திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள டெங்கு பாதிப்பு தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், ஹுஸைன் பைலா, டாக்டர் ஹில்மி மஹ்ரூப், மருத்துவ உயர் அதிகாரிகள், பொலிஸ், மற்றும் முப்படையினரும் கலந்து கொண்டனர்.