கிருஷ்ணி இஃபாம்

டிசம்பர் 29 2013

கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சானது கைத்தொழில்துறை வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் அபிவிருத்திக்கு திடகாத்திரமான தனது பங்களிப்பினை வகிக்கிறது. அத்துடன் மஹிந்தசிந்தனைகொள்கையின் கட்டமைப்பிற்குள் நாட்டின் பரந்த கொள்கைத்திட்ட வரம்புக்குள் கைத்தொழில் மேம்பாட்டிற்கும் ஏற்றுமதி அபிவிருத்தியின் முன்னேற்றுவதற்கும் நாட்டின் முக்கியபொறுப்பு வாய்ந்த அமைச்சாக திகழ்கிறது.

சர்வதேசத் போட்டித்தன்மையுள்ளமற்றும் அறிவுசார்ந்தஉற்பத்தித்துறையினைஉருவாக்குதல், கூட்டுப் பெறுமதி சேர்ந்த ஏற்றுமதிகளைஅபிவிருத்தி மற்றும்  ஊக்குவிப்பு செய்வதன் மூலம் ஏற்றுமதி வருமானத்தை உயர்த்துதல்,மற்றும் நட்புசார் வர்த்தகச் சூழலொன்றை உருவாக்குதல் எனும் நடைமுறைச் சாத்தியமான இலக்குகளைக் கொண்ட,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தொலை நோக்கு கட்டியெழுப்பப்பட்டள்ளதுடன், இந்த இலக்கினை நோக்கி,அமைச்சின்  பலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி கைத்தொழிற்துறையினை உச்சத்திற்கு செல்வதற்கு அமைச்சு வழிகாட்டுகின்றது.

ஒருநாட்டின் கைத்தொழில் துறையின் நிலையான அபிவிருத்திக்கு,அந்நாட்டின் பேரினப் பொருளாதார சூழ்நிலைகள் நேரடியான தாக்கத்தினை விளைவிக்கும். அதனால் தேசிய கைத்தொழிற்துறையின்  வளர்ச்சிக்கு உதவுக்கூடிய சூழலொன்றினை உருவாக்குவதன் மூலம் நாட்டின் நீண்ட காலநோக்கத்தினை அடையக்கூடியவாறு அரசினால் நீண்டகால மற்றும் குறுகியகால கொள்கைகள் அமுல்படுத்தப்படுதல் வேண்டும் என்பதே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்  ரிஷாட் பதியுதீனின் எதிர்பார்ப்பு.

 

சர்வதேச வர்த்தகத்துடன்  தொடர்புடைய பணிகள்

சுதந்திர  வர்த்தக ஓப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி சார்ந்த கைத்தொழிற்துறைக்கான ஏற்றுமதிச் வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு உதவுவதுடன்,தேசியகைத்தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்காக கைத்தொழில் கொள்கைமற்றும் அபிவிருத்திப் பிரிவுவணிகத் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றது.

கடல் கடந்தவர்த்தகபிரதிநிதித்துவம்

‘மஹிந்த சிந்தனை எதிர்காலநோக்கு|’ எண்ணக்கருவிற்கிணங்க  பொது – தனியார் பங்குடமை நிகழ்ச்சித்திட்டத்தின்| கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரகங்களினூடாக சர்வதேசசந்தைக்கு இலங்கை கம்பனிகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களைப் பொறுத்தவரையில் அவை ஒரு சிலவற்றினை மட்டுமே கருத்தில் கொள்வதால்,வர்த்தகதிணைக்களமானது,வெளிநாட்டு தூதரகங்களிலுள்ள வர்த்தக உத்தியோகத்தர்கள் மற்றும் இலங்கையிலுள்ள வியாபார ஆதரவு நிறுவனங்கள் ஆகியவற்றின் உதவியுடன் சர்வதேச சந்தைகளுக்கான  இலங்கையின் ஏற்றுமதிகளை விரிவாக்குவதற்கும்  பல்வகைப்படுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளினை எடுத்துள்ளது.

