தும் பொருட்டு இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்க பங்களாதேஷ் முன்வந்துள்ளது.
இலங்கைக்கான உயர் ஸ்தானிகராக புதிதாக பதவியேற்று வந்துள்ள தாரிக் அஷான் க்கு இன்று புதன் கிழமை (12) ஏற்றுமதி அபிவிருத்தி சபை வளாகத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் அளிக்கப்பட்ட விசேட அழைப்பு வைபவத்தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இவ்வைபவத்தில் பங்களாதேஷ் தூதரக அதிகாரிகள் அமைச்சின் உயர் அதிகாரிகள் ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உயர் ஸ்தானிகர் தாரிக் அஷான் அங்கு மேலும் குறிப்பிகையில்: பங்களாதேஷம்; இலங்கையும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு என்பவற்றில் பிணைப்புகளை ஏற்படுத்தியுள்ளன எனினும், அவை முழுமையான ஆற்றல் வளத்தை பெறுவதற்கு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு கருத்து தெரிவிக்கையில் :
இந்த புதிய ஆரம்பம் இரு நாடுகளுக்குமிடையே பல புதிய வாய்ப்புகளை உருவாக்குவதுடன் இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை அதிகரிக்க ஒரு உறுதியான அடித்தளமாகவும் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன் எமது அரசாங்கம் இருதரப்பு முன்னேற்றங்ளை நெருக்கமாக கண்காணிக்கும.;
இரு நாடுகளின் பலம் மற்றும் தேவைகள் தொடர்பில் பங்களாதேஷ்யுடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கு இலங்கை விரும்புகிறது. குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே வர்த்தக அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் வெற்றி விளைவுகளை ஈட்டுவதற்கு பெரியளவிலான ஆற்றல்கள் காணப்படுகின்றன. எனவே நாம் தற்போதைய 139 மில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக அளவை நகர்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது. வலுவாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளின் மூலம் இருதரப்பு ஏற்றுமதி கூடையில் அடங்கியிருக்;கும் பொருட்கள் மற்றும் தொகுதிகளை முன்னோக்கி நோக்கி நகர்த்த முடியும் என்றார் அமைச்சர் ரிஷாட்.
இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டு 67 சத வீத அதிகரிப்புடன் 139.23 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.