கோழி இறைச்சிக்கும், வெள்ளைச்சீனிக்குமான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகார சபையின் தலைவர் ஹஸித திலகரத்ன தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவுக்கான அமைச்சரவை உப குழுவின் முடிவுக்கிணங்க இந்த இரண்டு பண்டங்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஹஸித திலகரத்ன மேலும் தெரிவித்தார்.
கோழி இறைச்சி சந்தையில் போதிய அளவு இருப்பதாலும் வெள்ளைச்சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்கப்படுமென்ற வரவு செலவுத்திட்டத்தின் முன் மொழிவுகளுக்கு அமைவாகவும் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.