துருக்கியின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் உட்பட தொழில்துறை வர்த்தக சம்மேளனம்  இலங்கையுடன்  மேலும் பல வர்த்தகம் நடவடிக்ககைகளில் ஈடுபட விரும்புவதுடன் இலங்கையின் சுற்றுலா துறையினுள் தமது முதலீடுகளினையும் மேற்கொள்ளவுள்ளது. நம் நாட்டு வர்த்தகர்கள் உலகளாவிய வர்த்தக துறையில் முன்ணிலையில் திகழ விரும்புகின்றனர். இலங்கையுடன் நமது வர்த்தகத்தனை விரிவாக்கம் செய்வதிலும் ஆர்வமாக இருக்கின்றனர் என துருக்கியின் வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கூட்டமைப்பின் தலைவரும் வாத்தக தகவல்  ஆராயும் குழுவின் பிரதிநிதியுமான ஹலில் ஜாரென் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின்  உத்தியோக பூர்வ அழைப்பின் நிமித்தம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள அமைச்சின் வளாகத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஹலில் ஜாரென் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

துருக்கியானது  140,000 மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களை கொண்டது. இதில் வர்த்தகம் மற்றும்  தொழில் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் TUSKON பெரிய மற்றும் மிக பரந்த இலாபகரமற்ற அமைப்பு. இது 7 பிராந்திய கூட்டமைப்புக்கள், 202 வர்த்தக சங்கங்கள்  52,000 மேற்பட்ட வர்த்தக  உறுப்பினர்களை கொண்டது.

துருக்கி முழுவதும் வியாபித்திருக்கும் எங்கள் பிரதிநிதித்துவம், உலகளாவிய வர்த்தக துறையில் முன்ணிலையில் திகழ விரும்பும்  நம் நாட்டு வர்த்தகர்களுடன் நாம் எம்முடைய அனுபவம் மற்றும் தகவல் தொடர்பு வலையமைப்புகளை பகிர்ந்து கொள்ள விழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் இருக்கின்றோம் என ஹலில் ஜாரென் மேலும் தெரிவித்தார்.

வர்த்தகத்தனூன வர்த்தக (டீ2டீ) நடவடிக்கைகளினை கணிசமான அளவு நாங்கள் செய்கிறோம். அத்துடன் எமது வர்த்தக மற்றும் முதலீட்டு இணைப்புகளுக்கு கவர்ச்சிகரமான இலங்கையின் சுற்றுலா துறை  எம்மை ஈர்த்துள்ளது. இலங்கையுடன் நமது வர்த்தகத்தனை விரிவாக்கம் செய்வதிலும் ஆர்வமாக இருக்கின்றோம் எனவும்  ஹலில் ஜாரென் சுட்டிக்காட்டினார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில் தெற்கு ஆசியாவில் அந்நிய வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் வகையில் TUSKON உறுப்பினர்களை எங்களுடன் கூட்டு பங்காளியாக இணைய அழைக்கின்றோம்.  முக்கியமாக இலங்கையின் மூலோபாய விநியோக நிலை மற்றும்  இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் என்பன மிக பெரிய 1.6 பில்லியன் அமெரிக்க டொலருடைய  தென் ஆசிய சந்தையில் துருக்கிய முதலீட்டாளாகளுக்கு அணுகு முறையினை பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் காணப்படுகின்றன என அமைச்சர் ரிஷாட்  தெரிவித்தார்.

உண்மையில், சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 8000 க்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு வழிமுறைகளினை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துருக்கியில் இடம்பெற்ற இஸ்மிர்  வர்த்தக நிகழ்வில் துருக்கியுடனான வெற்றிகரமான எங்களது கூட்டு;பங்கு எமது ஏற்றுமதி பொருட்ளை மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா கொள்வனவாளர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சி தெரிவிக்கிறேன் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பு20 பொருளாதாரம் 70 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்ஃ சந்தையை கொண்டது. இதில் கிழக்கு உறுப்பினர்கள் மத்தியில் துருக்கி சக்தி வாய்ந்த நேட்டோ நாடாகும்.

இலங்கை வர்த்தக திணைக்களத்தின் படி, சமீப காலமாக  துருக்கியுடனான எமது வர்த்தகம் அதிகரித்து வருகிறது. 2005 ஆம் ஆண்டில் மொத்த வர்த்தக வருமானம் கிட்டத்தட்ட 97.4 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. 2012 ஆம்  ஆண்டுடன்  ஒப்பிடுகையில் இது  இரு மடங்குகளாக 95.66 சதவீத அதிகரிப்புடனான 190.57 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது.

கடந்த 8 வருடங்களாக இலங்கை மற்றும் துருக்கி இடையே வர்த்தக சமநிலை இலங்கைக்கு ஆதரவாக இருந்து வந்ததோடு 2012 ஆம் ஆண்டு ஆறு மடங்குகளாக 14.7 மில்லியன் அமெரிக்க டொலரில் இருந்து  – 88.39 மில்லியன் அமெரிக்க டொலராக  அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *