அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ சந்தைகளை கைப்பற்றி வரும் சிறிய, நடுத்தர இளம் இலங்கை ஏற்றுமதி தொழில்முயற்சியாளாகள் தென் மாகாண ஏற்றுமதி விருதை பெற்றுக்கொண்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் அர்ப்பணிப்பான முயற்சிகள் மற்றும் ஈடுபாடுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தினை நோக்கியதாக உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த வாரம் (30-10-2014) மாத்தறை சணாய ஹோட்டலில் இடம்பெற்ற தென் மாகாணத்திற்கான சிறந்த சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளார்களுக்கான விருதை வழங்கும் வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரிஷாட் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் வைபவத்தினை அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய தொழில் முயற்சி; அபிவிருத்தி அதிகார சபையும் ஹம்பாந்தோட்ட மாவட்ட வர்த்தக சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்தன.
பிராந்திய சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளார்கள் மற்றும் வணிக சமூகத்தினரை ஊக்குவிக்கும் பொருட்டும் அவர்களை புதிய வர்த்தக முயற்சியை அடையக்கூடிய ஒரு பாதை உருவாக்குவதற்கும் நவீன வணிக தொhழில் நடைமுறைகள் பின்பற்றவும் தொழில் முனைவோரை உயர் மட்டத்தில் கொண்டு செல்வதற்கும்இவ் விருது தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டுக்கான தென் மாகாண இளம் ஏற்றுமதி வர்த்தக தொழில்முயற்சியாளாருக்கான விருதினை அபேரட்ண (MMM Wakeel – the Southern tea industrialist and Proprietor, Pathma Group) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் ரிஷாட் இவ்விருது வழங்கும் வைபவத்தில் தொடர்ந்து தெரிவிக்கையில்:
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 65 சத வீதம் பங்களிப்பு சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளாகளினால் வழங்கப்படுகின்றது. தென் மாகாணத்தின் சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாளர்களுக்கு தமது தொழில் முயற்சியினை ஆரம்பிக்க அல்லது தற்போது கொண்டு நடத்தும் தொழில் முயற்சியை வியாபிக்க தேசிய தொழில் முயற்சி; அபிவிருத்தி அதிகார சபை பக்கபலமாக செயற்படுகின்றது.
அமெரிக்க மற்றும் மெக்ஸிக்கோ சந்தைகளை கைப்பற்றி வரும் சிறிய, நடுத்தர இளம் இலங்கை ஏற்றுமதி தொழில்முயற்சியாளாகள் தென் மாகாண ஏற்றுமதி விருதை பெற்றுக்கொண்டமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் அர்ப்பணிப்பான முயற்சிகள் மற்றும் ஈடுபாடுகள் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தினை நோக்கியதாக உள்ளது எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.
இந்த விருது வழங்கும் வைபவத்தில் அமைச்சின் அதிகாரிகள் கீழ் செயற்படும் தேசிய தொழில் முயற்சி; அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் ஹம்பாந்தோட்ட மாவட்ட வர்த்தக சம்மேளன உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.