30ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்த நாட்டினை மீட்டெடுத்து வறுமைக்கு எதிராகப் போராடி மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஜனாதிபதி அவர்கள் அறிமுகப்படுத்தும் ‘திவிநெகும’ (வாழ்வின் எழுச்சி) வேலைத்திட்டம் வறுமையற்;ற இலங்கையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காகப் பாடுபடும் ஜனாதிபதி அவர்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசீல் ராஜபக்ஷ உட்பட இத்திட்டத்தை உருவாக்க இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மகிந்த சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவிநெகும) நாடாளவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நிகழ்வு நேற்று ஞாயிறு வவுனியா பிறதேச சபை சமுர்த்தி சங்கத்தில்; நடைபெற்றது.இந்நிகழ்வில் விசேட அதிதியதாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்:

வட மாகாண மக்களை மேம்படுத்துவதற்கான மற்றொரு அபிவிருத்தி முயற்சியான வாழ்வின் எழுச்சி திட்டத்தினை (திவிநெகும) மாண்புமிகு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மூலம்
மகிந்த சிந்தனைக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுடன் வாழ்வின் எழுச்சி திட்டம் (திவிநெகும) நாடாளவிய ரீதியில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மஹிந்த சிந்தனை எதிர்கால எண்ணக்கருவுக்கு அமைய வாழ்வின் எழுச்சித் திட்டத்தை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் கால்நடை உற்பத்தித் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயக் குடும்பங்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்கு அரசாங்கம் வெற்றிகரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

உண்மையில், அமைச்சர் பசில்; ராஜபக்ஷ வட மாகாண மக்களுக்கு மட்டும் மல்லாது அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பெரிய வலிமை வாய்ந்த சக்தியாக இருக்கின்றீகள்.
யுத்தத்தின் போது வட மாகாணத்தை சேர்ந்த சிங்களம் , தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் உயிர்களை மீட்டினீர்கள்.அதன் பின்னர் தாங்கள்; அம்மக்ககளுக்கு வழங்கிய ஆதரவை எப்போதும் மறக்க மாட்டேன். அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம் பெற்ற ஒட்டுமொத்த மீள்குடியேற்ற முயற்சினை உலகமே பாராட்டியது. எனவே நீங்கள் ஒரு திறமையானவர்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வட மாகாணத்தின் அபிவிருத்தி நோக்கிய அனைத்து முயற்சிகளும் மிகவும் பாராட்டக்கூடியது. நீங்கள் தொடர்ந்து இந்த நோக்கத்திற்காக 100 க்கும் மேற்பட்ட முறை வடமாகாணத்திற்கு சிறப்பாக பயணம் செய்தீர்கள்

நாட்டை கைத்தொழிற்துறையின் மூலம் கட்டியெழுப்ப வேண்டுமென்ற மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினது சிந்தனைக்கமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட திவிநெகும எனப்படும் வாழ்வெழுச்சித் திட்டமானது இன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களின் வழிகாட்டலுடன் நாடாளவிய ரீதியில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இருவருக்கும் வட மாகாண மக்கள் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்திட்டத்தின் மூலம் சிறிய மற்றும் நடுத்தர குடிசைக் கைத்தொழில்கள் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் இதனூடாக தனிநபர் மட்டுமல்லாது நாட்டின் பொருளாதாரமும் மேம்படும.;
இதேவேளை ஐந்து மில்லியன் மக்கள் இதன் விளைவாக பயனடைவார்கள மேலும் 1.8 மில்லியன் குடும்பங்கள் திவிநெகும மூலம் வறுமைக்கு வெளியே எடுத்துச் செல்லப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இந்த மாகாணத்தின் மக்கள்; அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் இன்று முன்னெடுக்கப்படும் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் (திவிநெகும) மூலம் பெரிதும் பயனடைவார்கள் என்று எந்த சந்தேகமும் இல்லை.
2016ம் ஆண்டில் வறுமையற்ற இலங்கையை உருவாக்கும் இலக்கினை அடைவதன் ஊடாக சமுதாய சமத்துவத்தை ஏற்படுத்தி வறுமைக் கோட்டுக்குள் வாழும் மக்களை சமுகத்தில் கௌரவமான பிரஜைகளாக உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மேற்படி இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் திரு. ஐp.ஏ சந்திரசிறி வட மாகாண அதிகாரிகள் அரசாங்க அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *