தொழில் நிறுவனங்களில் தூய்மை உற்பத்திக் கண்காணிப்பு முறைமையை வலுப்படுத்தி, மாசுபாடுகள் குறைந்த உற்பத்தி ஆற்றலுடைய தொழில் நிறுவனங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கின்றது.
அந்த வகையில் 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய தூய்மை உற்பத்திக்கான தங்க விருதினை புயுPஇ நைக், போலோ இ ரால்ப் மற்றும் லாரன் போன்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக அடையாள குறி கொண்ட முன்னோடி ஆடை விநியோகஸ்தர்களான மாஸ் ஏசியாலைன் வென்றுள்ளது.
ஹபரண கறுவா லாட்ஜ், லங்கெம் சிலோன் லிமிட்டெட், விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட், யுஊடு கேபிள்கள், ஆயுளு அக்டிவ்; சினர்ஜி (அவிசாவளை), மற்றும் கோகோ கோலா பானங்கள் போன்ற நிறுவனங்கள் வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளினை வென்றனர்.
விஜயா நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்,இரண்டாவது தடவையாகவும் பாரியளவு உற்பத்திப் பிரிவிலும் சிறிய மத்தியதர தயாரிப்புத் தொழில் என்ற ரீதியில் தேசிய தரவிருதை வென்றுள்ளது.
கடந்;த வாரம் கலதாரி ஹோட்டலில் இந்த விருது வழங்கும் விழா மிகவும் கோலாகலமாக நடந்தேரியது. இந்;நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இலங்கையில் தூய்மை உற்பத்திக்கான சிறப்பான பெறுபேறுகளை ஈட்டும் நிறுவனங்களை இலங்கைத் தேசிய விருதுகள் ஆண்டுதோறும் அங்கீகரித்து வருகின்றது.
இலங்கைத் தரநிர்ணய நிறுவகம் மேற்கொள்ளும் தெரிவுமுறையின் பிரகாரம் முக்கியமான ஆறுகோட்பாடுகளின் கீழ் விண்ணப்பதாரிகள் மதிப்பிடப்படுகின்றார்கள்.
1. தலைமைத்துவம்,
2. தந்திரோபாயத் திட்டமிடல்,
3. வாடிக்கையாளரை மையப்படுத்தல்,
4. தரத்தை அளவிடும் திட்டத்தை நிர்வகித்தல்
5. அறிவு முகாமைத்துவம்
6. பணியாளர்களை மையப்படுத்துதலும் செயன்முறையை நிர்வகித்தலும்
போன்றவை விளங்குகின்றன.
இதேவேளை ஒழுங்கு விதிகளை கடைப்பிடிப்பதற்கு கைத்தொழிலுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு முயற்சிகளுள் வருகிறது.
தற்போதைய உலகளாவிய சுற்றாடற் சூழ்நிலைகளில், உலகளாவிய ரீதியில் சந்தைப்படுத்தத்தக்க, சுற்றாடலுக்கு இணக்கமான கைத்தொழில் உற்பத்திப் பொருள்களை உற்பத்தி செய்யப்படுகின்றது.
சுற்றாடலைப் பாதுகாக்கும் நோக்கத்துக்கு மட்டுமல்லாமல், கைத்தொழிலின் நிலைப்பு, வளர்ச்சி ஆகிவற்றுக்கும் மிக முக்கியமானது ஆகியுள்ளது.
இலங்கைத் கைத்தொழில் உலக சந்தைகளில் போட்டி நிலையில் இருக்க வேண்டுமெனில் அவை எதிர்காலத்தில் இக்குறித்த தேவைப்பாடுகளை நிறைவு செய்வதற்கு தயார் நிலைப்படுத்தப்படுதல் வேண்டும்
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இந்தத் தேவைப்பாடுகளுக்கு இயைபுற்றதாக கைத்தொழிலர்களை, நிலைபெறத்தக்க கைத்தொழில் அபிவிருத்தி பொருட்டு இழிவுப் பொருள்களை இயன்ற அளவு குறைத்தல், தொழிநுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் போன்ற கோட்பாடுகளை உளத்திற் பதிய வைக்கும் அதே வேளையில் தூய்மை உற்பத்திப் பிரயோகம் போன்ற திறமுறைகளைக் கைக்கொள்ளுவதற்கு ஊக்குவித்துள்ளது.