புதிய ஏற்றுமதிதளங்களின் அறிமுகப்படுத்தலினூடாக சர்வதேசசந்தையில் அவற்றின் சந்தைப் பங்கினை விரிவாக்குவதில் முன்னணி ஏற்றுமதியாளர்கள்  கவனம் செலுத்தும் அதேவேளையில் தற்போதிருக்கும் சந்தைகளில் இயல்பான நிலைகளை தோற்றுவிப்பதிலும் அக்கறை செலுத்துகின்றன. வர்த்தக உத்தியோகத்தர்கள் சிறிய மற்றும் நடுத்தரளவிலான ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு  குறிப்பாக தனியார் – பொதுபங்குடமை நிகழ்ச்சித்திட்டதினூடாக வெளிநாட்டு சந்தைகளைப் பெற்றுக் கொடுப்பதில் தொடர்ந்தும் உதவியளித்து வருகின்றனர.

 சர்வதேசவர்த்தகம் 2013 – ஒரு கண்ணோட்டம்

வரலாற்றில் முதல் முறையாக, இலங்கை ஒரு பில்லியன் அமெரிக்கடொலர் ஏற்றுமதி வருமானத்தினை தாண்டியுள்ளது. அது கடந்த  அக்டோபர்மாதம்  வரையிலான காலப்பகுதியில்  மட்டும் ஏற்றுமதியில் ஒருபில்லியன் அமெரிக்கடொலர் உயர்வைக்காட்டியது.உண்மையில், பற்றாக்குறையை பதிவுசெய்த  2012ஆம் ஆண்டுடன்  ஒப்பிடுகையில்  2013 ஆம் ஆண்டின் முதல் பத்துமாதங்களில் கிட்டத்தட்ட மிகையை சென்மதி நிலுவை சாதித்தது,இந்தசாதனை 2011ஆம் ஆண்டு மே மாததிலிருந்து ஏற்றுமதியில் 35.1 சதவீதம் அதிக வளர்ச்சி விகிதஅதிகரிப்பினை பதிவுசெய்தமை குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆண்டு மே மாதம் வரை ஏற்றுமதியில் திடீர் வீழ்ச்சி காணப்பட்டபோதிலும் ஐ{ன் மாதம் அதன் போக்கு அதிகரித்து மாதத்திற்கான ஏற்றுமதிவளர்ச்சி 6.8 சதவீதஅதிகரிப்புடன் 807 மில்லியன் அமெரிக்க டொலரினை பதிவுசெய்தது. இந்தசாதனை ஏற்றுமதி  செயல்திறனின் கைத்தொழில்துறை ஏற்றுமதி தொழில்துறை வருவாய் மூலம் ஈட்டப்பட்டது. இவ்வாண்டு அக்டோபர் காலப்பகுதியில் கைத்தொழில்துறை ஏற்றுமதியானது,மொத்த ஏற்றுமதியில்  74 சதவீதமாகும் இது  34 சதவீதஅதிகரிப்புடன்  771 மில்லியன் அமெரிக்க டொலரினை காட்டியது. அத்துடன்  கைத்தொழில் துறையானது ஜவுளிமற்றும் ஆடைகள் ஏற்றுமதியில் முக்கியபங்காக இருந்தது.

2013 இன் முதல் 6 மாதகாலப் பகுதியில் ஏற்றுமதி வருமானது  4,660 மில்லியன் அமெரிக்க  டொலர்களிலிருந்து 4,868 மில்லியன் அமெரிக்கடொலருக்கு வீழ்ச்சியடைந்தது. இது 2012 ஆம் ஆண்டின் ஒத்திசைவான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 208 மில்லியன்  அமெரிக்கடொலர் அல்லது  4.3 % எதிர்மறை வளர்ச்சியினைக் காட்டியள்ளது. சமீபத்தியகாலங்களில் எங்களால் எடுக்கப்ட்டமுயற்சிகள் ஏற்றுமதியினை மேம்படுத்தியள்ளது. ‘இலங்கையின் பிரதிபலிப்பு’ என்ற ஒருங்கிணைந்த சர்வதேச கண்காட்சி நிகழ்வு ஒருபாரிய வெற்றியாக அமைந்தது. முதலீடுகளுக்கான கதவுகள்   திறந்தநிலையில  சுமார் ஒரு பில்லியன்  டொலருக்கான்  வெளிநாட்டு நேரடிமுதலீட்டுக்கு சாத்தியமான நிலையில்  உலகமுதலீடுகள்  ஊடாக  37 திடமானதிட்டங்கள் உறுதிசெய்யப்பட்டது.

2020ம் ஆண்டு ஏற்றுமதி வருமானத்தினை 15 பில்லியன் டொலர்கள் வரை உயர்த்துதல் ஜரோப்பியஒன்றியம்,அமெரிக்க ஜக்கியநாடுகள் போன்றவற்றிற்கு செய்யப்படும் ஏற்றுமதியை நிரந்தரமாக  பேணுவதுடன், ஏனைய வெளிநாட்டுச் சந்தைகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி வீதத்தினை % மொத்த ஏற்றுமதிவீதத்தில்  50வீதத்திற்கும் அதிகமாக உயர்த்துதல். இலங்கை ஏற்றுமதியில்  80மூ  வீதத்தினை கைப்பற்றியிருக்கும் பிரதானஏற்றுமதிப் பொருட்கள் ஏழு தொடர்பாகவிசேடகவனத்தைசெலுத்தி,ஏற்றுமதிவருமானத்தை கணிசமானளவில் அதிகரிக்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கவனம் செலுத்திவருகின்றார்.

 

 

கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் வர்த்தகம் ரீதியான சில வெளிநாட் விஜயம் 

ஈராக்குக்கானவிஜயம் – 2013,பெப்ரவரி 19 – 23

வர்த்தக திணைக்களமானது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் ஈராக்குக்கான விஜயத்தினைஏற்பாடு செய்திருந்தது. இரண்டு தரப்பும் இலங்கையினால் ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் தரக் கட்டுப்பாட்டுவிடயங்கள் உள்ளடங்கலான இலங்கைமற்றும்  ஈராக்குக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகத்தினை விரிவாக்குவதற்கு தேவையான புதியவழிகளைக் கண்டறிவது குறித்து கலந்துரையடியுள்ளன.

துருக்கி 2013 ஆகஸ்ட் 29  செப்ரெம்பர் 02

துருக்கி, இஸ்மிரில் 2013 ஆகஸ்ட் 29 ஆம் திகதியலிருந்து செப்ரெம்பர் 02 ஆம் திகதி வரையில் நடாத்தப்பட்ட 82 ஆவது இஸ்மிர் சர்வதேசவர்த்தகசந்தையில் இலங்கையின் பங்குபற்றல் வர்த்தக திணைக்களமானது,கைத்தொழில் மற்றும் வர்த்தகஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின்  தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு 82 ஆவது இஸ்மிர் சர்வதே சவர்த்தகசந்தையில் பங்குபற்றுவதற்குத் தேவையானவசதிகளைஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

சீனா,குங்மிங்கி 2013, ஜீன் 06 -10

இலங்கையின் பிரதம மந்திரிடி.எம்.ஜயரத்னஅவர்கள் 2013 ஜீன் 06 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதிவரையில் குங்மிங்கில் நடாத்தப்பட்ட முதலாவது சீனதென்னாசிய எக்ஸ்போவிற்கு இலங்கையிலிருந்துசென்ற 120 ஏற்றுமதியாளர்களைக் கொண்ட  தூதுக்ழுவிற்கு தலைமை தாங்கி எக்ஸ் போதிறப்பு விழாவை பவத்தில் சிறப்புரையாற்றினார் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர்,பிரதமமந்திரியின் செயலாளர்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரின் செயலாளர்,வர்த்தக பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இச்சிறப்புநிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள்.இது சீனாவில் இடம்பெற்ற கண்காட்சியில் இலங்கையினால் கலந்து கொண்ட மிகப்பெரிய பங்கேற்பாகும்.

பெலாருஸ் குடியரசு 2013 ஆகஸ்ட் 26 -28

பெலாருஸ் குடியரசில் 2013 ஆகஸ்ட் 26 முதல் 28 ஆம்திகதிவரைநடைபெற்றவர்த்தகமன்றம் ஒன்றில் பங்கேற்பதற்காகபெலாருஸ் குடியரசுக்குவிஜயம் செய்தது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்களுக்கு வலுவூட்டும் நோக்கில் இந்த வர்த்தகத் தூதுக்குழு அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து இவ் விஜயத்தை மேற்கொண்டது.

