எமது இலக்காகவுள்ள முக்கியமான கட்டுமான துறை ஆசிய பொருளாதார மையத்தினை நோக்கி நகர்கின்றது. நாட்டின் கட்டுமான துறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3மூ பங்களிப்பு செய்கிறது. இந்த துணை துறைக்கு சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வலுவான பங்கும் காணப்படுகின்றது. இலங்கையின் அதிக கேள்வி உடைய கட்டுமான துறை, ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கான ஒரு காட்டியாக மட்டுமல்லாது, ஒரு முக்கியமான பொருளாதார அடுக்காகவுமுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன தெரிவித்தார்.
கடந்த வாரம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இலங்கையின்; கட்டுமான துறையின் (மரம், யன்னலகள்; ,கதவுகள், கூரை முகப்பு மற்றும் கண்ணாடி பொருட்கள் உட்பட கட்டிடதுறை பொருட்களின்) 6வது சர்வதேச கண்காட்சி விழாவினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.;
பல தனியார் துறையினரின் இணை அனுசரனையாளர்கள் மற்றும் பங்காளர்களின் ஆதரவுடன் சர்வதேச Futurex குறூப் இச் சர்வதேச நிகழ்வினை நடாத்தியது. விசேடமான ஒரு தனிப்பட்ட இக்கண்காட்சியினை ஒரு தொடர் நிகழ்வாக நடத்துவதற்கு கைத்தொழில் அமைச்சு உடன்பட்டிருந்தது.
இந் நிகழ்வில் தொடாந்து அமைச்சர் ரிஷாட் பேசுகையில்:
நம்முடைய பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் முக்கியத்துவத்திற்கும் கட்டுமான துறையினது பக்கதுணை திகழ்கின்றது. ஆதனால் தான் நாம் இத்துறைக்கு அதிக கவனம் செலுத்துகின்றோம். கட்டுமான துறை எங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.3மூ சத வீதத்தினை பங்களிப்பு செய்கிறது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.1மூ மிதமாக உள்ளது. இலங்கையின் அதிக கேள்வி உடைய கட்டுமான துறை, ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கான ஒரு காட்டியாக மட்டுமல்லாது, ஒரு முக்கியமான பொருளாதார அடுக்காகவுமுள்ளது. அதேபோல் சர்வதேச தரத்திற்கு சமமாக காணப்படுகின்ற கட்டுமான துறை நாட்டின் முக்கிய மைய நிலைக்கு இட்டுச் செல்லவும் உதவும். கட்டுமான துறையின் முக்கியதவத்திற்கு முதலாவது காரணம் இத்துறையானது புதிய பொருளாதார வளர்ச்சியின் அத்தியாயத்தில் தெளிவான ஒரு அடையாளத்துடன் தென்படுகின்றது. இதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உறுதியான தொலை நோக்கிற்கு எனது நன்றயை தெரிவித்து கொள்கின்றேன.; மேலும் எமது வலுவான பொருளாதார வளர்ச்சிக்கான உடனடி ஆதாரம், கட்டுமான துறை செயற்பாடுகளில் இருந்து அவதானிக்க முடியும். கட்டுமான துறையின் முக்கியதவத்திற்கு இரண்டாவது காரணம் இத்துறைக்கு வலுவான சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளாகளின் வியாபார பங்கு முன்னிலையில் காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத்திற்கு முக்கிய தூண்டுகோளாக இருக்கின்றன சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் பங்களிப்பு; 65 சத வீதமான காணப்படுகின்றது.
கட்டுமான துறைக்கு மட்டும் அல்லாது சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் வியாபார நடவடிக்கைளுககு; ஆதரவு வழங்குவதோடு முக்கியமான இந்த புது முயற்சிக்கு நானும் எனது அமைச்சும்; உடன்பாடுவதில் பெருமை கொள்கிறோம்.
எமது இலக்காகவுள்ள முக்கியமான கட்டுமான துறை ஆசிய பொருளாதார மையத்தினை நோக்கி நகர்கின்றது. எங்கள் நாட்டின் புதிய சர்வதேச அத்தியாயமான கட்டுமான துறை வளர்ச்சி கேந்திர மைய நிலையை அடைய, சர்வதேச வடிவமைப்பு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இணையாக இருக்க வேண்டும.
6ஆவது சர்வதேச கண்காட்சியின் அங்குரார்ப்பண வைபவமும் கருத்துக்களமும் ஒரே நேரத்தில் நடைபெற்றதை தொடாந்து ஒரு தொழில்துறை மற்றும் கண்காட்சி நிகழ்வுக்கு மைல்கல் ஆகிறது என்பதை நாம் முன்னிலைப்படுத்த வேண்டும.; மரம், கண்ணாடி, அலுமினியம், கூரை, யன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் நம் வாழ்வில் அறிமுகமான பொருட்கள். ஆனால் இன்று, இக்; கண்காட்சி ஒரு சர்வதேச அளவில் காட்சிப்படுத்பட்டுள்ளது.
மத்திய வங்கயின் அறிக்கையின் படி, 2013 ஆம் ஆண்டில், துணை துறையான கட்டுமான துறை 14.4மூ அதிகரித்துள்ளது.; இத்துறை நெடுஞ்சாலைகள், ரயில மற்றும்; வீதி அபிவிருத்தி திட்டங்கள், மெகா ஹோட்டல் திட்டங்கள், கூட்டுரிமை வீடுகள் மற்றும் வீட்டு அலகுகள் ஊடாக இயக்கப்பட்டன.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சியின் ஒரு பகுதியாக உள்ள தேசிய தொழில் முயற்சி அதிகாரசபை சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் 2014 ஆம் ஆண்டுக்கான பல்வேறுபட்ட வியாபார முயற்சிகளுக்காக 270,000 அமெரிக்க டொலர் நிதியினை ஒதுக்கீடு செய்யதுள்ளது.
இச் சர்வதேச நிகழ்வில் Futurex குறூபின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரேம் அன்விஷி ,கைத்தொழில் அபிவிருத்தி சபை தலைவர் நவாஸ் ராஜபீன் , ஏற்றுமதி அபிவிருததி சபையின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பந்துல எகொடகே ,நிதியுதவி நிறுவனங்கள் , JAT Holdings, Alumex, and Leitz Tooling ஆகிய தனியார் துறை நிறுவன இணை அனுசனையாளர்கள் மற்றும் இணை பங்காளிகள் , பிரதிநிதிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *