அண்மை காலமாக ஏற்றுமதியில் ஏற்பட்ட திருப்பம் காரணமாக, பாரிய சர்வதேச பிராந்தியத்தில் இலங்கை அதன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை முறைப்படி செயல்படுத்தவுள்ளது.முக்கியமாக, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை தொடர்ந்து இந்தியாவுக்கு பின்னர்; மற்றொரு ஜீ20 பொருளாதார அங்கத்துவம் கொண்ட நாட்டுடன் இலங்கை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட மேலும் தகுதிகள் பெற்றுள்ளனர் என்பதனை கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அத்துடன் எங்கள் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் விளைவாக, 40 சதவீதம் கொண்ட உலக மக்கள் தொகையில்;; இலங்கை ஏற்றுமதியாளர்கள் இலவச சலுகைகளுடன் நேரடியான அன்னிய முதலீடுகளை ஏற்படுத்த ஏதுவான வழிமுறை ஏற்பட்டுள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
‘இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கான சலுகைகளுடன் கூடிய வர்த்தக உடன்படிக்கைகள் மற்றும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை’ என்ற தலைப்பில் ஏற்றுமதி அபிவிருத்தி சபை விழிப்புணர்வு நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
கொழும்பு 2 நவம் மாவத்தையில் அமைந்துள்ள ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் கேட்போர் கூடத்தில்; நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேற்படி இந்நிகழ்வில் இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பி. குமரன் மற்றும் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலய முதன்மை செயலாளர் ஹசன் அலி சைய்கம உட்பட் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள் விசேட அதிதிகளாக கலந்துக்கொண்டனர்.
அமைச்சர் ரிசாட் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது: தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செயல்முறையின் கீழ் 1.64 பில்லியன் கொண்ட விசாலமான தென் ஆசிய சந்தையினை இலங்கை நெருங்கியுள்ள அதேவேளை இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடனான இலங்கையின் இருதரப்பு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை சார்க் பிராந்தியத்திற்குள்ளே 1.3 பில்லியனுக்கு அதிகமான சந்தை வாய்பினை அணுக வழிவகுத்துள்ளது. (இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கு மேலதிகமாக 296 மில்லியன்). மற்றும் யுPவுயு உடன்படிக்கையின் கீழ் காணப்படுகின்ற செயல்முறை, இலங்கையினை சீனா மற்றும் கொரிய சந்தைகளில் இணைக்கவும்; வழிவகுத்துள்ளது. மற்றொரு 1.39 பில்லியன் கொண்ட சந்தையில் 43 சத வீத அன்னிய நேரடி முதலீடு பெறுவதற்கான வாய்பினை அணுகுவதற்கும் வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஏற்றுமதி 6.2சத வீத எழுச்சியுடனான 10397 மில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டியுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள பொருளாதாரத்திற்கான புதிய ஸ்திரமான சூழ்நிலை முதலீடு மற்றும் வர்த்தகத் துறைகளில் பாரியளவிலான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளுக்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன், இந்த இரு நாடுகளினது பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் இப்போது 8500 மேற்பட்ட உற்பத்திகளினை வரி கட்டணமின்றி ஏற்றுமதி செய்ய முடியும். இந்த சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான அங்கிகாரம் செயல்படுத்தப்பட்ட பின்னர் உண்மையில், கணிசமான வர்த்தக வளர்ச்சி காணப்பட்டது என அமைச்சர் தெரிவித்தார்.
சார்க் பிராந்தியத்தில் இந்தியா இலங்கையின் மிக பெரிய வர்த்தக பங்காளியாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டில் 4 பில்லியன் அமெரிக்க n;டாலராக காணப்பட்டது. அதேவேளை 2001 ஆம் ஆண்டில் 672 மில்லியன் அமெரிக்க n;டாலர் வர்த்தக நடவடிக்கையின் மூலம் 508மூ பெரியளவிலான அதிகரிப்பு இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விளைவாக ஈட்டப்பட்டது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் மூலம் இலங்கை நன்மை அடைந்துள்ளது.
இலங்கைக்கு ஆதரவான வர்த்தகத்திற்கு விசேட கவனம் செலுத்தி இரு நாடுகளும் (இந்தியா –பாகிஸ்தான்) 3 ஆண்டு காலப்பகுதிக்குள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கினை கொண்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக சார்க் பிராந்தியத்தில் பாக்கிஸ்தான் இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகும். இரு நாடுகளுக்கும் இடையே 2005 ஆம் ஆண்டு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு பின்னர் இருதரப்பு வர்த்தகத்தில் கணிசமான வளர்ச்சி காணப்படுகிறது.