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நடைபெற்ற 2013 உலகின் மிகப்பெரியஅலங்காரமீன் வளர்ப்புப் போட்டியான ‘அக்குவாராமா 2013 ‘இல் இலங்கையின் மீன் வளர்ப்பாளர் 3 விருதுகளைவென்றனர். தென்னாசியநாடுகளிலிருந்து சீனாவுக்கான இறக்குமதிகளை விரிவாக்கும் நோக்கில் வர்த்தகஅமைச்சும் யுனான் மாகாண அரசாங்கமும் கூட்டாக இணைந்து  இக்கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன.

வெளிநாடுகளிலுள்ள வர்த்தக உத்தியோகத்தர்களினால் நிறைவேற்றப்பட்ட பிரதான தொழிற்பாடுகள் பின்வருவனவற்றனை உள்ளடக்குகின்றன

 

  • இலங்கை உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை இனங்காண்பதற்கான சந்தைமதிப்பாய்வுகள் நுண்ணய்வுகளை நடாத்துதல்
  • உதவி வழங்கும் நாட்டின் வர்த்தக கொள்கை மாற்றங்கள் விசேடமாக வரிமற்றும் வரியல்லா நடவடிக்கைகள் தொடர்பில் கண்காணித்தலும் அறிக்கையிடலும்.
  • முக்கியத்துவம்  வாய்ந்த சர்வதேச வர்த்தககண்காட்சிகள் நிகழ்வுகளில் இலங்கையின் பங்குபற்றுதலினை ஏற்பாடுசெய்தல். இப்பணியானது இலங்கையின் ஏற்றுமதிகளை மேம்படுத்துவதில் அதிக பயனுறுதி வாய்ந்த நடவடிக்கைகளில் ஒன்றாககருதப்படுகின்றது
  • இலங்கையில் நடைபெறும் கண்காட்சிகள் நிகழ்வுகளில் வெளிநாட்டு வியாபார தூதுக்குழுக்களை பங்குபற்றுவதற்கு ஏற்பாடுசெய்தல்
  • அனுசரணைவழங்கும் நாடுகளில் இலங்கைதொடர்பானவிசேடஊக்குவிப்புபிரச்சாரங்களைஅரங்கேற்றுதல்
  • வர்த்தக,முதலீடுமற்றும் சுற்றுலா தூதுக்குழுக்கள் இலங்கைக்குவிஜயம் செய்வதற்கானஎற்பாடுகளையும் வியாபாரவாய்ப்புக்களைகண்டறிவதற்கானஏற்பாடுகளையும் மேற்கொள்ளுதல்.
  • வியாபார வாய்ப்புக்களை கண்டறிவதற்கு  இலங்கையிலிருந்தும்  இலங்கைக்குமான தனிநபர் வியாபார விஜயங்களை ஏற்பாடுசெய்தல்
  • அனுசரணைநாடுகளிலுள்ள வர்த்தகம்,முதலீடு மற்றும் சுற்றுலாதுறைஆகியவற்றுடன் தொடர்புடையஅதிகாரிகளுடன் வலையமைப்பினை ஏற்படுத்துதல் மற்றும் இலங்கையின் வர்த்தக மற்றும் பொருளாதார நலன்களுடன் தொடர்புடைய பிரச்சனைகள் மற்றும் விடயங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட அரசாங்க மற்றும் சர்வதேசநிறுவனங்களினை பிரதிநிதித்துவப்படுத்துதல்.
  • வெளிநாட்டுவியாபாரத்திற்கானவர்த்தக,முதலீடுமற்றும் சுற்றுலாவுடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக விளக்கமளித்தல் வெளிநாட்டுவர்த்தகர்களுடன் விஜயங்கள் மற்றும் கூட்டங்களை ஏற்பாடுசெய்தல் , வர்த்தகபிணக்குகளை தீர்த்தல் மற்றும் இலங்கையின் ஏற்றுமதியாளர்களுக்கான தொழில்நுட்ப உதவுகையினை  வழங்குதல் போன்றன.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *