அனுராதபுர நாச்சியாதீவில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளினால் அந்த பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணித்து பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், அந்தப் பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் அந்தக் கிராமத்தில் புத்தர் சிலை ஒன்றை அமைப்பதன் மூலம் இன ஐக்கியத்துக்கு பாதமாக அமையுமென தெரிவித்துள்ள அமைச்சர், அதுவும் அங்குள்ள பழைமை வாய்நத பள்ளிவாயல் ஒன்றின் அருகில் இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை நிறுத்துமாறு அவர் கோரியுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கான முன்னேற்பாடாக கடும் போக்காளர்கள் நாளை (2017.03.29) பாத யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதால் அந்த கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் எனவே பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதே வேளை இந்த முயற்சிகள் குறித்து நாச்சியா தீவு அமைப்புக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் செய்துள்ளன.