2005 ஆம் ஆண்டில் 158 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்ட மொத்த வர்த்தகம் 2012 ஆம் ஆண்டு 433.69 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்து காணப்பட்டது.
எனினும், இந்த வர்த்தக ஒப்பந்த முன்னேற்றங்கள் இருந்த போதிலும்; , என்றும் காணாத வர்த்தக சாத்தியங்கள் எம்மிடம் உள்ளன அவற்;றை நாம் ஆராய முடியும் என நம்புகிறேன். சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் மேலும் பல உற்பத்திகள் தயார் நிலையில் உள்ளன.ஆனால் இலங்கை ஏற்றுமதியாளர்கள் அவற்றை பயன்படுத்த தவறிவிட்டனர். தற்போது அதனை பயன்படுத்துவதற்கான நேரம் நெருங்கிவிட்டது. எங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேசிய ஏற்றுமதி இலக்கு 2020 ஆம் ஆண்டளவில் 20 பில்லியன் அமெரிக்க டொலரினை ஈட்டுவதாகும்.மற்றும் 2020 ஆண்டளவில் ஆடை ஏற்றுமதியினை 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக திரட்டுவதாகும.;
முக்கியமாக, சுதந்திர வர்த்தக உடன்படிக்கையினை தொடர்ந்து இந்தியாவுக்கு பின்னர்; மற்றொரு ஜீ20 பொருளாதார அங்கத்துவம் கொண்ட நாட்டுடன் இலங்கை ஏற்றுமதியாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட மேலும் தகுதிகள் பெற்றுள்ளனர் என்பதனை கூறிக்கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.அத்துடன் எங்கள் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் விளைவாக, 40 சதவீதம் கொண்ட உலக மக்கள் தொகையில்;; இலங்கை ஏற்றுமதியாளர்கள் இலவச சலுகைகளுடன் நேரடியான அன்னிய முதலீடுகளை ஏற்படுத்த ஏதுவான வழிமுறை ஏற்பட்டுள்ளது எனவும் அமைச்சர் ரிசாட் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் பி குமரன், நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தாவது, இந்திய -இலங்கைக்கான ஒத்துழைப்பு பல்வேறு துறைகளில் காணப்படுகின்றது.
பல ஆண்டுகளாக பலப்படுத்தி வந்த இந்திய-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் கீழ் இரு நாடுகளுக்கிடையே பரஸ்பர முதலீடு உயர்ந்துள்ளது. அதேபோல உலக வர்த்தகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி;, கப்பல் கட்டுமானம், கப்பல் நிர்மானம் ,கட்டிட கட்டுமானம்;, நிதி சேவைகள், கல்வி மற்றும் சுற்றுலா போன்ற வாய்ப்புகளையும் எம்மால் பார்க்க கூடியதாகவுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2 பில்லியன் அமெரிக்க டொலர் கொண்ட பல்வேறு துறைகளுக்கான முதலீடுகள் நிகழவுள்ளன. போக்குவரத்து ,விருந்தோம்பல் ,தொலைத்தொடர்பு,வங்கி மற்றும் நிதி, ஹோட்டல்கள், ரேணுகா நிறுவனத்தின் சர்க்கரை சுத்திகரிப்பு, னுயசடிரச கூட்டுத்தாபனத்தின் பலச்சாறு செயலாக்க திட்டம், ரியல் எஸ்டேட் திட்டங்களுடாக டாடா வீடமைப்பு திட்டம் , க்ரிஷ் திட்டம் மற்றும் 600 மில்லியன் வலு கொண்ட சம்பூர் மின் நிலையதிட்டம் ஆகியனவே வெகுவிரைவில் மேற்கொள்ளவுள்ள சில முதலீடுகள் ஆகும்.
மறுபுறம் இந்தியாவில் இலங்கை முதலீடுகள் மிகவும் விரிவடைந்து வருகின்றன.உதாரணமாக டீசயனெiஒ இன் 01 பில்லியன் அமெரிக்க டொலருக்கான பாரிய திட்டம் எங்கள் விசாகப்பட்டின ஆடை நகரில் உள்ளது. இப்போது சீனாவும் எங்கள் விசாகப்பட்டினத்தின் ஆடை நகரில் பல உற்பத்தி ஆலைகளில்; முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
மேற்படி இந்நிகழ்வில் பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலய முதன்மை செயலாளர் ஹசன் அலி சைய்கம உட்பட் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகளும் உரையாற்றினார்கள்.