கிருஷ்ணி கந்தசாமி இஃபாம்:
வில்பத்து விவகாரம்…. என்றது யாவருக்கும் ஞாபகம் வருவது அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தான். வில்பத்தில் அத்துமீறிய குடியேற்றம் தொடர்பில் இனவாத அமைப்புக்களால் இலங்கை முஸ்லிம்கள் மீதான கடும் போக்கு தாக்குதல்களையும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றசசர்ட்டுக்களை கடும் போராட்டத்திற்கு மத்தியில் போராடி உண்மையை வெளிக்ககொண்டு வந்தவர் அமைச்சர் ரிஷாட.; இந்த சர்ச்சைக்குரிய வில்பத்து விவகாரமாக மீண்டும் தாண்டவம் ஆடுகின்றது.
கடந்த சில வாரங்களாக சகோதர தனியார் தொலைக்காட்சி ஒன்றிலும் சமூக இணையத்தளங்களிலும் பத்திரிகையிலும் வில்பத்து சரணாலயத்தினுள் காணப்படும் காட்டுப் பகுதியினை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் அழிப்பதாகவும்,இதில் பாகிஸ்தான் பிரஜைகள் மட்டும் ஏனைய மாவட்ட மக்களை கொண்டுவந்து குடியேற்றுவதாகவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.
உண்மையில் வில்பத்துக்கும் அமைச்சர் ரிஷாடுக்கும் என்ன தொடர்பு…இதற்கான பதில் கடந்த வியாழக்கிழமை (08.05.2015) கொழும்பு; 3 இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் ஒழுங்கு செய்ப்பட்டிருந்ந ஊடகவியலாளர் மகாநாட்டில் வைத்து அமைச்சர் ரிஷாட் நேரயாகவே ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கடந்த வருடம் பாரிய பிரச்சினையாக எழுந்த வில்பத்து விவகாரம் கடந்;த ஆட்சியிலேயே ஜனாதிபதி செயலணி பிரதேச செயலாளர்,அரசாங்க அதிபர்.வனபரிபாலன திணைக்கள அதிகாரிகள்,வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,பாதுகாப்பு தொடர்பான அதிகாரிகள் ஆகியோரை கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அதே வருடமே முடிவுக்கு கொண்டு வரப்பட்டடு தனிந்தது. திடீரென் இவ்விவகாரம் மீண்டும் தாண்டவம் ஆட தொடங்கியமை கேள்வி குறியாகியுள்ளது. இதன் பின்ணனி என்ன? சில முஸ்லிம் அரசியல் வாதிகள் பொதுமக்கள் முன்வைத்த கருத்துக்கள் அமைச்சர் ரிஷாட் ஊடகவியலாளர் மகாநாட்டில் முன்வைத்த கருத்துக்களுக்கு ஒத்ததாகவே காணப்பட்டது. இக்கருத்துக்களே இவை…..
• மீள் குடியேற்றம் என்பது; தமிழ் முஸ்லிம் மக்களது விவகாரம். கடந்த 23 வருடங்களாக இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் வடக்கில் தமது சொந்தக்காணிகளில் மீள் குடியேறும் போது அதனை மறைமுக தடுப்பதற்காகவே வில்பத்து காடு அழிக்கப்படுவதாக இனவாதிகளின் பிரசாரம்
• நாட்டில் மீண்டும் முஸ்லிம் இனவாதத்தை தூண்டி விட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்திற்கான முன்னெடுப்பு
• ;அதனோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் நாட்டில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மைத்திரி – ரணில் நல்லாட்சியை பொறுத்துக்கொள்ள முடியாத பெரும்பான்மை இனவாத சக்திகள் நாட்டுக்குள் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாதத்தை தூண்டி விடும் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது
• இதன் மூலம் ஜனாதிபதி மைத்திரியின் ஆட்சியை கவிழ்ப்பதே இச்சதிகாரர்களின் திட்டமாகும்.
