இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை நடைபெறும்.
இரண்டு மாகாண சபைகளுக்கும் 159 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்காக 3794 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேல் மாகாணத்தில் 40,24,614 வாக்காளர்களும், தென் மாகாணத்தில் 18,73,804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 102 பேரும் கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். இதற்காக மொத்தம் 2743 பேர் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 18 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இம்மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கட்சி ஆகியன போட்டியிடுகின்றன.
மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கம்பகா மாவட்டத்தில் 9 சுயேச்சைக் குழுக்களும் 13 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.
தெற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 53 உறுப்பினர்களும், கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். 1051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலி மாவட்டத்தில் இருந்து 14 அரசியல் கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மாத்தறை மாவட்டத்தில் 10 கட்சிகளும் 5 சுயேச்சைக் குழுக்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.
இம்முறை தேர்தலில் நாட்டில் விலைவாசி உயர்வு, போதைப்பொருள் வியாபாரம் அதிகரிப்பு, ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்க்கட்சிகள் பிரச்சாரப் பொருளாக முன்னெடுக்கும்
இலங்கையில் ஒன்பது மாகாணசபைகளுக்கும் கட்டம் கட்டமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, தெற்கு, மேற்கு மாகாண சபைகள், அம்மாகாண ஆளுனர்களின் வேண்டுகோளின் படி சனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன.
இதேவேளை கொழும்பில் வாழும் சிறுபான்மை இனத்தவர்கள் எழுச்சி பெற வேண்டும். இம்மக்களின் அனைத்து பிரச்சனைகளும் நிறைவேறி தன்மானத்துடனும் தலை நிமிர்ந்தும் வாழ வேண்டும். இதனை அடைந்து கொள்ளுவதற்கு எல்லா விதமான தியாகங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செய்ய தயாராக உள்ளது. இச்சமூகங்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் எந்தவொரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இக் கட்சியின் குரல் ஒலிக்கும் என்று அக்கட்சியின்; தேசிய தலைவரும்,அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்; உறுதியளித்துள்ளார்.
மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் முதன் முறையாக மயில் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பிலான பிரசார நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகின்றது. நேற்று அதன் தேர்தல் பிரசாரக்கூட்டம் தெகிவளை மற்றும் முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
மேற்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது மக்களின் விசுவாசத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் பாராளுமன்ன்றத்திலும், மாகாண சபைகளிலும்,உள்ளுராட்சி மன்றங்கள் என்பனவற்றிலும் அதிகமான ஆசனங்களை கொண்டுள்ளது. அத்துடன் கொழும்பு மாவடட் சிறுபான்மை மக்களின் மேம்பாடுகள் தொடர்பில் அதிக கவனம் கொண்டுள்ளது. இதுவே மக்கள் அக்கட்சியின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடும் சான்றும் இதுவாகும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி என்பதால் அரசாங்கத்திடம் சரணாகதியான அரசியலை செய்ய வேண்டும் என்றில்லை.கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகம் தொடர்பில் அரசாங்கத்திடம் பேரம் பேசும் சக்தியாக எமது கட்சி இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது.அந்த விடயங்களை கொழும்பு வாழ் மக்களும் அனுபவிப்பதற்கான சந்தர்ப்பம் எற்பட்டுள்ளது.
‘இந்த தேர்தலில் 5 ஆசனங்களை பெறுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது .தமிழ்,முஸ்லிம்,சிங்கள மக்கள் எங்களது பயணத்தை அங்கீகரித்துள்ளனர்.எமது வேட்பாளர் பட்டியிலில் சகல இனத்தவரும் போட்டியிடுகின்றார்.அப்படியானால் எமது கட்சி தொடர்பில் இனவாதம் பேசுபவர்கள் இதனை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்’; என்றும் எமது திறமையை பார்த்து வாக்களியுங்கள அமைச்சர் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு வாழ் மக்களின் பேராதரவைப் பெற்று கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் இக் கட்சி தனக்கு முழு ஆதரவினைப் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தொழில் நிமித்தம் தலைநகரில் வாழும் சிறுபான்மை இளைஞர் யுவதிகள் விடயத்தில் சமூக மேம்பாட்டுத் திட்டம் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமையை மேம்படுத்துவதற்கும் திட்டங்கள் வகுத்து வழிகாட்டலில் செயற்படுவதற்கும் இக்கட்சி உறுதி பூண்டுள்ளது.
எவ்வாறான அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் எதிரிகளின் சூழ்ச்சிகள்; மத்தியிலும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுத்து ஓரே ஒரு முஸ்லீம் இனத்ததை சேர்ந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆவார். கொழும்பு தலைநகர் வாழ் தமிழ் பேசும்; மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தி சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது அக்கட்சியின் ஆவா.