ஜப்பானிய உயர் கூட்டு நிறுவனமொன்று சீனாவிடமிருந்தான தனது தெரிவு செய்யப்பட்ட நுரைசார் (Foam) வர்த்தக நடவடிக்கைகளை இலங்கைக்கு விஸ்தரிக்கவுள்ளது. ஆடை உற்பத்திக்கெனப் பாவிக்கப்படும் திரவ நிலையில் உள்ள நுரை (Foam) இறக்குமதியில் தியாகம் செய்யப்படும் அந்நியச் செலாவணியில் இலங்கை தற்போது மில்லியன் ரூபாய்களைச் சேமித்து வருகின்றது. அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ; Tier – 1 உலகளாவிய ரீதியில் கொடிகட்டிப்பறக்கும் விநியோகஸ்தராக விளங்கிவரும் மேற்படி நிறுவனம் இது குறித்து தெரிவிக்கையில், இலங்கையில் ஆகப்பிந்திய ஜப்பானிய தொழில் நுட்பத்துடன் கூடிய உலகத்தரம் வாய்ந்த தன்னியக்க சக்தியைக் கொண்டியங்கும் மூலக உற்பத்தியொன்றைத் தாபிக்க அது தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில், ‘எமது இருதரப்பு பங்காளித்துவ வரலாற்றில் 20 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ள ஜப்பானின் INOAC நிறுவனத்தின் புதிய துணிகர வர்த்தக நடவடிக்கையானது, ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வரவிருக்கும் மிகப் பெரிய கைத்தொழில் சார் வெளிநாட்டு நேரடி முதலீகளில் ஒன்றாகுமெனக் குறிப்பிட்டார்.
கடந்த டிசம்பர் 11ஆம் திகதி ஹொரணையில் உள்ள இலங்கை முதலீட்டுச்சபை வளாகத்தில் அமைந்துள்ள திரவநிலை நுரை உற்பத்தி ஆலையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றுகையிலேயே மேற்கண்டவாறுகூறிய அமைச்சர், அங்கு தொடர்ந்தும் பேசுகையில், ஹொரணையில் உள்ள INOAC பொலிமர் லங்கா நிறுவனமே இலங்கையில் உள்ள ஒரோயொரு பொலித்தின் உற்பத்தியாளர்களுக்கும் பிலாஸ்டிக் பொருட்களின் பொலியுரேதனை தன்னியாக சாதனங்களிலும் சௌகரிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் மில்லியன் கணக்கான மார்புக்கச்சைகளில் பரந்தளவில் பாவிக்கப்பட்டு வரும் விசேடத்துவம் வாய்ந்த பிளாஸ்டிக் பொருளாக இருந்து வருகின்றது. தன்னியக்க தைத்தொழிலுக்கு சர்வதேச விநியோகஸ்தராக விளங்கி வரும் INOAC ஆனது அமெரிக்கா, கனடா, கொரியா, ஜப்பான், தென் கிழக்காசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆகியவை உள்ளிட்ட 20 நாடுகளில் இயங்கிவரும் 1926ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பெற்ற தனியான முறையில் நடத்தப்பட்டுவரும் கூட்டு நிறுவனமாகும். தற்போது இந்நிறுவனமானது உலகளாவிய ரீதியில் கலையம்சம் பொருந்திய 74 தொழிற்சாலைகளைக் கொண்டு வீறு நடைபோட்டுவருகின்றது.
எமது இருதரப்பு பங்களித்துவ வரலாற்றில் 20 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய துணிகர வர்த்தக நடவடிக்கையானது ஜப்பானிலிந்து வரவுள்ள மிகப்பெரிய கைத்தொழில் துறையான வெளிநாட்டு நேரடி முதலீட்டு; வர்த்தக நடவடிக்கைகளுள் ஒன்றாகும்.
INOAC யின் மீள் நுழைவானது உலக சந்தையிலும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் முயற்சிகளிலுமான இலங்கையின் போட்டித்தன்மைக்கான மாபெரும் ஊக்கம் தரும் செயலொன்றாக விளங்குதில் சந்தேகமேயில்லை. எனவே, பொறுப்புமிக்க மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்கள் சார்பில் INOAC கூட்டுத் தாபனத்திற்கு அதன் பூர்வாங்க நடவடிக்கைகளுக்காக நான் நன்றி தெரிவிக்கின்றேன். இலங்கையின் மூன்றாவது பெரிய மிகப்பெரிய வெளிநாட்டு முதலீடாக ஜப்பான் விளங்கிவருவதுடன், ஜப்பானுடனான எமது இருதரப்பு வர்த்தக நடவடிக்கையும் மேன்மையான எதிர்காலத்தைத் தோற்றுவி;க்கும் போக்கு ஒன்றிலேயே உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டில் ஜப்பான், சீனாவுக்கு அடுத்தபடியாக இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக விளங்கியதுடன், இந்தியா 521 மில்லியன் அமெரிக் டொலர் முதலீட்டை மேற்கொண்டதன் மூலம் அபிவிருத்திப் பங்காளியாக விளங்கியது. தற்போது 39 ஜப்பானிய தனியார் முதலீட்டு செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அவற்றில் அநேகமானவை கடந்த 1977ஆம் ஆண்டில்ஆரம்பித்த எமது திறந்த பொருளாதாரக் கொள்கை செயற்பட்டவுடன் நுழைந்தவையாகும்.
கொழும்புக்கு தனது உயர் மட்ட முகாமைத்துவ அணியினருடன் விசேடமாக வந்தடைந்த INOAC இன் ஜப்பானிய உலகளாவிய தலைவரும், குழுமத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான சொய்சி னோய் இது குறித்து தெரிவிக்கையில், ‘ INOAC என்பது, டோயோட்டா, நிஸான், ஹொன்டா, மிட்சுபிஷி, யமஹா மற்றம் கணிசமான ஏனைய புகழ்பூத்த உலகத்தரம் வாய்ந்த வர்த்தக நாமங்களுக்கென தன்னியக்க சக்தியைக் கொண்டியங்கும் ;மூலகங்களை உற்பத்திசெய்து வரும் முதல் தர நிறுவனமாகும.; மாருதி சுஸூக்கி உதிரிப்பாகம் ஒன்று திரட்டல் செயற்றிட்டம் இங்கு ஆரம்பிக்கப்படின், எமது ஜப்பானிய தன்னியக்க சக்தியைக் கொண்டியங்கும் மூலக உற்பத்தி தொழிற்பாட்டை இலங்கைக்கு கொண்டுவருவோம். ஜப்பானில் மேன்மைதங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜப்பானில் சந்தித்தபோதும் நான் இதனைக் குறிப்பிட்டேன. இலங்கையில் ஆகப் பிந்திய ஜப்பானிய தொழிநுட்பத்துடனான உலகத்தரம் வாய்ந்த தன்னியக்க சக்தியைக் கொண்டு இயங்குகின்ற மூலக உற்பத்தியொன்றை அமைப்பதற்கு நாம் தயாராகவே உள்ளோம். இது செயலுருவம் பெறுமென்றே நாம் எதிர்பார்க்கின்றோம். தலைவர் இனேயின் உரைக்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பதிலளித்துப் பேசுகையில் ‘நாம் தங்களை இருகரம் கூப்பி வரவேற்கின்றோம். எமது அரசாங்கமும் நானும் எனது அமைச்சின் அதிகாரிகளும் INOAC க்கு அதிசிறந்த முறையில் எமது உதவிகளை வழங்குவோம் INOAC போன்ற பங்காளித்துவங்கள் எமது கைத்தொழில் அபிவிருத்திக்கு மிகவும் முக்கியமானவை’ எனவும் குறிப்பிட்டார்.
டோக்கியோவி;ன் ஷினாகாவாவில் அமைந்துள்ள INOAC கூட்டுத்தலைமை நிறைவேற்று முகாமைத்துவப் பணிப்பாளரான கென் மிவா (Ken Miwa) அங்கு உறையாற்றுகையில், ‘சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் உள்ள MAS, BRANDIX, BENJI மற்றும் SILUETA போன்ற ஆடைக்கைத்தொழில் ஜாம்பவான்களுக்கென தனித்துவமிக்கதோர் உயர் தர Polyurethane நுரைத் தொகுதியொன்றை உற்பத்தி செய்து விநியோகிக்கவென INOAC கூட்டுத்தாபனம் எமது உற்பத்தியை சீனாவிடமிருந்து இலங்கைக்கு இடம் மாற்றுவதற்கான தீர்மானமொன்றை எடுத்தது. எமது உற்பத்தியின் ஆகக் குறைந்த 20 சதவீதத்தை நாம் சீனாவிடமிருந்து இலங்கைக்கு மாற்றிவாருகின்றோம்என மேலும் குறிப்பிட்டார்.