• அதேனோடு முஸ்லிம் மக்களின் பிரதிநிதியான அமைச்சர் ரிஷாட் மேற்கொள்ளும் அபிவிருத்தி முயற்சிகள் மனிதாபிமான செயற்பாடுகள மீதான முன்னெடுப்புக்களை தடுப்பதற்கு குறித்தவொரு குழுவினரால் திட்டமி;ட்ட அரசியல் தாக்குதல்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன்
“இனவாதிகளால் தன் மீது அநாவசியமாக சுமத்தப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் நான் எனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் அதனை ஒரு சாவலாக ஏற்றுக்கொள்கின்றேன். வில்பத்து சரணாலய வனப்பகுதி அழிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் மக்கள் மற்றும் பாகிஸ்தான் பிரஜைகளும் குடியேற்றப்படுவதாக எவ்விதமான ஆதாரங்களும் இல்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன.அதனோடு என்னையும் தொடர்புபடுத்தியுள்ளன.இது ஊடக தர்மத்தை மீறும் ஒரு செயலாக கருதுகின்றேன். குறிப்பாக இந்த ஊடகங்கள் காட்டும் ஒளி வடிவத்தின் நம்பகத்தன்மை தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இந்த காணிகள் விடுவிக்கப்பட்ட முறை தொடர்பில் இந்த ஊடக நிறுவனம் அறிந்து கொள்ளமல்,பிழையான செய்தியினை மக்களுக்கு வழங்குவதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என்று ஊடகவியலாளர் மகாநாட்டில் அமைச்சர் ரிஷாட் முன்வைத்த கருத்து.
நான் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக இருக்கின்றேன். இந்த மாவட்டத்தில் வாழ்ந்த தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் இடம் பெயர்வுக்குள்ளாகி எங்கு இருந்தாலும் அவர்கள் அவர்களது தாயக மண்ணில் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். ஒரு போதும் பிற மாவட்ட மக்களை இந்த மாவட்டத்தில் மீள்குடியேற அனுமதியளிக்கமாட்டேன். ஆனால் எமது அனுமதியின்றி பெரும்பான்மை மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.இதற்கென பெருமளவு காணிகள் அழிக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் இந்த ஊடகங்கள் எதையும் பேசாமல், பயங்கரவாத சொயற்பாடுகளினால் அனைத்தையும் இழந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நாட்டு வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த கிராமத்தில் மீள் குடியேற செல்கின்ற போது அதற்கு எதிராக மட்டும் செயற்படுவதில் மர்மம் உள்ளது. இதன் பின்னணியில் சில கடும் போக்கு சக்திகள் இருக்கின்றன என்பதையும் நாமறிவோம்.
ஜனநாயக நாடொன்றில் அனைத்து சமூகங்களும் தமது வாழ்வுரிமையினை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கொள்கைக்கமைய இந்த நாட்டின் அரசாங்கத்தின் அமைச்சர் என்ற வகையில் சகல சமூகங்களினதும் தேவைப்பாடுகள் தொடர்பில் நான் எனது பணியினை செய்துவருகின்றேன்.இந்த சவால்களைக் கண்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் எனது சேவையில் ஒரு போதும் பின்னடைவு ஏற்படாது.
இந்த நிலையில் அண்மையக் காலமாக சில இனவாத அமைப்புக்கள் இலங்கை முஸ்லிம்கள் மீதான கடும் போக்கு தாக்குதல்களை மேற்கொண்டன.இந்த வகையில் தற்போது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீது ஆரம்பித்துள்ள பிழையான பிரசாரங்கள் அதனோடு தொடர்புபட்டுள்ளது என்பதை அறியமுடிகின்றது.இந்த மக்களின் முஸ்லிம் பிரதி நிதியான என்னை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல் என்பதை விட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் ஒன்றாகவே இதனை பார்க்கின்றேன.
வில்பத்து சரணாலயம் அழிக்கப்படுவதாகவும் முஸ்லிம்கள் அங்கு குடியேற்றப்படுவதாகவும் சில ஊடகங்களின் துணையுடன் முஸ்லிம் இனவாதத்தை சிலர் தூண்டி விடுகின்றனர்.
எனவே வில்பத்தில் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர் என்பது தொடர்பான குற்றச்சாட்டை விசாரித்து உண்மையை வெளிப்படுத்த ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நான் கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். வில்பத்து காடு ஒரு அங்குலமேனும் அழிக்கப்படவும் இல்லை. முஸ்லிம்கள் குடியேற்றப்படவும் இல்லை. அவ்வாறு எவராவது குடியேற்றப்பட்டதை நிரூபித்து காட்டினால் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என சவால் விடுக்கின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மீண்டும் தாண்டவம் ஆடும் இந்த சர்ச்சைக்குரிய வில்பத்து விவகாரத்தினை நேரடியாக அமைச்சருடன் சென்று பார்க்க ஊடகவியலாளர் உடன்பட்டுள்ளனர்.