தேசிய தூய்மை உற்பத்தி நிலையம் 2002 ஆம் ஆண்டில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது. உலகில் 24ஆவது தூய்மை உற்பத்தி நிலையமாக விளங்கும் இந்த நிலையத்தின் நோக்கம் அடிப்படையில் எய்துவதற்கு கைத்தொழிலர்களுக்கு உதவுவதாகும். இந்த வேலைத்திட்டத்தின் செயற்படுத்தல்.
இவ்விருது வழங்கும் விழாவில் கலந்துக்கொண்ட பிரதம அதிதிகள் இ வெற்றியாளர்கள் இ பார்வையாளர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:
ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் விருதுகளினை வெற்றி கொள்ள அர்ப்பணிப்பு முயற்சிகள் தேவை. எனவே இவ்வாறு தேசிய தூய்மை உற்பத்திக்கான தங்கம் இ வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளினை வென்ற நிறுவனங்களுக்கு வாழ்த்துகிறேன்;.
அர்ப்பணிப்பான முயற்சிகள் என்று குறிப்பிட்டதற்கான காரணம் இலாபகரமான வியாபார கருவி இணக்க தேவையில் இருந்து மாறுபடுகின்ற தூய்மை உற்பத்தி முறைகளின் பாவனை தற்போதைய அர்ப்பணிப்பான முயற்சிக்கு காரணம.
தூய்மையான உற்பத்தி மூலம் ஒருங்கமைக்கப்பட்ட இலாபமானது அதன் முதல் ஆண்டில் (2013) 750,000 டொலர் வர்த்தக செலவு சேமிக்கபட்ட ஒரு அதிர்ச்சி தரும் தகவலை தேசிய தூய்மை உற்பத்தி நிலையம் கூறியுள்ளது.இது வரவேற்கத்தக்கது.
2015ம் ஆண்டில் இலங்கை தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் 5 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்றுக்கொள்ளும் இலக்கு எடட்ப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.கடந்த ஆண்டில் நாம் ஆடை ஏற்றுமதியின் மூலம் 4 பில்லியன் அமெரிக்க டொலரையே வருமானமாக பெற்றோம் என்று தெரிவித்த அவர், தொழிலாளர்களில் 15 சத வீதமானவர்கள் ஆடைத்தயாரிப்பு தொழிலிலேயே ஈடுபட்டு வருகிறார்கள். ஆடைத்தயாரிப்பு தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதத்தை உள்ளடக்குகின்றது.
எங்கள் நாட்டின் ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலையின் முதுகெழும்பாக விளங்குபவர்கள் நம் நாட்டு பெண்களாவர். 2010ம் ஆண்டில் நாட்டில் உள்ள 850 ஆடைத்தயாரிப்பு தொழிற்சாலைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் தொழில் புரிந்தார்கள். இது கைத்தொழிற்சாலை தொழிலாளர்களின் 85 சதவீதமாகும். ஆடைத் தயாரிப்பு கைத் தொழிற்சாலைகளுக்கு தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் என்ற சகல இன மக்களும் உரிமையாளர்களாக இருப்பது இது ஒரு தேசிய கைத்தொழில் முயற்சி என்பதை எடுத்துக் காட்டுகின்றது.
சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆடைதுறை உற்பத்தி வலுவான நிலையில் 2013 ஆம் ஆண்டு 4.3 பில்லியன் அமெரிக்க டொலரினை வருமானமாக ஈட்டியது.
குறிப்பிட்ட இந்த வளர்ச்சி எங்களுக்கு ஒரு வரலாற்று சாதனை மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொருளாதார இலக்குக்கு அமைய ஆடைதுறை உற்பத்தியை 2016 ஆம் ஆண்டு 10 பில்லியன் டொலர்களினை நோக்கி பயணமாக அமைந்துள்ளது. அதேபோல 2020 ஆம் ஆண்டளவில் மொத்த ஏற்று மதி வருமானத்தை 20 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துவது மற்றும் ஆடை உற்பத்திதுறை ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளில் ஒன்றாக நம்நாடு திகழ எமது ஜனாதிபதி நோக்காக கொண்டுள்ளார்.